Featured post

Scroll’ Nominated for ICFT-UNESCO Gandhi Medal at the 57th International Film Festival of India, Goa

 Scroll’ Nominated for  ICFT-UNESCO Gandhi Medal  at the 57th International Film Festival of India, Goa ‘Scroll’, produced under the banner ...

Wednesday, 17 January 2024

விஜயகாந்த் இறந்ததால், மன்சூர் அலிகானின் "சரக்கு" ரீ ரிலீஸ்

 விஜயகாந்த் இறந்ததால், மன்சூர் அலிகானின் "சரக்கு" ரீ ரிலீஸ் ஆகிறது!






மன்சூர் அலிகான், அதிக நடிகர் பட்டாளத்துடன் எடுக்கப்பட்ட திரைப்படம் "சரக்கு"!


வெளியான அன்று கேப்டன் விஜயகாந்த் இறந்து விட்டதால் மக்கள் அனைவரும் தொலைக்காட்சியின் முன்பு இருந்து விட்டனர். அதனால் படக்குழு படத்தை நிறுத்தி விட்டனர். இப்போது படத்தை உரிய நேரம் பார்த்து ரீ ரிலீஸ் செய்ய உள்ளது. மன்சூர் அலிகான், யோகிபாபு, கிங்ஸ்லி, மொட்டை ராஜேந்திரன், கே.எஸ்.ரவிகுமார், பாக்யராஜ் என அனைவரின் நடிப்பும் சிறந்த முறையில் வரவேற்பு பெற்றதால், வெளிநாடு உள்ளிட்ட அனைத்து திரையரங்குகளிலும் ஒரே நேரத்தில் வெளியிட திட்டமிடுகிறது படக்குழு!


@GovindarajPro

காதலிலும் மாற்றங்கள் செய்யும்

 *காதலிலும் மாற்றங்கள் செய்யும் அரசியல்!*






சினிமாக்காரன் தயாரிப்பு நிறுவனம் சார்பாக, எஸ்.வினோத் குமார் வழங்கும், 'சேத்துமான்' படப்புகழ் தமிழ் இயக்கும் 

'கனா' புகழ் தர்ஷன்- 'ஹிருதயம்' தர்ஷனா ராஜேந்திரன் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.


'சேத்துமான்' என்ற இயல்பான படம் மூலம் ரசிகர்களின் மனதைக் கவர்ந்தவர் இயக்குநர் தமிழ். இப்போது அவர் பெருமாள் முருகன் கதை வசனத்தில் செ. வினோத்குமார் தயாரிப்பில் தனது மூன்றாவது படத்தை இயக்கியுள்ளார்.  லவ் ஃபேமிலி டிராமா ஜானரில் உருவாகியுள்ள இந்தக் கதையில் உண்மையான காதல் என்றால் என்ன என்பதும் அதனைச் சுற்றியுள்ள அரசியலும் இந்தப்  படத்தில் பேசப்பட்டுள்ளது. 


"நம் நாட்டில் எங்கும் அரசியல் , எதிலும் அரசியல். அதிகார அரசியல் மட்டுமின்றி ,சாமானிய அரசியல் கூட இந்த சமூகத்தில் வேரூன்றி இருக்கிறது. இரு இதயங்கள் இணையும் காதலில் அரசியல் செய்யும் மாற்றங்களை வெகு விமரிசையாக சித்தரிக்கும் படம் இது"

என்கிறார் இயக்குநர் தமிழ்.  'ஹிருதயம்', 'ஜெய ஜெய ஜெய ஜெய ஹே' படப்புகழ் தர்ஷனா ராஜேந்திரன், 'கனா' புகழ் தர்ஷன் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன் நடிகர்கள் ஆதிரா, ஆதித்யா கதிர் மற்றும் பல புதுமுக நடிகர்களும் நடித்துள்ளனர்.   


