Featured post

Shah Rukh Khan shot a special song of Dunki in UAE! Deets inside!

 *Shah Rukh Khan shot a special song of Dunki in UAE! Deets inside!* The release of Dunki Drop 4 has set the excitement at its peak to witne...

Friday 21 January 2022

வேலம்மாள் பள்ளியின் இளம் எழுத்தாளர் தனது முதல்

                         வேலம்மாள் பள்ளியின் இளம் எழுத்தாளர் தனது முதல்                                                                                         புத்தகத்தை வெளியிட்டார்


ஆவடி அடுத்த பருத்திப்பட்டு வேலம்மாள் வித்யாலயா பள்ளியின் 3 ஆம் வகுப்பு மாணவி சு.பிரவந்திகா மெய்நிகர் தளத்தில் சிறகடிக்கும் பட்டாம் பூச்சி என்ற தனது புத்தகத்தின் முதல் பதிப்பை வெளியிட்டார்.

கனடா தமிழ் தொலைக்காட்சி நிறுவனம், சென்னை மற்றும் அமெரிக்கா லாலிபாப் சிறுவர் உலகம், அன்பின் சங்கமம் சிறுவர் உலகம் ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்திய விழாவில் வேலம்மாள் வித்யாலயா பள்ளியின் 3 ஆம் வகுப்பு மாணவி சு.பிரவந்திகாவின் சிறகடிக்கும் பட்டாம்பூச்சி என்ற நூல் வெளியிடப்பட்டது. மூத்த பத்திரிகையாளர் குமரேசன் புத்தகத்தை வெளியிட


கதைசொல்பவர் மற்றும் சிறார் எழுத்தாளர் சரிதா ஜோ புத்தகத்தைப் பெற்றுக்கொண்டார். இப்புத்தகம் இளம்  எழுத்தாளரின்  எண்ணங்களைத் தெளிவாகப்  பிரதிபலித்துள்ளதுடன் இரசனைக்குரியதாகவும் அமைந்துள்ளது.

தன்னுடன் பயிலும் சக மாணவ, மாணவிகளுக்கு முன் உதாரணமாகத் திகழும் இவரது சாதனையை வேலம்மாள் கல்வி அறக்கட்டளையின் தாளாளர் எம்.வி.எம்.வேல்மோகன் மற்றும் முதல்வர் தலைமையாசிரியர்கள் ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.


No comments:

Post a Comment