Featured post

Puri Connects Collaborate With JB Motion Pictures For Vijay Sethupathi, Samyuktha, Puri Jagannadh, Charmme Kaur’s Most

 *Puri Connects Collaborate With JB Motion Pictures For Vijay Sethupathi, Samyuktha, Puri Jagannadh, Charmme Kaur’s Most Ambitious Pan India...

Friday, 4 September 2020

ஜீ5 க்ளப்பில் இணைந்து

ஜீ5 க்ளப்பில் இணைந்து, தொலைக்காட்சி ஒளிபரப்புக்கு முன்னரே உங்கள் அபிமான தமிழ் நிகழ்ச்சிகளைப் பாருங்கள்

ஜீ 5 க்ளப்பின் சந்தாதாரர்கள் அனைவராலும், அவர்களின் அபிமான ஜீ தமிழ் நிகழ்ச்சிகளை, தொலைக்காட்சி ஒளிபரப்புக்கு முன்னரே கண்டு ரசிக்க முடியும்.



இந்தியாவின் மிகப்பெரிய வீடியோ ஸ்ட்ரீமிங் தளமான ஜீ5, வலிமையிலும், அந்தஸ்திலும் தொடர்ந்து வளர்ச்சி கண்டு வருகிறது. இதற்கு அதிலிருக்கும் தரமான படைப்புகளே காரணம். தற்போது ஜீ5 தளத்தின் அடுத்த படி, அதன் சந்தாதாரர்களை கண்டிப்பாக உற்சாகப்படுத்தும்.

பிரபலமான இந்த ஓடிடி தளம், ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளின் புகழை வைத்து, தமிழ் சந்தையில் தனது இருப்பை இன்னும் பலப்படுத்தவுள்ளது. தற்போது ஜீ5 க்ளப் என்கிற புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது.

ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளின் பகுதிகளை, தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் முன்னரே கண்டு களிக்கும் அற்புதமான, செலவு குறைந்த வசதியை ஜீ 5 க்ளப் அதன் சந்தாதாரரகளுக்குத் தருகிறது.

இந்தச் சலுகையின் பல அம்சங்கள், இதைத் தனித்துவமானதாகவும், தவிர்க்க முடியாததாகவும் ஆக்குகிறது.

ஜீ5 க்ளப்புக்கான ஒரு வருட சந்தா தொகை வெறும் ரூ.365 மட்டுமே. இந்த மிகக் குறைந்த கட்டணத்தை செலுத்தி, ஜீ5 க்ளப்பின் சந்தாதாரர்கள், தங்களுக்குப் பிடித்த ஜீ தமிழ் நிகழ்ச்சிகளின் ப்ரீமியர் பகுதிகளை, தொலைக்காட்சி ஒளிபரப்புக்கு முன்னரே பார்த்து மகிழலாம். அதாவது தொலைக்காட்சி ஒளிபரப்புக்கு ஒரு நாள் முன்னரே, ஜீ5 க்ளப்பின் சந்தாதாரர்கள் தங்களுக்கு விருப்பமான நிகழ்ச்சிகளை பார்த்து முடித்துவிடலாம்.

ரசிகர்களைக் கண்டிப்பாக உற்சாகப்படுத்தும் இந்த அறிவிப்பு ஏற்கனவே இன்னும் சில சின்னத்திரை நட்சத்திரங்களையும் ஆச்சரியப்படுத்தி இது பற்றி பேச வைத்துள்ளது.

சமீபத்தில் ரசிகர்களுடன் ஸூம் மூலமாக நேரலையில் கலந்துரையாடிய சின்னத்திரை நட்சத்திரங்கள் விஷ்ணு விஜய், ஆயிஷா, ஸ்ரீகுமா மற்றும் நக்‌ஷத்ரா ஆகியோர், ஜீ5ன் இந்த முடிவுக்குப் புகழாரம் சூட்டியுள்ளனர்.

ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் பிரபல தொடரான சத்யாவில், ஆயிஷாவுடன் முதன்மை கதாபாத்திரமாக நடிக்கும் விஷ்ணு விஜய் பேசுகையில், "ஒரு அற்புதமான முடிவு. எனக்கு ஆர்வத்தைத் தூண்டியுள்ளது. நிகழ்ச்சியில் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பதைத் தெரிந்து கொள்ளும் ஆர்வம் பல ரசிகர்களுக்கு உண்டு. அப்படிப்பட்டவர்களுக்கு, ஒரு நாள் முன்னரே அப்படித் தெரிந்து கொள்ளும் வாய்ப்பை ஜீ5 க்ளப் தரும். கண்டிப்பாக ஜீ5 க்ளப்பை பலர் தேர்வு செய்வார்கள் என்று உறுதியுடன் கூறுகிறேன்" என்றார்.

விஷ்ணு விஜய்யுடன் நடிக்கும் ஆயிஷாவும் இதை ஆமோதிக்கிறார். "ஜீ 5ன் இந்த முடிவு, சம்பந்தப்பட்ட அனைவருக்கும் சாதகமான ஒரு சூழலை உருவாக்கும். சந்தாதாரர்கள், அவர்களுக்குப் பிடித்தமான தொடர்களின் கதையோட்டம் குறித்து, தொலைக்காட்சியில் வருவதற்கு ஒரு நாள் முன்னரே தெரிந்து கொள்ளலாம்" என்கிறார் ஆயிஷா.

இன்னொரு பிரபல தொடரான யாரடி நீ மோகினியில் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கும் நடிகர்கள் ஸ்ரீகுமாரும், நக்‌ஷத்ராவும் கூட, இதே உற்சாகத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

"ஜீ5-ன் அற்புதமான முடிவு இது. இந்த சந்தாவுக்கான கட்டணம் தான் என்னை அதிகம் ஈர்த்துள்ளது. ஒரு வருட சந்தா வெறும் ரூ.365 மட்டுமே. அதாவது ஒரு நாளைக்கு வெறும் ஒரு ரூபாய் என்கிற கணக்கு. அதன் மூலம் அத்தனை தொடர்களையும், நிகழ்ச்சிகளையும் ஒரு நாள் முன்னரே பார்க்க முடியும்" என்கிறார் ஸ்ரீகுமார்.

இந்த புதிய அறிமுகத்தை வரவேற்பதாகக் கூறும் நக்‌ஷத்ரா, "ஜீ தமிழ் நிகழ்ச்சிகளை ஒரு நாள் முன்னரே பார்க்கும் வாய்ப்பைத் தரும் இந்த ஜீ5 க்ளப் மிகவும் புதுமையான முடிவு. கண்டிப்பாக இதைப் பலர் வரவேற்பார்கள்" என்கிறார்.

வெறும் ரூ. 365/- செலுத்தி ஜீ5 க்ளப்பில் இணைந்திருங்கள். உங்கள் அபிமான ஜீ தமிழ் நிகழ்ச்சிகளை, ப்ரீமியர் பகுதிகளை தொலைக்காட்சி ஒளிபரப்புக்கு ஒரு நாள் முன்னரே கண்டு களியுங்கள்.

No comments:

Post a Comment