Featured post

When the Master Filmmaker Mani Ratnam Applauded the Young "18 Miles" Team

 *When the Master Filmmaker Mani Ratnam Applauded the Young "18 Miles" Team* Over the past few weeks, the poignant love story of 1...

Wednesday, 2 September 2020

அமேசான் ப்ரைம் வீடியோவின்

அமேசான் ப்ரைம் வீடியோவின் காமிக்ஸ்தான் ட்விட்டர் பக்கமும், பிரபல நகைச்சுவையாளர்களும் தங்களுக்குள் பரிமாறிக் கொண்ட நகைச்சுவைத் தோரணங்களை வைத்துப் பார்க்கும் போது, புதிய நிகழ்ச்சிக்கான அறிவிப்பு வரும் என்று தெரிகிறது.

ரசிகர்களுக்குப் புதிய படைப்புகளைத் தருவதில் அமேசான் ப்ரைம் வீடியோ முன்னோடியாக இருக்கிறது. சமூக வலைதளங்களில் அவர்கள் விளையாட்டுகளும் சுவாரசியமானவையே.







முன்னதாக இன்று, ப்ரைம் வீடியோ இந்தியாவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்திலிருந்து ஒரு ட்வீட் பகிரப்பட்டது. அதில் "ஹே மச்சான், ஒரு ஜோக் சொல்லட்டா. ஓப்பன் மைக்குக்கும், 2020 கிரிக்கெட் மைதானத்துக்கும் என்ன ஒற்றுமை தெரியுமா? ரெண்டுத்தையுமே நேர்ல பார்க்க ரசிகர்கள் வர மாட்டாங்க #OruJokeSollata 🤪 @evamkarthik @Comedy_Praveen #ComicstaanSemmaComedyPa"

https://twitter.com/primevideoin/status/1300672989466304512?s=21

பல நகைச்சுவையாளர்களுக்கும், ப்ரைம் வீடியோவுக்கும் இடையே நகைச்சுவையான ஒரு உரையாடல் தொடங்கியது. நகைச்சுவையாளர் கார்த்திக் குமார் இந்த ட்வீட்டுக்கு பதில் பதிவிடுகையில், "ஐயோ, நெஞ்சுலியே அடி. ஃபீலிங்ஸ் பாதிப்பு. ஆனா இந்த ஜோக்குக்கு 4/10 தான் #ComicstaanSemmaComedyPa "

https://twitter.com/evamkarthik/status/1300676104890400770?s=21

இதற்கு பதிலளித்த அமேசான்
"ஓ எனக்கு வெறும் 4 மதிப்பெண் தானா? எங்கள் ராணுவம் என்ன கொண்டு வருகிறது என்பதை காத்திருந்து பாருங்கள். எனதருமை தானா சேர்ந்த கூட்டமே, ஒரு ஜோக் சொல்லட்டாவை பயன்படுத்தி, உங்களின் சிறந்த நகைச்சுவைத் துணுக்குகளை வைத்து இந்த நடுவர்களைத் தாக்குங்கள் #OruJokeSollata " என்று குறிப்பிட்டது

https://twitter.com/primevideoin/status/1300685416656334848?s=21

முன்னதாக காமிக்ஸ்தானின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கமும், ’ஜோக்கை நிறைவு செய்யுங்கள்’ என்ற சவாலை ஆரம்பித்தது. இதில் இந்தியா முழுவதிலுமிருந்து பல நகைச்சுவையாளர்கள் சிறப்பாகப் பங்கேற்றனர்.

இவற்றை வைத்துப் பார்க்கும் போது, பிரபல நகைச்சுவை நிகழ்ச்சியான காமிக்ஸ்தான் தொடர்பான புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிடவுள்ளதாக அமேசாம் ப்ரைம் வீடியோ சூசகமாகக் குறிப்பிட்டுள்ளது.

காமிக்ஸ்தான் நிகழ்ச்சியின் தனித்துவம் மிகச் சிறப்பானது. நகைச்சுவை வகை நிகழ்ச்சிகளில் மிகப் பிரபலமான நிகழ்ச்சி இது. இந்திய அளவில் இதன் வெற்றியே அதற்கு சாட்சி.

No comments:

Post a Comment