இரவு- பகல் என ஒரேக்கட்டத்தில் இதன் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது. படப்பிடிப்பு மைசூர், பெங்களூர், மாதேஸ்வரன் மலைப்பகுதிகள், தர்மபுரி, மேட்டூர் ஆகிய சுற்றுவட்டாரப்பகுதிகளில் நடைபெற்றது. படத்திற்கு தீபக் ஒளிப்பதிவு செய்திருக்க, பிந்துமாலினி- வேதாந்த் பரத்வாஜ் இசையமைத்துள்ளனர். போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து  வருகிறது. இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தின் டைட்டில் மற்றும் வெளியீட்டுத் தேதி ஆகியவை விரைவில் அறிவிக்கப்படும். 


*தொழில்நுட்பக் குழு விவரம்:*

திரைக்கதை & இயக்கம் : தமிழ்,

கதை & வசனம் : பெருமாள் முருகன்

தயாரிப்பு : செ. வினோத்குமார்,

ஒளிப்பதிவு : தீபக்,

இசை: பிந்துமாலினி- வேதாந்த் பரத்வாஜ்,


படத்தொகுப்பு : கண்ணன்,

கலை வடிவமைப்பு : பி. ஜெயமுருகன்

ஒலிப்பதிவு : அந்தோனி பி. ஜெ. ரூபன்,

சண்டைப்பயிற்சி : பில்லா ஜெகன்,

உடை வடிவமைப்பு : ஈகா பிரவீன்,

எக்ஸிகியூட்டிவ் புரொடியூசர்: திவாகர். ஜெ,

விளம்பர வடிவமைப்பு : சிவா

மக்கள் தொடர்பாளர் : சுரேஷ் சந்திரா, 

 நிறுவனத்தின் பெயர் : சினிமாக்காரன்

Monday, 15 January 2024

ரெபல் ஸ்டார்' பிரபாஸ் - இயக்குநர் மாருதி கூட்டணியில் தயாராகும் பெரிதும்

 *'ரெபல் ஸ்டார்' பிரபாஸ் - இயக்குநர் மாருதி கூட்டணியில் தயாராகும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பான் இந்திய ரொமான்டிக் ஹாரர் என்டர்டெய்னர் படமான 'தி ராஜா சாப்' ( The Raja Saab) எனும் படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு.*




பான் இந்திய ரெபல் ஸ்டார் பிரபாஸ்- இயக்குநர் மாருதியுடன் இணைந்து மீண்டும் பார்வையாளர்களை வசீகரிக்க தயாராகி வருகிறார். பீப்பிள் மீடியா ஃபேக்டரி நிறுவனத்தின் சார்பில் தயாராகும் காதல் + திகில் கலந்த திரைப்படத்திற்கு 'தி ராஜா சாப்' என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டிருக்கிறது.


இந்த திரைப்படத்தின் டிஜிட்டல் கட்டவுட் ரெபல் ஸ்டார் பிரபாஸின் சொந்த ஊரான பீமாவரத்தில் பிரம்மாண்டமாக வெளியிடப்பட்டது. விவேக் குச்சிபோட்லா இணை தயாரிப்பாளராக பணியாற்றும் இந்த திரைப்படத்தை தயாரிப்பாளர் டி. ஜி. விஸ்வ பிரசாத் தயாரிக்கிறார். 'தி ராஜா சாப்' முழுமையான பொழுதுபோக்கு அம்சம் உள்ள திரைப்படமாக இருக்கும் என உறுதியளிக்கிறது. பிரபாஸை மாஸான தோற்றத்தில் காட்சிப்படுத்தி இருக்கும் இந்த பான் இந்திய திரைப்படத்தில் பல முன்னணி நட்சத்திர நடிகர்கள் நடிக்கிறார்கள். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் இந்த திரைப்படம் வெளியிட திட்டமிடப்பட்டிருக்கிறது.


