Featured post

One Man Movie Review

One Man Tamil Movie Review  ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம one man படத்தோட review வை தான் பாக்க போறோம். இந்த படத்தை இயக்கி இருக்கிறது, produce ப...

Monday, 16 March 2026

ZHEN STUDIOS பெருமையுடன் வழங்கும் “நீ Forever” மார்ச் 27 முதல் திரையில்

 *ZHEN STUDIOS பெருமையுடன் வழங்கும் “நீ Forever” மார்ச் 27 முதல் திரையில் !!*





*ZHEN STUDIOS தயாரிப்பில், GenZ தலைமுறை ரொமான்ஸ் டிராமா “நீ Forever” மார்ச் 27 ஆம் தேதி வெளியாகிறது !!*


ZHEN STUDIOS தயாரிப்பில், இன்றைய நவீன கால காதலை மையமாக வைத்து இயக்குநர் அசோக்குமார் கலைவாணி இயக்கத்தில், உருவாகியுள்ள "நீ Forever" திரைப்படம் வரும் மார்ச் 27-ஆம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகிறது. "தருணம்" என்ற வெற்றிப் படத்தைத் தொடர்ந்து, தயாரிப்பாளர்கள் புகழ் மற்றும் ஈடன் ஆகியோரின் இரண்டாவது தயாரிப்பாக இப்படம் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது.


இன்றைய GenZ  தலைமுறை உலகத்தை மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. நவீன டேட்டிங் ஆப் மூலம் இணையும் ஒரு ஜோடியும், அவர்களின் வாழ்வில் அதனால் ஏற்படும் விளைவுகளும் தான், இப்படத்தின் கதை. அனைத்து தரப்பு ரசிகர்களும் ரசிக்கும்படி, காமெடி, ரொமான்ஸ் கலந்து அழகான லவ் டிரமாவாக இப்படம் உருவாகியுள்ளது. 


நாளைய இயக்குநர் 6வது சீசன் டைட்டில் வின்னர் சுதர்ஷன் கோவிந்த் நாயகனாக நடிக்க,  மிஸ் தென்னிந்தியா 2016 பட்டம் வென்ற கேரள அறிமுக நடிகை அர்ச்சனா ரவி நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன், ஒய் ஜி மகேந்திரன், நிழல்கள் ரவி, எம்.ஜே.ஸ்ரீராம், ரெத்திகா ஸ்ரீனிவாஸ், செல்லா, பிருந்தா, டாக்டர்.வித்யா, பிரதோஷ், சினேகா சக்தி, மற்றும் பலர் இணைந்து நடித்துள்ளனர்.


இப்படம் சென்னையின்  இன்றைய பல முகங்களை காட்டும் வகையில், சென்னையின் 20  முக்கிய டிரேட் மார்க் இடங்களில் நேரடியாக படமாக்கப்பட்டுள்ளது. மேலும் பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுப்புற இடங்களிலும் படமாக்கப்பட்டுள்ளது. 


இப்படத்தின் பாடல்களை பிரபல இசை நிறுவனமான சரிகமா (SaReGaMa) கைப்பற்றியுள்ளது. மேலும், திரையரங்கு வெளியீட்டிற்குப் பிறகு இப்படத்தை ஒளிபரப்பும் டிஜிட்டல் உரிமையை முன்னணி ஓடிடி தளமான Netflix பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


தற்போது படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நிறைவடைந்து, விளம்பரப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மார்ச் 27 முதல் உங்கள் இதயங்களைக் கவர வருகிறது "நீ Forever".


தொழில்நுட்ப குழு விபரம் 


தயாரிப்பு: ஜென் ஸ்டுடியோஸ் 

தயாரிப்பாளர்: புகழ் & ஈடன் 

எழுத்து  மற்றும் இயக்கம் : அசோக்குமார் கலைவாணி 

இசை: அஸ்வின் ஹேமந்த் 

ஒளிப்பதிவு : ராஜா பட்டாச்சார்ஜி 

எடிட்டர்: எஸ்.ஏ.நாகார்ஜுன் 

கலை இயக்குனர்: வர்ணாலயா ஜெகதீசன் 

ஆடை வடிவமைப்பாளர்: சிந்துஜா அசோக் 

ஒப்பனை: கலைவாணி பாலன் 

பாடலாசிரியர்: கு.கார்த்திக் 

ஒலி வடிவமைப்பு: ஏ.சதீஷ் குமார் 

ஒலி கலவை: அரவிந்த் மேனன் 

VFX: Hocus Pocus 

DI: டி-ஸ்டுடியோஸ் போஸ்ட் 

நடனம்: விஜயராணி 

தயாரிப்பு கட்டுப்பாட்டாளர்: ராகேஷ் 

டப்பிங்: டி-ஸ்டுடியோஸ் 

போஸ்ட் விளம்பர வடிவமைப்பு: விக்ரம் சேகர்

மக்கள் தொடர்பு :  சதீஷ் (AIM)

No comments:

Post a Comment