Featured post

Mark Your Calendars: Prabhas starrer 'Kalki

 *Mark Your Calendars: Prabhas starrer 'Kalki 2898 AD' to hit theatres on 27th June 2024* This year's highly-anticipated sci-fi ...

Saturday 8 January 2022

டாக்டர் விஷ்ணு பிரபு - பப்புவா நியூ கினியா

 டாக்டர் விஷ்ணு பிரபு - பப்புவா நியூ கினியா நாட்டின் இந்தியாவிற்கான வர்த்தக ஆணையராக தமிழக அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன்,  செஞ்சி மஸ்தான் மற்றும்  பப்புவா நியூ  கினியா  நாட்டின் உயர் ஆணையர் பவுலிஸ் கோர்னி முன்னிலையில்  நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய பசிபிக் தீவுகள் நாடுகளின் வர்த்தக கவுன்சில் கூட்டம் ஆழ்வார்பேட்டையில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற்றது

இந்நிகழ்வில் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், வெளிநாடு வாழ் தமிழர் நலன் மற்றும் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் உள்ளிட்டோரும் மேலும் பப்புவா நியூ   கினியாவுக்கான வர்த்தக ஆணையர் 
திமுகாவைச் சேர்ந்த டாக்டர் விஷ்ணு பிரபு, இந்தியாவிற்கான பப்புவா நியூ கினியாவின் உயர் ஆணையர் பாலியாஸ் கோர்னி, வெளியுறவு அமைச்சக செயலாளர் டாக்டர் வெங்கடாசலம் முருகன்,டாக்டர்.ஆசிஃப் இக்பால், திரு.சுஜாய் மைத்ரா, டாக்டர்.ஆர்.எல்.கண்ணன்  ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியின்போது பேசிய  வெளிநாடு வாழ் தமிழர் நலன் மற்றும் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான்:-  வெளிநாடு வாழ் தமிழர்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க வருகை தர வேண்டும்.இதற்கான முன்னெடுப்பில் தமிழக முதல்வர் சிறப்பான முன்னெடுப்புகளை முன்னெடுத்து வருகிறார் தமிழகத்தில் தொழில் தொடங்க வரும் வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு தொழில் தொடங்குவதற்கான இடங்கள் வழங்கப்படும்.தமிழகம் பொருளாதார ரீதியாக வளர்வதற்கு வெளிநாடுவாழ் தமிழர்களின் பங்கு அவசியம் என்றார்

நிகழ்ச்சியில் பேசிய தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்:- தற்போதைய காலத்தில் உலகளாவிய வர்த்தக உறவு என்பது அவசியமானதாக உள்ளது.தற்போது இந்தியா மற்றும் பப்புவா நியூ கினியா இடையே வர்த்தக உறவு உருவாவது மகிழ்ச்சியளிக்கக் கூடியதாக உள்ளது வர்த்தக உறவு வளர்வதற்கு தமிழக நிதி அமைச்சர் என்கிற முறையில் தன்னால் முடிந்த உதவிகளை செய்வேன் என கூறினார்.
















செய்தியாளரிடம் பேசிய பப்புவா நியூ கினியா நாட்டிற்கான இந்திய வர்த்தக ஆணையர், 
திமுகாவைச் சேர்ந்த டாக்டர் விஷ்ணு பிரபு பப்புவா நியூ கினியா நாட்டிற்கு வர்த்தக ஆணையராக நியமனம் செய்த பப்புவா நியூ கினியா நாட்டின் உயர் ஆணையர்  பாலியாஸ் கோர்னி அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் இந்தியா மற்றும் பப்புவா நியூ கினியா நாட்டிற்கு இடையே வர்த்தக உறவு மேம்படுவதற்கு தன்னால் முடிந்த முன்னெடுப்புகளை மேற்கொள்வேன் பப்புவா நியூகினியா நாட்டில் ஏராளமான தங்கம் மற்றும் இயற்கை வளங்கள் உள்ளன அவைகளை இந்தியாவில் வர்த்தகம் செய்வதற்கு முயற்சிகளை மேற்கொள்வேன்.இந்தியாவின் பொருட்களையும் பப்புவா நியூ கினியா நாட்டில் பிரபலப்படுத்த முயற்சி மேற்கொள்வேன் எனக் கூறினார்.

பப்புவா நியூ கினியா மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள GD CAFE PVT.LTD இன் தயாரிப்புகளை சந்தைப்படுத்தவும் விநியோகம் மற்றும் விற்பனை செய்ய ADZGURU இதன் மூலம் அங்கீகரிக்கப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MOU) பப்புவா நியூ கினியா மற்றும் தமிழக அமைச்சர்கள் முன்னிலையில் கையெழுத்திடப்பட்டது

No comments:

Post a Comment