'ரெபல் ஸ்டார்' பிரபாஸ் இதுவரை ஏற்றிருக்காத ரொமாண்டிக் ஹாரர் ஜானரில் இப்படம் தயாராவதால் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பும், ஆர்வமும் அனைத்து தரப்பினரிடமும் ஏற்பட்டிருக்கிறது. மேலும் 'தி ராஜா சாப்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வண்ணமயமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த போஸ்டரில் பிரபாஸ் லுங்கியை அணிந்து விண்டேஜ் தோற்றத்தில் அசத்தியிருக்கிறார். ஜாலியான மற்றும் ரொமாண்டிக்கான கேரக்டர் லுக்கில் பிரபாஸை பார்த்ததும்.., ரசிகர்களுக்கும் திரையுலகினருக்கும் புது விதமான உணர்வை அளித்திருக்கிறது. 


'தி ராஜா சாப்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் ஒரு வண்ணமயமான திரைப்படத்தை காணவிருக்கிறோம் என்ற உணர்வை ஏற்படுத்தியிருக்கிறார் இயக்குநர் மாருதி. இவரது இயக்கத்தில்  'பலே பலே மகடிவோய்', 'பிரதி ரோஜுபந்தகே' போன்ற வெற்றி பெற்ற குடும்பம் பொழுது போக்கு படங்களை இயக்கியிருக்கிறார். மேலும் தெலுங்கு திரையுலகில் வெளியான முதல் காதலும் திகிலும் கலந்த திரைப்படமான 'பிரேம கதா சித்திரம்' எனும் வெற்றி படத்தையும், காதலும், நகைச்சுவையும் கலந்த 'மகானுபாவுடு' போன்ற சூப்பர் ஹிட் திரைப்படத்தையும் இயக்கியவர். இவரது இயக்கத்தில் தயாராகும் காதலும், திகலும் கலந்த பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகும் ' தி ராஜா சாப்' படத்தில்  ரெபல் ஸ்டார் பிரபாஸுடன் இணைவதால் பரவசத்துடன் கூடிய எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.


'கார்த்திகேயா 2' மற்றும் 'தமாக்கா' ஆகிய சூப்பர் ஹிட் கமர்சியல் திரைப்படங்கள் மூலம் பிரபலமான தெலுங்கு திரையுலக முன்னணி தயாரிப்பாளர் டி. ஜி. விஸ்வ பிரசாத் இப்படத்தினை தயாரிக்கிறார். அவரது பீப்பிள் மீடியா ஃபேக்டரி நிறுவனத்தின் சார்பில் உயர்தர தயாரிப்பு தரத்துடன் சமரசம் இல்லாமல் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் ' தி ராஜா சாப்' படம் தயாராகிறது.


கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் எஸ். தமன் இசையமைக்கிறார். படத்தொகுப்பு பணிகளை கோத்தகிரி வெங்கடேஸ்வரா கவனிக்க, வி எஃப் எக்ஸ் பணிகளை 'மகதீரா', 'பாகுபலி' போன்ற படங்களில் பணியாற்றிய கமல் கண்ணன் தலைமையிலான குழுவினர் மேற்கொள்கிறார்கள். இயக்குநர் மாருதி எழுதி, இயக்கும் ' தி ராஜா சாப்' திரைப்படம் மொழிகளின் எல்லைகளைக் கடந்து அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Rebel Star Prabhas - Maruthi's Most Awaited

 *Rebel Star Prabhas - Maruthi's Most Awaited Pan India romantic horror entertainer " The Raja Saab" First Look, Title Released.*



Pan India Rebel Star Prabhas, is gearing up to charm audiences once again by collaborating with director Maruthi for an upcoming project that has generated significant excitement. Prabhas officially reveals his next project today, titled 'The Raja Saab,' a captivating romantic horror entertainer helmed by the beloved director Maruthi under the People Media Factory banner.


