Featured post

Happy Birthday Prabhas! 5 Things to Know About India’s Undisputed Rebel Star

 Happy Birthday Prabhas! 5 Things to Know About India’s Undisputed Rebel Star !* Prabhas, a name that has truly taken over the nation and ca...

Thursday, 10 September 2020

திரைக்கதை மன்னன் கே பாக்யராஜ் பாணியில்

திரைக்கதை மன்னன் கே பாக்யராஜ் பாணியில் அல்வா என்ற குறும்படத்தை அவரின் உதவியாளர் ஜெ.எம் ராஜா இயக்கி இருக்கிறார்.

இந்த ஜெ.எம்.ராஜா கோவையைச் சேர்ந்தவர். நடிகராக வேண்டும் என்ற கனவில் சென்னைக்கு வந்து பல போராட்டத்திற்கு பிறகு பாக்யராஜிடம் வேலைக்குச் சேர்ந்தார். அவரின் சுவரில்லாத சித்திரம் படம் பார்த்தபிறகு தன்னை ஒரு இயக்குனராக மாற்றிக்கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்தார்.

 இயக்கம் சம்பந்தமாக தனக்கு என்ன தெரியும் என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக பல்வேறு வேலைகளை செய்து அதில் கிடைத்த பணத்தை வைத்து தன் அம்மாவின் பெயரில் ஒரு நிறுவனம் தொடங்கி அதில் பல குறும் படத்தை இயக்க ஆரம்பித்தார்.












குறும் படங்களை இயக்கிக் கொண்டே
கே பாக்யராஜ், நவீன் இவர்களிடம் உதவியாளராகவும் வேலை செய்து வந்தார்.

 இந்தியில் உருவாகிக்கொண்டிருக்கும்   காந்திஜியின் வரலாற்று படத்தில், தமிழ், தெலுங்கு மலையாளத்தின் மொழிமாற்று வசனத்தை இவர் எழுதி இருக்கிறார்.

 இவர் இயக்கிய குறும்படங்கள் ஆன. ஒரு நாள், இருவர், சொந்த பந்தம் போன்ற குறும்படங்கள் பல விருதுகளை வாங்கி இவரை நம்பிக்கையான இயக்குனராகவும் திரைத்துறையில் மாற்றியிருக்கிறது.

 இந்த லாக்டோன் நேரத்திலும் கூட இரண்டு குறும்படங்களை ஒரே நேரத்தில் இயக்கி வருகிறார் அதில் ஒன்றுதான் இந்த அல்வா.

 35 வருடமாக கல்யாணம் ஆகாமல் இருந்த ஒருவனை 22 வயதான அழகான பெண். நாயகனை காதலித்து கல்யாணம் செய்து கொள்கிறாள். இருவருக்கும் நடக்கவிருக்கும் முதலிரவில் பல பிரச்சனைகள் வர அதை மீறி எப்படி முதல் இரவு நடந்தது என்பதே குறும்படத்தின் கதை...! பல படங்களில் வில்லனாகும் கலை இயக்குநராகவும் பணியாற்றிய DRK கிரண் இந்த குறும்படத்தில் நாயகனாக நடித்திருக்கிறார் இவருடன் இணைந்து டெல்லி கணேஷ். அவரின் மகன் பாலாவும்  நடித்திருக்கிறார்கள்.

 பாக்கியராஜின் பாணியில் குடும்பங்களில் நடக்கும் சில அழகான தொல்லைகளை வைத்து முழுவதும் நகைச்சுவையாக உருவாகி இருக்கிறது. இக்குறும்படம் அடுத்த மாதம் இணையதளத்தில் ரிலீசாகி மக்களை மகிழ்விக்க வருகிறது.

இந்த லாக்டவுன் முடிந்த பிறகு பிரபல காமெடி நடிகரை வைத்து ஒரு நகைச்சுவை படம் இயக்க உள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

No comments:

Post a Comment