Featured post

பேஷன் ஸ்டுடியோஸ், ஜி ஸ்குவாட் & தி ரூட் புரொடக்‌ஷன் தயாரிப்பில், லோகேஷ்

 *பேஷன் ஸ்டுடியோஸ், ஜி ஸ்குவாட் & தி ரூட் புரொடக்‌ஷன் தயாரிப்பில், லோகேஷ் கனகராஜ் வழங்கும், இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில், நட...

Monday, 16 November 2020

சனம் ஷெட்டி பிறந்தநாளுக்கு எதிர் வினையாற்று படக்குழுவினர் கொடுத்த

 அலேக்ஸ்சனம் ஷெட்டி நடிப்பில் உருவாகி இருக்கும் எதிர் வினையாற்று படத்தின் டிரைலர் வெளியீடு

 சனம் ஷெட்டி பிறந்தநாளுக்கு எதிர் வினையாற்று படக்குழுவினர் கொடுத்த பரிசு

தமிழ் சினிமாவில் சமீபகாலமாக கிரைம் திரில்லர் வகை படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறதுஅந்த வரிசையில் முழுக்க முழுக்க வித்தியாசமான கதைக்கருவுடன் திருப்பங்கள் நிறைந்த திரைக்கதையில் ‘எதிர் வினையாற்று’ படம் உருவாகி உள்ளது.




எந்த வம்புக்கும் செல்லாமல் தான் உண்டுதன் வேலை உண்டு என்று இருக்கும் போட்டோகிராபர் ஒரு நள்ளிரவு பயணத்தில் எதிர்பாராத விதமாக ஒரு பெண்ணை காப்பாற்றுகிறான்அந்த பெண்ணுடன் சேர்ந்து அவள் கொண்டு வரும் சிக்கல்களும் அவனை பின் தொடர்கின்றனசாதாரண இளைஞனான அவன் மிகவும் அசாதாரண சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறான்அதில் இருந்து அவன் எப்படி மீண்டு வருகிறான்என்பதே எதிர் வினையாற்று படத்தின் கதை.

படத்தின் நாயகனாக அலெக்ஸ் அறிமுகமாகிறார்இந்த படத்தின் கதைதிரைக்கதைவசனம் எழுதி இயக்கி இருக்கிறார்கள் அலெக்ஸ் மற்றும் இளமைதாஸ்நாயகனான அலெக்சே படத்தை தயாரித்தும் இருக்கிறார்மருத்துவத்தில் முதுநிலை பட்டம் பெற்ற இவர்அவசர சிகிச்சை மருத்துவ நிபுணர் என்பது குறிப்பிடத்தக்கதுபடத்தின் நாயகியாக சனம் ஷெட்டியும்அசிஸ்டெண்ட் கமிஷனராக ஆர்.கே.சுரேஷும் நடித்துள்ளனர்கதைக்கு மிகவும் முக்கிய திருப்பம் ஏற்படுத்தும் கதாபாத்திரத்தில் ஆடுகளம் நரேன் நடித்துள்ளார்இரண்டாம் கதாநாயகியாக லட்சுமி பிரியா நடித்துள்ளார்மேலும் சம்பத்ராம்அனுபமா குமார்ஜீ டிவி மதன்ஸ்டில்ஸ் விஜய்யோகிராம்பிளாக் மணி ஆகியோரும் நடித்துள்ளனர்.

இந்நிலையில்நாயகி சனம் ஷெட்டியின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் டிரைலரை படக்குழுவினர் (நவம்பர் 12) இன்று வெளியிட்டுள்ளனர்இந்த டிரைலர் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

தாயின் அருள் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகி இருக்கும் இப்படத்திற்கு யுவன் கார்த்திக் இசையமைத்துள்ளார்மனோஜ் நாராயணன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.


Trailer Link : https://www.youtube.com/watch?v=eIOHe6OfBnA&feature=youtu.be 

No comments:

Post a Comment