The film's digital cutout was unveiled in Prabhas' hometown, Bhimavaram, today. Produced by TG Vishwa Prasad, with Vivek Kuchibotla as co-producer, 'The Raja Saab' assures to be a complete entertainer, showcasing Prabhas in a 'Massy' avatar. This Pan-Indian film, boasting an ensemble cast, is slated for release in Tamil, Kannada, Malayalam, Telugu, and Hindi.


"Raja Saab" in the romantic horror genre, which Prabhas has not done so far, everyone is getting curious about this movie. "Raja Saab" first look poster is colorfully designed. In this poster, Prabhas wearing a lungi is impressive in a vintage look. Seeing Prabhas in a fun and romantic character look is giving a fresh feeling to fans and film lovers alike.


In the first look poster of "Raja Saab" director Maruti gave the impression that we are going to see a colorful movie. Maruthi is credited for superhits like family entertainer ‘Bhale Bhale Magadivoy’ ‘Prati Roju Pandage’, first ever Telugu horror comedy ‘Prema Katha Chitram’, and romantic comedy ‘Mahanubhavudu’ amongst many others. Ecstatic about the upcoming romantic horror entertainer and joining forces with Prabhas.


Film’s Producer TG Vishwa Prasad, a leading name in the Telugu industry who’s known for backing superhit commercial potboilers like ‘Karthikeya 2’ and ‘Dhamaka’ is excited about the project. People Media Factory is producing the movie "Raja Saab" in a grand manner without compromising anywhere with huge production values.


National award-winning music composer Thaman S is crafting the film's music. The film’s cinematography is led by Karthik Palani (Varisu), and VFX is led by Kamal Kannan (Magadheera, Baahubali ) 

both are renowned for their  works in big-budget blockbuster films. Written and directed by Maruthi, 'The Raja Saab' is anticipated to transcend linguistic and genre boundaries.


Actors - Prabhas, etc


Technical team


Editing - Kotagiri Venkateswara Rao

Cinematography - Karthik Palani

Music - Taman

Fight Master - King Solomon

VAFX - R.C. Kamal Kannan

Production Designer – Rajeevan

Executive Producer - Dr. Vasudeva Lemburu

Production Controller - Yoganand Duddukuru

Creative Producer - SKN

PRO - Yuvraaj

Co Producer - Vivek Kuchibhotla

Producer - TG Vishwaprasad

Written and Directed by Maruthi

Saturday, 13 January 2024

Thamizhar Thirunaal Thaiye', the Pongal song composed by

 Thamizhar Thirunaal Thaiye', the Pongal song composed by James Vasanthan and written by Kaviperarasu Vairamuthu, featuring actor-director Sasikumar released*



The Pongal song 'Thamizhar Thirunaal Thaiye', composed by James Vasanthan and written by Kaviperarasu Vairamuthu, features actor-director Sasikumar. 


Caldwell Velnambi, a prominent entrepreneur and important functionary in the American Tamil Sangam Federation, came forward to produce this song, realising the need for this product.


This music video celebrates the Pongal festival and the rich culture and tradition of Tamils, as well as its greatness.


In addition to actor-director Sasikumar, the music video also stars Velmurugan, Priyanka NK, Amarmugam, Nandini, Gopinath Sai Lalitha, Puvi, James Vasanthan and Caldwell Velnambi. 


First-unit director Bupesh S. and second-unit director Raja Gurusamy worked together to create this visually striking video. Raja Bhattacharjee and Antony Ruth Vincent handled the cinematography.


Sabu Joseph is in charge of editing, and Sangeetha Prabha is in charge of choreography.


Velmurugan, Palakkad Sreeram, Priyanka NK, Shibi Srinivasan, Bharati Caldwell, and Anu Anand have crooned the song.


Speaking on the initiative, James Vasanthan said, "On the Pongal festival, which is celebrated by the entire Tamil community, there is hardly a single song that can be shown on television. 'Thamizhar Thirunaal Thayye' is the solution to our desire to develop one for the Tamil community worldwide."


