Featured post

Mahasena Movie Review

Mahasena Movie Review  ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம mahasena படத்தோட review அ பாக்க போறோம். Vemal, Srushti Dange, Yogi Babu, Kabir Duhan Singh...

Wednesday, 4 November 2020

பத்தாண்டுகளுக்குப் பிறகு இயக்குநர் வெற்றிமாறனும் ஃபைவ் ஸ்டார்

 பத்தாண்டுகளுக்குப் பிறகு வெற்றிமாறனுடன் இணையும் ஃபைவ் ஸ்டார் கதிரேசன்!


பத்தாண்டுகளுக்குப் பிறகு இயக்குநர் வெற்றிமாறனும் ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ்  எஸ்.கதிரேசனும் இணைகிறார்கள்.


ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் 'பொல்லாதவன்' படம் மூலம் s.கதிரேசன் தயாரிப்பாளராகவும் , டைரக்டராக வெற்றிமாறனும் திரைத்துறையில் அறிமுகமானார்கள். இதை தொடர்ந்து  மீண்டும் வெற்றிமாறன் இயக்க 'ஆடுகளம்' படத்தை தயாரித்தார்,எஸ்.கதிரேசன். இப்படம்  6 தேசிய விருதுகள் உட்பட ஏராளமான விருதுகளைப் பெற்றது. மேலும் ‘நய்யாண்டி',' ஜிகர்தண்டா' போன்ற பல படங்களைத் தயாரித்தார்.


 டைரக்டர் வெற்றிமாறன், ‘கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி’ தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி, 'உதயம்', 'காக்காமுட்டை', 'விசாரணை', 'வட சென்னை' போன்ற நல்ல படங்களைத் தயாரித்தார்.'காக்கா முட்டை' தேசிய விருது உள்பட பல விருதுகளைப் பெற்றது. 'விசாரணை' தேசிய விருது பெற்றதுடன் அகடமி விருதுக்கு இந்தியாவின் சார்பில் அனுப்பப்படும் படமாகத் தேர்வானது. 



 இப்போது, ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸும் - கிராஸ் ரூட் பிலிம் கம்பெனியும்  இணைந்து ஒரு படத்தைத் தயாரிக்கின்றனர்.


இப்படம் மூலம் ஃபைவ் ஸ்டார் எஸ்.கதிரேசன் - வெற்றிமாறன் இருவரும் சுமார் பத்தாண்டுகளுக்குப் பிறகு இணைந்துள்ளார்கள். 


இப்படத்திற்கு  வெற்றிமாறன் கதை ,திரைக்கதை  எழுதுகிறார். கதாநாயகனாக சசிகுமார் நடிக்கிறார்.


படத்தின் இயக்குநர் மற்றும் நடிகர், நடிகைகள் விவரம் விரைவில் வெளிவரும்.


சினிமாவில் எதிர்பார்ப்புக்குரிய நல்ல திரைப்படங்களை கொடுத்துவரும் மூவரும் இணைந்த இக்கூட்டணியால் இந்த பிரமாண்டமான படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு ஏற்படுத்தியுள்ளது.இதன் படப்பிடிப்பு  2021-ல் பொங்கலுக்குப் பின் தொடங்க உள்ளது

No comments:

Post a Comment