Featured post

Independent Music Artist Paal Dabba’s New Music Video Album ‘Aeroplane’ Released*

 Independent Music Artist Paal Dabba’s New Music Video Album ‘Aeroplane’ Released* *Think Indie Releases Paal Dabba’s ‘Aeroplane’ Music Vide...

Thursday, 29 October 2026

இசை கலைஞர் பால் டப்பாவின் புதிய மியூசிக் வீடியோ ஆல்பம் 'ஏரோபிளேன்' வெளியீடு

*இசை கலைஞர் பால் டப்பாவின் புதிய மியூசிக் வீடியோ ஆல்பம் 'ஏரோபிளேன்' வெளியீடு*


*திங்க் இன்டி வெளியிட்ட பால் டப்பாவின் 'ஏரோபிளேன்' மியூசிக் வீடியோ ஆல்பம்*


ராப் இசை கலைஞர் - பாடகர் - பாடலாசிரியர் - நடிகர் - என பன்முக ஆளுமை திறன் படைத்த பால் டப்பா சுயாதீன இசை உலகில் மிக முன்னணி இசைக்கலைஞராக அசைக்க முடியாத இடத்திற்கு உயர்ந்து வருகிறார். இவருடைய மியூசிக் ஆல்பம் வெளியானவுடன் பெரும் கணக்கிலான டிஜிட்டல் பார்வைகளை பெற்று இணையத்தை அதிர வைத்து வருகிறது. இந்நிலையில் இவர் பாடல் எழுதி, பாடி ,நடித்த 'ஏரோபிளேன்' எனும் புதிய மியூசிக் வீடியோ ஆல்பம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை  திங்க் இன்டி மியூசிக் நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. 


'ஏரோபிளேன்' மியூசிக் வீடியோ ஆல்பத்தில் பால் டப்பா மற்றும் நடிகை அனன்யா ராம் பிரசாத் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இதனை இயக்குநர் ராகுல் அசோக் குமார் இயக்க, இசையமைப்பாளர் அடியேல் மஸார் ( Adiel Massar) இசையமைக்க.., பிரகதீஷ் பிரபு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இந்த பாடலை இந்திய சுயாதீன இசைக் கலைஞருக்கான திங்க் இன்டி மியூசிக் நிறுவனம் வெளியிடப்பட்டிருக்கிறது. 


'காதல் வேணாம்னு சொன்னா காதல் பண்ண சொன்னாயே..'எனத் தொடங்கும் இந்தப் பாடலை பாடலாசிரியர் பால் டப்பா எழுதி, பாடியிருக்கிறார். இந்தப் பாடலில் ஆகாய விமானத்தின் பயணிகளாக பிரேக்கப்பிற்குப் பிறகு காதலர்கள் மீண்டும் சந்திக்கிறார்கள். அவர்களின் காதல்... நினைவலைகளாக இசையுடன் தொடர்ந்து பயணிக்கிறது. இந்த பாடலில் பால் டப்பா மற்றும் அனன்யா ராம் பிரசாத்தின் கெமிஸ்ட்ரி.. இசையுடன் இணைந்து ரசிக்கும் வகையில் உருவாகி இருப்பதால் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. 


இது ஒரு லவ் பெயிலியர் சாங் என்பதும்.. அதிலும் பிரேக்கப்பிற்குப் பிறகான சந்திப்பு குறித்த பால் டப்பாவின் பாடல் என்பதால்.. இந்தப் பாடல் அனைத்து சிங்கிள் பாய்ஸ்களின் ஸ்டேட்டஸாக மாறி உள்ளது. பாடலாசிரியர் பால் டப்பாவில் வரிகள் அனைத்தும்.. பிரேக்கப் ஆன நண்பர்களுக்கு ஹீலிங் கொடுக்கும் பாடலாக இருப்பதால், இணையவாசிகள் கொண்டாடி வருகிறார்கள்.



*




https://youtu.be/LT9kzvUfvsk?si=NtNoYgKhypv_5OJ8

No comments:

Post a Comment