Featured post

Mrs & Mr Movie Review

 Mrs & Mr Movie Review  ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம mrs & mr ன்ற படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படத்துல Vanitha Vijayakumar...

Tuesday, 12 May 2020

இலங்கை அகதிகளுக்கு இரண்

இலங்கை அகதிகளுக்கு இரண்டாவது முறையாக 500 குடும்பங்களுக்கு உதவிய  அபி சரவணன்!

ஊரடங்கு எதிரொலியாக வறுமையில் வாடிய இலங்கை அகதிகளுக்கு இரண்டாவது முறையாக 500 குடும்பங்களுக்கு 13 வகையான காய்கறிகளை வழங்கிய நடிகர் அபி சரவணனுக்கு குவியும் பாராட்டு.




நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால், பொதுமக்கள் வீடுகளில் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மதுரை ஆனையூர் பகுதியில் இலங்கை அகதிகள் முகாமில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் அவர்கள் தங்களின் அத்தியாவசிய தேவைகளை கூட பூர்த்தி செய்ய முடியாமல் வறுமையில் வாடுவதாக நடிகர் அபி சரவணனுக்கு தகவல் கிடைத்துள்ளது.



அதனை தொடர்ந்து அபி சரவணன் அவருடைய நண்பருடன் இணைந்து முதல்கட்டமாக கடந்த வாரம் 600 குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருட்களான அரிசி பருப்பு உள்ளிட்ட வற்றை வழங்கினார்.

இந்நிலையில் இரண்டாவது முறையாக 500 குடும்பங்களுக்கு தேவையான 13 வகையான காய்கறிகள் அடங்கிய சிறப்பு தொகுப்பு இன்று வழங்கினார்.

இது மட்டுமல்லாமல் அந்த பகுதியில் உள்ள மாற்றுத்திறனாளிகள் குடும்பத்தினருக்கும் மற்றும் திருநங்கைகளுக்கும் உதவி பொருட்களை நடிகர் அபி சரவணன் வழங்கினார்.

வறுமைப் பிடியில் சிக்கித் தவிக்கும் ஏழை மக்களுக்கு தொடர்ந்து இரண்டாவது முறையாக உதவி பொருட்களை வழங்கிய அபி சரவணனை செயலை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.

No comments:

Post a Comment