"My sincere gratitude to the producer and everyone else who contributed to this song. I am sure this will become a festive song that will remain forever in the hearts of Tamils."


The song can be viewed at https://youtu.be/JNLhAm499jg


***

தமிழர் திருநாள் தையே', ஜேம்ஸ் வசந்தன்

'தமிழர் திருநாள் தையே', ஜேம்ஸ் வசந்தன் இசையில், கவிப்பேரரசு வைரமுத்து வரிகளில், நடிகர்-இயக்குநர் சசிகுமார் தோன்றும் பொங்கல் பாடல் வெளியீடு*



ஜேம்ஸ் வசந்தன் இசையில் கவிப்பேரரசு வைரமுத்து எழுதியுள்ள 'தமிழர் திருநாள் தையே' பொங்கல் பாடலில் நடிகரும் இயக்குநருமான சசிகுமார் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.


அமெரிக்கத் தமிழ்ச் சங்கக் கூட்டமைப்பில் முக்கிய பொறுப்பு வகிப்பவரும் தொழிலதிபருமான கால்டுவெல் வேள்நம்பி இந்தப் பாடலின் தேவையை உணர்ந்து இதை தயாரிக்க முன்வந்தார்.


பொங்கல் பண்டிகை, தமிழர்களின் வளமான கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் அதன் மகத்துவத்தை இந்த பாடல் கொண்டாடுகிறது.


'தமிழர் திருநாள் தையே' பாடலில் சசிகுமார் உடன் வேல்முருகன், பிரியங்கா என் கே, அமர்முகம், நந்தினி, கோபிநாத் சாய் லலிதா மற்றும் புவி, ஜேம்ஸ் வசந்தன், கால்டுவெல் வேள்நம்பி உள்ளிட்டோரும் இடம்பெற்றுள்ளனர். 


முதல் யூனிட் இயக்குநர் பூபேஷ் எஸ். மற்றும் இரண்டாம் யூனிட் இயக்குநர் ராஜா குருசாமி இணைந்து இந்த கண்கவர் வீடியோ பாடலை உருவாக்கியுள்ளனர். ராஜா பட்டாசார்ஜி மற்றும் ஆண்டனி ரூத் வின்சென்ட் ஒளிப்பதிவு செய்துள்ளனர்.


சாபு ஜோசப் படத்தொகுப்பாளராகவும், சங்கீதா பிரபா நடன இயக்குநராகவும் பணிபுரிந்துள்ளனர்.


வேல்முருகன், பாலக்காடு ஸ்ரீராம், பிரியங்கா என் கே, ஷிபி ஸ்ரீனிவாசன், பாரதி கால்டுவெல் மற்றும் அனு ஆனந்த் ஆகியோர் இப்பாடலை பாடியுள்ளனர். 


இது குறித்து பேசிய ஜேம்ஸ் வசந்தன், "ஒட்டு மொத்த தமிழ் சமூகமும் கொண்டாடும் பொங்கல் திருநாள் குறித்து தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகக் கூடிய வகையிலான சிறந்ததொரு பாடல் இல்லை என்றே சொல்லலாம். உலகமெங்கும் உள்ள தமிழ் சமுதாயத்திற்காக இப்படி ஒரு பாடலை உருவாக்க வேண்டும் என்ற எங்களின் அவாவின் விளைவே 'தமிழர் திருநாள் 'தையே'," என்றார். 


"தயாரிப்பாளருக்கும் இந்த பாடலுக்கு பங்களித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி. தமிழர்களின் மனங்களில் என்றென்றும் வீற்றிருக்கும் பண்டிகை பாடலாக இது அமையும் என்று நான் நம்புகிறேன்," என்று அவர் மேலும் கூறினார்


***


*'

ஜவான்' புகழ் இசையமைப்பாளர் அனிருத் தனது 'ஹுக்கும்- வேர்ல்ட்

 ஜவான்' புகழ் இசையமைப்பாளர் அனிருத் தனது 'ஹுக்கும்- வேர்ல்ட் டூர்’ரை துபாயில் இருந்து ஆரம்பிப்பதாக அறிவித்துள்ளார்! 













