Featured post

Tether’ – Acclaimed Hollywood Feature Film to Compete in World Cinema Section at 23rd Chennai International Film Festival

 *‘Tether’ – Acclaimed Hollywood Feature Film to Compete in World Cinema Section at 23rd Chennai International Film Festival* *Chennai-origi...

Friday, 3 July 2020

சுஃபியும் சுஜாதாயும்' எனக்கு

`சுஃபியும் சுஜாதாயும்' எனக்கு கிடைத்த பெருமை -  லலிதா ஷோபி

எண்ணற்ற பாடல்களில் நடன கலைஞராகவும், உதவி நடன இயக்குநராகவும் பணியாற்றி பின் தனது கடின உழைப்பால் நடன இயக்குனராக முன்னேறியவர் லலிதா ஷோபி.




திரையுலகில் முன்னனி நடன இயக்குனரான ஷோபி பவுல்ராஜ் அவர்களின் மனைவியான லலிதா ஷோபி அவர்கள், உலக நாயகன் கமல்ஹாசன் நடித்த உத்தம வில்லன், தளபதி விஜய் நடித்த பிகில், சியான் விக்ரம் நடித்த கடாரம் கொண்டான், ஜோதிகா நடித்த 36 வயதினிலே உள்ளிட்ட பல படங்களிலும் மேலும் பல பிறமொழி படங்களிலும் நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார்.

இவர் சமீபத்தில் நடன இயக்குனராக பணியாற்றிய  `சுஃபியும் சுஜாதாயும்' மலையாள திரைப்படம் இன்று அமேசான் ப்ரைமில் வெளியாகியுள்ளது. நரணிபுழா ஷானவாஸ் இயக்கியிருக்கும் இந்த படத்தில் ஜெயசூர்யா, அதிதி ராவ், தேவ் மோகன் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

`சுஃபியும் சுஜாதாயும்'  படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாகவும், இப்படத்தில் பணியாற்றியது தனக்கு மிகவும் பெருமையளிப்பதாகவும் கூறியுள்ளார் நடன இயக்குனர் லலிதா ஷோபி.

No comments:

Post a Comment