Featured post

Mark Your Calendars: Prabhas starrer 'Kalki

 *Mark Your Calendars: Prabhas starrer 'Kalki 2898 AD' to hit theatres on 27th June 2024* This year's highly-anticipated sci-fi ...

Tuesday 11 January 2022

எஸ்.கே.முரளீதரன் இயக்கத்தில் பஞ்சாயத்து பரமேஸ்வரியாக

 எஸ்.கே.முரளீதரன் இயக்கத்தில் பஞ்சாயத்து பரமேஸ்வரியாக வனிதா விஜயகுமார் நடிக்கும் "தில்லு இருந்தா போராடு"

பட்டப்படிப்பு படித்துள்ள கிராமத்தை சேர்ந்த பாண்டிக்கு எங்கு கேட்டும் வேலை கிடைக்கவில்லை. அவனுக்கு பிரியா என்ற காதலி கிடைக்கிறாள். அதனால் பல அவமானங்களை சுமக்கும் பாண்டி குடிக்கு அடிமையாகிறான். இதை பார்க்கும் அவனது தாய் அவனை வீட்டைவிட்டு விரட்டுகிறாள்.அதன்பிறகு அவனது நடவடிக்கைகள் முற்றிலும் மாறுபடுகிறது. பஞ்சாயத்து பரமேஸ்வரியின் உதவி கிடைக்கிறது அதனால் அவனுக்கு ஏற்படும் விளைவுகளை விறுவிறுப்பான திரைக்கதையில் உருவாகும் படம்தான் " தில்லு இருந்தா போராடு."



கார்த்திக்தாஸ், அனுகிருஷ்ணா ஜோடியுடன் யோகிபாபு, மனோபாலா, வனிதா விஜயகுமார், எம்.எஸ்.பாஸ்கர், தென்னவன், மதுமிதா, கே.பி.சுமன், மீராகிருஷ்ணன், கிரேன் மனோகர். சாம்ஸ், ரிஷா, சேஷூ லொள்ளுசபா மனோகர், இவர்களுடன் ராஜசிம்மா, ராம்சந்திரன், சக்திவேல், லோகேஷ், பாலா, சாமிராஜ், ஸ்ரீநிக்கி, மதுரா, ஜட்டி ஜகன், ஆர்.பி.பாலா, மன்னாரு.டி.ஆர்.கோபி ஆகியோரும் நடித்துள்ளனர்.

விஜய் திருமூலம் ஒளிப்பதிவையும், ஜி.சாய்தர்ஷன் இசையையும், எஸ்.கே.முரளீதரன், ஸ்ரீவிஜய், சதீஸ்காந்த் மூவரும் பாடல்களையும், வெங்கட் தயாரிப்பு மேற்பார்வையையும், மின்னல் முருகன் சண்டை பயிற்சியையும், எடிசன், ஜாய் மதி, சாய் கேசவ் மூவரும் நடன பயிற்சியையும், கவனித்துள்ளனர்.

எம்.குப்பன், ஜி.ஹரிபாபு, என்.சாய்பாபா மூவரும் இணை தயாரிப்பையும், ஆர்.பி.பாலா, எஸ்.கே.முரளிதரன், எம்.மணிவண்ணன் மூவரும்  நிர்வாக தயாரிப்பு பொறுப்பையும் ஏற்றுள்ளனர்.

கே.பி. புரொடக்சன் சார்பில் கே.பி.பிரசாத் தயாரித்துள்ள இந்த படத்திற்கு கே. பி. சுமன் ஆலோசகராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பல முன்னனி இயக்குனர்களிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ள எஸ்.கே. முரளீதரன் "தில்லு இருந்தா போராடு" படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குனராக  அறிமுகமாகிறார்.

































No comments:

Post a Comment