இசை மாஸ்ட்ரோ என ரசிகர்களால் கொண்டாடப்படும் இசையமைப்பாளர் அனிருத், துபாயில் உள்ள கோகோ கோலா அரங்கில் 'ஹூக்கும் வேர்ல்ட் டூர் - அலப்பரை கெளப்பறோம் கான்செட்ர்ட்'டை அறிவித்துள்ளார். பிரபல இசையமைப்பாளரும் பாடகருமான அனிருத் பாலிவுட் திரைப்படமான ’ஜவான்’ உட்பட தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். இந்த நிலையில்தான் உலகம் முழுவதுமான தனது இசைப்பயணத்தை துபாயில் இருந்து ஆரம்பிப்பதாக அறிவித்துள்ளார். இந்தியாவின் முதன்மையான நிகழ்வு மேலாண்மை நிறுவனமான பிராண்ட் அவதார் (Brand Avatar), இந்தியாவைத் தளமாகக் கொண்ட ஊடகம் மற்றும் பொழுதுபோக்குத் துறை அமைப்பான பல்ஸ் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்த இசை நிகழ்ச்சி, பிப்ரவரி 10, 2024 அன்று துபாய் மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்த இருக்கிறது. 


இந்த நிகழ்வு பல்வேறு கலாச்சாரங்கள் மற்றும் இசை தாக்கங்களைக் கொண்ட ஒரு நிகழ்ச்சியாக இருக்கும் என்று உறுதியளிக்கிறது. அனிருத்தின் பல ஹிட் பாடல்கள் இந்த இசை நிகழ்ச்சியில் இடம்பெற இருக்கிறது. 'ஹுக்கும்- வேர்ல்ட் டூர்’ இசை மூலம் ரசிகர்கள் மத்தியில் ஒற்றுமையை வளர்க்கும் விதமாக அமையும். 


இந்த கச்சேரி குறித்து பிராண்ட் அவதார் ஹேமச்சந்திரன் கூறியதாவது, "பல்வேறு மறக்கமுடியாத அனுபவங்களை அந்தந்த பிராண்டுடன் இணைந்து கொடுக்கும் பணியைக் கையாண்டு வருகிறோம். 'ஹுக்கும்- வேர்ல்ட் டூர்’ மூலம் அனிருத் லைவ்வாக பாடுவதையும் ஒரு நிறைவான இசை அனுபவத்தையும் ரசிகர்கள் பெறுவார்கள். கார்ப்பரேட் கூட்டங்கள் முதல் பெரிய அளவிலான கச்சேரிகள் வரையிலான நிகழ்வுகளை நாங்கள் கையாளுகிறோம். மேலும் அனிருத்தின் இந்த இசை சுற்றுப்பயணத்தின் மூலம், உலக அளவில் ரசிகர்கள் மத்தியில் எங்களின் இருப்பை மீண்டும் உறுதிப்படுத்துவோம்”.


சமீபத்தில் அட்லி இயக்கிய ஷாருக்கானின் பிளாக்பஸ்டர் படமான 'ஜவான்' மூலம் பாலிவுட்டில் அறிமுகமான இசையமைப்பாளர் அனிருத் பேசியிருப்பதாவது, "நான் எப்போதும் பலதரப்பட்ட பார்வையாளர்களின் விருப்பதை எதிரொலிக்கும் வகையிலான இசையை உருவாக்குவதில் கவனம் செலுத்துகிறேன். ‘ஹுக்கும்- வேர்ல்ட் டூர்’ என ஆரம்பித்திருக்கும் இந்த உலக இசைச்சுற்றுப்பயணத்தின் மூலம், நான் சினிமாவில் அறிமுகமானதில் இருந்து எனது பணியைப் பாராட்டிய பார்வையாளர்களுடன் எனது வெற்றியையும் பயணத்தையும் பகிர்ந்து கொள்கிறேன். ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அன்பான இசை ரசிகர்களைச் சந்தித்து இந்த உலக இசைச்சுற்றுப்பயணத்தைத் தொடங்குவதில் மகிழ்ச்சியடைகிறேன்” என்றார். 


