Featured post

15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணையும் ஷாருக்கான் – கரீனா கபூர் கான்… ‘கிங்’ படத்தின் ‘டாடி கூல்’ பாடல் வெளியீடு!*

 *15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணையும் ஷாருக்கான் – கரீனா கபூர் கான்… ‘கிங்’ படத்தின் ‘டாடி கூல்’ பாடல் வெளியீடு!* *மெட்டாவின் ‘ஹவுஸ் ஆஃ...

Saturday, 28 November 2026

பேசில் ஜோசப்- LK அக்ஷய் குமார் இணைந்து மிரட்டும் 'ராவடி- Raawadi ' படத்தின் குஜிலி மஸ்து இரண்டாம் பாடல் வெளியீடு*

 *பேசில் ஜோசப்- LK அக்ஷய்   குமார் இணைந்து மிரட்டும் 'ராவடி- Raawadi ' படத்தின் குஜிலி மஸ்து இரண்டாம் பாடல் வெளியீடு*



*டிசம்பரில் வெளியாகும் பேசில் ஜோசப் - LK அக்ஷய் குமார் கூட்டணியில் 'ராவடி- Raawadi ' படத்தின் இரண்டாவது பாடலான 'குஜிலி மஸ்து - Gujili Masthu' மியூசிக் வீடியோ வெளியீடு*


தென்னிந்திய திரையுலகில் முன்னணி நட்சத்திர நடிகரான பேசில் ஜோசப் - 'சிறை' படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் லேட்டஸ்ட் வரவான நடிகர் LK- அக்ஷய் குமார் ஆகிய இருவரும் முதன் முதலாக இணைந்து நடித்திருக்கும் 'ராவடி- Raawadi ' திரைப்படத்தில் இடம்பெற்ற 'குஜிலி மஸ்து- Gujili Masthu' எனத் தொடங்கும் இரண்டாவது பாடலும், பாடலுக்கான வீடியோவும் சென்னை கத்திப்பாரா அர்பன் ஸ்கொயரில் ராவடி படக்குழு வெளியிட்டனர். 


அறிமுக இயக்குநர் விக்னேஷ் வடிவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள ராவடி -  திரைப்படத்தில் பேசில் ஜோசப், LK அக்ஷய் குமார், ஜான் விஜய், ஜாபர் சாதிக், நோபல் கே. ஜேம்ஸ், ஷாரிக் ஹாசன், அருணாச்சலேஸ்வரன். PA, சத்யன், ஐஸ்வர்யா சர்மா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். லியோன் பிரிட்டோ ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜென் மார்ட்டின் இசையமைத்திருக்கிறார். கமர்ஷியல் யூத்ஃபுல் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ். எஸ். லலித் குமார் தயாரித்திருக்கிறார். இந்த திரைப்படத்திற்கு எல். கே.  விஷ்ணுகுமார் இணை தயாரிப்பாளராக பொறுப்பேற்றிருக்கிறார். 


எதிர்வரும் டிசம்பர் மாதம் 24 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இத்திரைப்படத்தில் இடம் பெற்ற 'அட்ரா பரமா..' எனும் முதல் பாடல் வெளியாகி, மில்லியன் கணக்கிலான டிஜிட்டல் பார்வைகளை பெற்று சாதனை படைத்தது. ரசிகர்களின் ஆதரவை தொடர்ந்து உற்சாகப்படுத்த படக் குழுவினர் இதில் இடம் பிடித்திருக்கும் 'குஜிலி மஸ்து - Gujili Masthu' எனும் இரண்டாவது பாடலையும், பாடலுக்கான வீடியோவையும் வெளியிட்டுள்ளனர். இந்தப் பாடலை பாடலாசிரியர்கள் செம்வி மற்றும் ராம் சே ஆகியோர் இணைந்து  எழுத, பின்னணி பாடகர்கள் அந்தோணி தாசன் மற்றும் ஜென் மார்ட்டின் ஆகியோர் இணைந்து பாடியிருக்கிறார்கள். துள்ளல் இசை பாணியில் உருவாகி இருக்கும் இந்த பாடல் இளம் தலைமுறையினரை உற்சாகப்படுத்தி நடனமாடத் தூண்டுவதால்... இதற்கான வரவேற்பும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 


'வணக்கம்! எவ்ரிபடி...!குஜிலி மஸ்து...! எல்லாரும் மஜா பண்ண ரெடியா இருக்கீங்களா..! -  'அராஜகம் பத்தல பத்தல.. - பப்பரப்பப்பா குஜிலி மஸ்து..- போன்ற கேட்போரை ஈர்க்கும் பாடல் வரிகள்- திரையரங்கப்ப் பின்னணி- திரையில் பேசில் ஜோசப்பின் ஸ்டைலான லுக் -  ஹிட்டாகும் வகையிலான 'ஹூக் ஸ்டெப்ஸ்'- நடன கலைஞர்கள்-  திரையரங்கில் பிடித்த நடிகரின் திரைப்படத்தை பார்த்து ரசித்துக் கொண்டாடுவது- நண்பர்களுக்கு இடையேயான நட்பு சார்ந்த மாண்டேஜஸ் - கல்லூரி ஹாஸ்டலில் சீனியர் & ஜூனியர்  ரிலேஷன்ஷிப் - என பாடல் முழுவதும் இளமை கொடிகட்டி பறப்பதால்... பாடலை ரசிகர்கள் இணையத்தில் கொண்டாடி- நடனமாடி- வைரலாக்கி- வருகிறார்கள்.


https://www.youtube.com/watch?v=5Je6-r92hNg

No comments:

Post a Comment