Featured post

ParAsakthi Movie Review

ParAsakthi Tamil Movie Review  *ParAsakthi Movie Rating: 4.5//5* ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம parasakthi படத்தோட review அ தான் பாக்க போறோம். இ...

Thursday, 6 January 2022

வேலம்மாள் பள்ளியில் மாணவர்களுக்கான தடுப்பூசி முகாம் நடைபெற்றது

வேலம்மாள் பள்ளியில் மாணவர்களுக்கான தடுப்பூசி முகாம் நடைபெற்றது

கோவிட் மற்றும் ஓமிக்ரான் வகை நோய்களைக் கட்டுப்படுத்த, வேலம்மாள் மையப்பள்ளி வளாகத்தில்  10 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்காக பிரம்மாண்டமான தடுப்பூசி இயக்கத்தை ஜனவரி 4, 2022 அன்று ஏற்பாடு செய்திருந்தது.

இந்த மாபெரும் முகாமில் சுமார் 4000 மாணவர்கள் கலந்து கொண்டனர். பெருநகர சென்னை மாநகராட்சியுடன் இணைந்து வேலம்மாள் பிரதான வளாகம் ஒரு உன்னத நோக்கத்திற்காக இந்த மாபெரும் நிகழ்வினை ஏற்பாடு செய்தது.


தொற்றுநோய்கள் மிகுந்த இந்தக் காலகட்டத்தின் போது இதுபோன்ற தடுப்பூசி முகாமை நடத்திய நிர்வாகத்திற்குப் பெற்றோர்கள் நன்றி தெரிவித்தனர்.

வேலம்மாள் கல்வி அறக்கட்டளையின்  தாளாளர் திரு.
எம்.வி.எம். வேல்மோகன்  அவர்கள் வருகை தந்திருந்து ஏற்பாடு செய்த இந்தத் தடுப்பூசி இயக்கத்தை அம்பத்தூர் தொகுதி எம்.எல்.ஏ ஜோசப் சாமுவேல் தொடங்கி வைத்தார்.


 அம்பத்தூர் மாவட்ட சுகாதார அலுவலர் திருமதி ஷீலா தலைமை வகித்தார்.
சுகாதார அதிகாரிகள் மன்சூர் மற்றும் சஹானா இத்தடுப்பூசி முகாமில்  உடனிருந்தனர்.

No comments:

Post a Comment