கச்சேரிக்கான டிக்கெட்டுகள் பிளாட்டினம் பட்டியல், கோகோ கோலா அரங்கம் மற்றும் விர்ஜின் டிக்கெட்டுகளில் கிடைக்கின்றன. ‘ஹுக்கும்- வேர்ல்ட் டூர்’ நிகழ்வின் ஸ்பான்ஸர்ஸ் நேச்சுரலஸ். அசோசியேட் ஸ்பான்சர்களான சக்தி மசாலா, லார்ட், எஸ்எஸ்விஎம் மற்றும் சத்யபாமா இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி ஆகியவை இந்த சுற்றுப்பயணத்தை மறக்க முடியாத அனுபவமாக மாற்ற உறுதிபூண்டுள்

திறமையானவர்களை நட்சத்திரங்களாக மின்ன வைக்க வருகிறது ‘நீங்களும்

 திறமையானவர்களை நட்சத்திரங்களாக மின்ன வைக்க வருகிறது ‘நீங்களும் மின்னலாம் நட்சத்திரமாய்’ நிகழ்ச்சி!







திறமைசாமிகளுக்கான சினிமா மேடை அமைத்து கொடுக்கும் குளோப் நெக்சஸின் ‘நீங்களும் மின்னலாம் நட்சத்திரமாய்’ நிகழ்ச்சி!


திறமைசாலிகளுக்கு பரிசு மட்டும் அல்ல சினிமா வாய்ப்பு பெற்றுக் கொடுத்து அங்கீகாரம் வழங்க வருகிறது ‘நீங்களும் மின்னலாம் நட்சத்திரமாய்’!


’நீங்களும் மின்னலாம் நட்சத்திரமாய்’ நிகழ்ச்சியில் விளம்பர தூதரான நடிகை சினேகா


இயக்குநராக அறிமுகமாவதில் மகிழ்ச்சியடைகிறேன் - ‘நீங்களும் மின்னலாம் நட்சத்திரமாய்’ நிகழ்ச்சியில் அந்தோணி தாசன் பேச்சு


பல்வெறு துறையில் சாதித்தது போல் மீடியா துறையிலும் நாங்கள் சாதிப்போம் - ‘நீங்களும் மின்னலாம் நட்சத்திரமாய்’ நிகழ்ச்சியில் குளோப் நெக்சஸ் மேலாளர் பேச்சு


சோசியல் மீடியாவின் வளர்ச்சியால் இன்று பலரிடம் இருக்கும் திறமைகள் உலக அளவில் பிரபலமடைந்தாலும் அவர்களுக்கான சரியான வாய்ப்பு மட்டுமே எளிதாக கிடைப்பதில்லை. அப்படி ஒரு வாய்ப்பு அமைத்துக் கொடுக்கும் முயற்சியில் குளோப் நெக்சஸ் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. அந்நிருவனம் திறமைசாலிகளை தேடிக் கண்டுபிடிக்கும் விதமாக (Talent Hunt Show Launch)  ‘நீங்களும் மின்னலாம் நட்சத்திரமாய்’ என்ற நிகழ்ச்சியை வடிவமைத்துள்ளது. இந்த நிகழ்ச்சி மூலம் திறமைசாலிகளை வெளிச்சத்திற்கு கொண்டு வருவதை முக்கிய நோக்கமாக கொண்டுள்ள குளோப் நெக்சஸ் நிறுவனம், அவர்களுக்கு பரிசு வழங்கி கெளரவிப்பதோடு, திரைப்பட வாய்ப்புகளை பெற்றுக் கொடுத்து அங்கீகரிக்க உள்ளது.


