Featured post

Karuppu Pulsar Tamil Movie Review

 Karuppu Pulsar Movie Review ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம  karuppu pulsar படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படத்தை இயக்கி இருக்கிறது mu...

Thursday, 20 May 2021

வேலம்மாள் கல்வி அறக்கட்டளை சார்பாக முதலமைச்சர் பொது

 வேலம்மாள் கல்வி அறக்கட்டளை சார்பாக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூபாய் ஒரு கோடியே இருபத்தைந்து இலட்சம்  வழங்கப்பட்டது!*


வேலம்மாள் கல்வி அறக்கட்டளையில் பணிபுரியும் அனைத்து  ஊழியர்கள் சார்பாக அறக்கட்டளையின்  தலைவர் திரு. எம். வி. முத்துராமலிங்கம் அவர்களும், அறக்கட்டளையின் இயக்குநர்கள் திரு. எம்.வி. ஸ்ரீராம், மற்றும் திரு. எம்.வி. விவேக் ஆனந்த் ஆகியோர்களும் இணைந்து, முதலமைச்சரின் பொது நிவாரண  நிதிக்கு ரூபாய் ஒரு கோடியே இருபத்தைந்து இலட்சத்திற்கான காசோலையைத் தமிழக முதலமைச்சர் மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்களிடம், 2021 மே 19 அன்று தலைமைச் செயலகத்திற்கு நேரில் சென்று  வழங்கினார்கள். 

தொற்றுநோயை எதிர்த்துத் திறம்பட போராடும் இந்த நெருக்கடியான சூழ்நிலையில், தமிழக முதலமைச்சருடன் இணைந்து செயல்பட  வேலம்மாள் கல்வி அறக்கட்டளை இந்த முயற்சியை எடுத்திருப்பது பாராட்டுக்குரியது.

No comments:

Post a Comment