Featured post

Puri Connects Collaborate With JB Motion Pictures For Vijay Sethupathi, Samyuktha, Puri Jagannadh, Charmme Kaur’s Most

 *Puri Connects Collaborate With JB Motion Pictures For Vijay Sethupathi, Samyuktha, Puri Jagannadh, Charmme Kaur’s Most Ambitious Pan India...

Wednesday, 2 September 2020

தமிழின் பெரும் இயக்குநர்கள்

தமிழின் பெரும் இயக்குநர்கள் இணைய, வேல்ஸ் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் “குட்டி லவ் ஸ்டோரி” ஆந்தாலஜி திரைப்படம் ! 

தமிழ் சினிமாவில் இடைவெளியே இல்லாமல் தொடர் வெற்றி படங்களை தந்து, மேஜிக் நிகழ்த்தி வருகிறது  வேல்ஸ் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம். மிகச்சிறந்த படங்களை தந்து வரும் இந்நிறுவனத்திலிருந்து பல முக்கிய படைப்புகள் ரிலீஸுக்கு தயாராக உள்ள நிலையில் தற்போது வித்தியாசமான புதிய படைப்பையும் துவங்கியிருக்கிறது. வித்தியாசமான களங்கள், புத்தம் புதிய ஐடியாக்கள், இளம் திறமைகளை தவறாது கண்டறிந்து, உலகுக்கு  அடையாளப்படுத்தும் தயாரிப்பாளர் Dr.ஐசரி K கணேஷ்  அவர்கள் தற்போது தமிழ் சினிமாவின் மிக முக்கிய ஆளுமைகள் பங்கேற்கும் ஒரு முக்கிய படைப்பை அடுத்ததாக தயாரிக்கிறார். “குட்டி லவ் ஸ்டோரி” எனும் தலைப்பிலான ஆந்தாலஜி வகை  திரைப்படத்தை இயக்குநர்கள் கௌதம் வாசுதேவ் மேனன், வெங்கட் பிரபு, விஜய் மற்றும் நலன் குமாரசாமி இணைந்து இயக்குகிறார்கள். 


வேல்ஸ் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவன தயாரிப்பாளர் Dr.ஐசரி K கணேஷ்  படம் குறித்து கூறியதாவது...

எல்லோர் மனதிலும் எக்காலத்திலும் நீங்காது இடம்பிடித்திருப்பது காதல் கதைகள் தான். அப்படியான ஒரு காதல் கதையை தயாரிக்க வேண்டுமென மிக நீண்ட காலமாக நினைத்திருந்தேன். அந்த வகையில் மிக அழகானதொரு தயாரிப்பாக இப்படைப்பு அமைந்திருப்பது மனதிற்கு பெரும் மகிழ்ச்சியை தந்திருக்கிறது. ஒரு ரசிகனாக இயக்குநர்கள் கௌதம் வாசுதேவ் மேனன், விஜய், வெங்கட் பிரபு, நலன் குமாரசாமி ஆகியோரின் படங்கள் எந்த வகை ஜானராக இருந்தாலும் அதில் வெளிப்படும் கவிதைத்தனத்தையும், அதிரவைக்கும் காட்சித்தொகுப்பையும், மிளிரும் உணர்வுக் குவியல்களையும் மனம்பொங்க ரசித்திருக்கிறேன். இவர்களுடன் இணைந்து இப்படைப்பில் பங்கேற்பதை பெரும் பாக்கியமாக கருதுகிறேன். படத்தின் இறுதி வடிவத்தை வெகு ஆவலுடன் காத்திருக்கிறேன். மிக விரைவில் படத்தில் பங்கேற்கும்  நடிகர்கள், தொழில் நுட்ப கலைஞர்கள் குழுவை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவுள்ளோம்.


தமிழின் பெரும் ஆளுமைகளான இப்பட இயக்குநர்களுடன் தனித்தனியான படைப்புகளில் பணிபுரிவீர்களா ? என்று கேட்டபோது...

இப்படத்தில் பணிபுரியும் இயக்குநர்கள் அனைவருமே தமிழ் சினிமாவை தங்கள் படைப்புகள் மூலம் ஒரு படி முன்னெடுத்து சென்றவர்கள். தங்களுக்கான தனி முத்திரையை உருவாக்கி வைத்திருப்பவர்கள் அவர்களுடன் தனியான படங்களில் பணிபுரிய வேல்ஸ் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் எப்போதும் ஆவலுடன் காத்திருக்கிறது. ஏற்கனவே இக்குழுவில் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வருண் நடிக்க “ஜோஷ்வா இமைபோல் காக்க” திரைப்படத்தை தயாரித்து வருகிறோம். இன்னும்  ஆச்சர்யப்படுத்த்தும் படைப்புகள் பற்றிய அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளிவரும் என்றார்.

தற்போது வேல்ஸ் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் “ஜோஷ்வா இமைபோல் காக்க” , “மூக்குத்தி அம்மன்” , “சுமோ” ஆகிய படங்கள் தயாரிப்பு நிலையின் வெவ்வேறு கட்டங்களில் இயங்கி வருகிறது. மேலும் சில படைப்புகள் ஆரம்ப கட்ட நிலையில் உள்ளது. வேல்ஸ் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் கடந்த வருடம் வெளியான “எல் கே ஜி”, “கோமாளி”, “பப்பி”, “எனை நோக்கி பாயும் தோட்டா” படங்கள் அனைவரது பாராட்டையும் பெற்று பெரு வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment