Featured post

Karuppu Pulsar Tamil Movie Review

 Karuppu Pulsar Movie Review ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம  karuppu pulsar படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படத்தை இயக்கி இருக்கிறது mu...

Tuesday, 18 May 2021

கி.ரா எழுதிய நாவல் சினிமாவான கதை* இ.வி.கணேஷ்பாபு

 *கி.ரா எழுதிய நாவல் சினிமாவான கதை*

இ.வி.கணேஷ்பாபு

கரிசல் காட்டு எழுத்தாளர்

கி ராஜநாராயணன் அவர்களுடைய கதை சினிமாவாக எடுக்கப்பட்டது பற்றி நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் இயக்குனரும் நடிகருமான

 இ.வி.கணேஷ்பாபு.







அரிதார புருஷர்களையும், அவதார புருஷர்களையும் சினிமாவிலும், இலக்கியத்திலும் பெரும்பாலும் பார்த்துக்கொண்டிருந்த நாம் கிராமத்து எளிய மனிதர்களை கி.ராவின் எழுத்துக்களில்தான் முதன்முதலாக பார்க்கத் தொடங்கினோம். அவருடைய மறைவு இலக்கிய உலகத்திற்கு ஒரு பேரிழப்பு.


தமிழ் சினிமாவில் பல கிராமத்து திரைபபடங்களில்

 கி.ராஜநாராயணன் கதையின் பாதிப்பு நிச்சயமாக இருந்து வந்திருக்கிறது. அவர் எழுதிய *கிடை* என்ற நாவலை நேரடியாக உரிமம் பெற்று அம்ஷன்குமார் *ஒருத்தி* என்ற பெயரில் திரைப்படமாக இயக்கினார். இந்தியன் பனோரமா உட்பட 13 சர்வதேச திரைப்பட விழாக்களில் அந்த திரைப்படம் திரையிடப்பட்டு பல்வேறு சர்வதேச விருதுகளையும் பெற்றது. அதில் நான் கதாநாயகனாக நடித்த அனுபவம் என்றும் மறக்க முடியாது.


இவ்வாறு இ.வி.கணேஷ்பாபு கூறினார்

No comments:

Post a Comment