Featured post

Ulaganayagan Kamal Haasan Watches ‘Bethlehem Kudumba Unit’ and Appreciates the Team in Chennai

 Ulaganayagan Kamal Haasan Watches ‘Bethlehem Kudumba Unit’ and Appreciates the Team in Chennai* The team of ‘Bethlehem Kudumba Unit’ recent...

Saturday, 8 August 2026

10 ஆண்டுகளின் வெற்றிப் பயணத்தை கொண்டாடும் பிக்பாஸ் தமிழ் சீசன் 10;

 *10 ஆண்டுகளின் வெற்றிப் பயணத்தை கொண்டாடும் பிக்பாஸ் தமிழ் சீசன் 10; ஆண்டின் மிகப்பெரிய பொழுதுபோக்கு திருவிழாவிற்கு ரசிகர்களை வரவேற்கும் விஜய் சேதுபதி*

 




சென்னை, ஆகஸ்ட் 07,2026: பிக்பாஸ் தமிழ் 10 ஆண்டுகள் நிறைவை கொண்டாடும் மைல்கல் சீசனான பிக்பாஸ் தமிழ் சீசன் 10 புதிய லாஞ்ச் புரோமோவை ஸ்டார் விஜய் மற்றும் ஜியோஹாட்ஸ்டார் வெளியிட்டுள்ளன.


கடந்த 10 ஆண்டுகளில், பிக்பாஸ் தமிழ் ஒரு ரியாலிட்டி நிகழ்ச்சியைத் தாண்டி, தமிழ்நாட்டின் மிகப்பெரிய பொழுதுபோக்கு அனுபவமாக வளர்ந்துள்ளது. ஆண்டுதோறும் 100 நாட்கள் குடும்பங்களை ஒன்றிணைத்து, தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் தளங்களில் பரவலான உரையாடல்களை உருவாக்கி, ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த ஒரு கலாச்சார நிகழ்வாக இது மாறியுள்ளது.


10வது சீசனை முன்னிட்டு, கடந்த ஒரு தசாப்தமாக பிக்பாஸை வெற்றிப் பாதையில் வழிநடத்திய ரசிகர்களுக்கு “பத்தாண்டு வாழ்த்துகள்” தெரிவிக்கப்படுகிறது. 


அவர்களுக்காகவே உருவான ‘கார்னிவிழா’, பிக்பாஸ் ரசிகர்கள் விரும்பும் அனைத்து அம்சங்களையும் ஒருங்கிணைக்கும் பிரம்மாண்ட பொழுதுபோக்கு கொண்டாட்டமாக அமைகிறது.


இந்த லாஞ்ச் புரோமோ, பிக்பாஸ் ஒரு நிகழ்ச்சி மட்டுமல்ல, ரசிகர்களின் அன்றாட வாழ்க்கையின் ஓர் அங்கமாக மாறியிருப்பதை வெளிப்படுத்துகிறது. 10வது சீசனின் பிரம்மாண்ட கொண்டாட்டமான ‘கார்னிவிழா’விற்கு ரசிகர்களை விஜய் சேதுபதி அன்புடன் வரவேற்கிறார்.


‘‘இங்க ஒன்னு நினைச்சா... பத்து நடக்கும்’’

‘இங்க ஒன்னு நினைச்சா... பத்து நடக்கும்’ என்ற வரி, பிக்பாஸ் வீட்டின் கணிக்க முடியாத பரபரப்பையும் எதிர்பாராத திருப்பங்களையும் பிரதிபலிக்கிறது. மைல்கல் 10வது சீசன், ‘கார்னிவிழா’ கொண்டாட்டம் மற்றும் 100 நாட்கள் இடைவிடாத பொழுதுபோக்குடன், பிக்பாஸ் தமிழ் சீசன் 10 இதுவரை இல்லாத அளவிற்கு பிரம்மாண்டமான சீசனாக அமையவுள்ளது.

இந்த பிரம்மாண்ட கொண்டாட்டம் விரைவில், ஸ்டார் விஜய் மற்றும் ஜியோஹாட்ஸ்டாரில் பிரத்யேகமாக தொடங்கவுள்ளது.


ஜியோஹாட்ஸ்டார் பற்றி

ஜியோசினிமா மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் இணைந்து உருவான ஜியோஹாட்ஸ்டார், இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளங்களில் ஒன்றாகும். பல்வேறு வகையான கண்டென்ட், புதுமையான தொழில்நுட்பம் மற்றும் அனைவருக்கும் எளிதில் அணுகக்கூடிய வசதிகளுடன், இந்திய பார்வையாளர்களின் பொழுதுபோக்கு அனுபவத்தை மேலும் மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

No comments:

Post a Comment