2016-2022 வருடங்களுக்கான தமிழக அரசின் விருது பெற்ற கலைஞர்களுக்கு வாழ்த்து*
2016 முதல் 2022-ஆம் ஆண்டு வரை, ஏழு வருடங்களுக்கான, தமிழக அரசின் திரைப்பட விருதுகள் பெற்றுள்ள நடிகர், நடிகைகள், எழுத்தாளர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள்; 2014 முதல் 2022 ஆம் ஆண்டு வரையிலான தமிழக அரசின் விருது பெற்றுள்ள சின்னத்திரை நடிகர், நடிகைகள், எழுத்தாளர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பளர்கள் சங்கம் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது. குறிப்பாக தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கத்தின் உறுப்பினரான பல தயாரிப்பாளர்களின் திரைப்படங்கள் இவ்விருதுகளை பெற்றுள்ளது, நமது சங்கத்திற்கு பெருமையை தந்துள்ளது.
கலைஞர்களை கௌரவித்து, அடையாளமும், அங்கீகாரமும் வழங்கியுள்ள மாண்புமிகு தமிழக முதல்வர் திரு. M.K. ஸ்டாலின் அவர்களுக்கும், மாண்புமிகு துணை முதல்வர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும் மற்றும் தேர்வுக்குழுவினருக்கும் தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பளர்கள் சங்கம் தனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறது.
பல வருடங்களாக, இந்த விருதுகளுக்காக காத்திருந்த கலைஞர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் இந்த நற்செய்தி மிகவும் மகிழ்ச்சியை தந்துள்ளது. பிப்ரவரி 13, 2026 அன்று, விருது பெரும் அனைவருக்கும், இவ்விருதுகளை வழங்க உள்ள மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு நமது சங்கத்தின் நன்றிகள்.
நன்றியுடன்.
தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில்,
தலைவர் மற்றும் நிர்வாகிகள்.
No comments:
Post a Comment