நடிப்பு, இசை, நடனம் ஆகிய துறைகளில் ஆர்வமுள்ளவர்கள் ‘நீங்களும் மின்னலாம் நட்சத்திரமாய்’ நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு தங்களது திறமையை நிரூபிப்பதன் மூலம் வெள்ளித்திரையில் நட்சத்திரங்களாய் மின்னுவது உறுதி. இந்த நிகழ்ச்சியில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசு மட்டும் இன்றி திரைப்படங்களிலும் அவர்களின் திறமைக்கு ஏற்ற வாய்ப்புகள் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. 


‘நீங்களும் மின்னலாம் நட்சத்திரமாய்’ போட்டியில் பங்கேற்க,  இதற்கான இணையதளத்தில் உங்கள் திறமைகளை வெளிக்காட்டும் விதமாக 30 நொடிகள் ஓடக்கூடிய வீடியோவை பதிவேற்றம் செய்ய வேண்டும். நடிப்பு, நடனம், பாட்டு பாடுவது என எந்த திறமையாக இருந்தாலும் அதை 30 நொடிகள் ஓடக்கூடிய வீடியோவாக  தயாரித்து பதிவேற்றம் செய்யலாம். நடனத்தில் தனி ஒருவர் நடனம் ஆடுவது மட்டும் இன்றி, குழுவாக நடனம் ஆடும் வீடியோவும் பதிவேற்றம் செய்யலாம். குழு நடனம் என்றால் ஒரு குழுவில் 3 பேர் முதல் 5 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.


இந்த வீடியோக்களில் சிறந்த திறமைசாலிகளை தேர்வு செய்ய திரை பிரபலங்கள் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் ஒவ்வொரு பிரிவிலும் நான்கு பேர் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு இறுதிப் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு வழங்கப்படும். 6 பிரிவுகளின் கீழ் மொத்தம் 24 பேர் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த 24 பேர்கள் பங்கேற்கும் இறுதிப் போட்டி பிரமாண்டமான முறையில்,  தமிழ் சினிமா பிரபலங்கள் முன்னிலையில் நடைபெறும். 


ஒவ்வொரு பிரிவிலும் முதல் இடத்தை பிடிப்பவர்களுக்கு முதல் பரிசாக ரூ.5 லட்சம் வழங்குவதோடு, அவர் அவர் திறமைக்கு ஏற்ப திரைப்படங்களில் வாய்ப்புகள் பெற்றுத்தரப்படும். அதேபோல் இரண்டாவது இடத்தை பிடிப்பவர்களுக்கு ரூ.3 லட்சமும், மூன்றாவது இடத்தை பிடிப்பவர்களுக்கு ரூ.2 லட்சமும், நான்காவது இடத்தை பிடிப்பவர்களுக்கு ரூ.1 லட்சமும் பரிசாக வழங்கப்படும். 


நடிப்பு பிரிவில் வெற்றி பெற்றவர்களுக்கு நடிக்கவும், இசை திறமையுள்ளவர்களுக்கு பாடகர், இசைக் கலைஞர்,  நடனத்தில் திறமையுள்ளவர்களுக்கு நடனம் என பல வாய்ப்புகள் வழங்கப்படும். அந்த இரண்டு திரைப்படங்களை தயாரிக்கும் நிறுவனத்தின் பெயர், லோகோ மற்றும் பட தலைப்பு ஆகியவை ‘நீங்களும் மின்னலாம் நட்சத்திரமாய்’ நிகழ்ச்சியில் அறிவிக்கப்படும். இந்த இரண்டு படங்களில் ஒரு படத்தை பிரபல பாடகரும், இசையமைப்பாளருமான ஆண்டனி தாசன் இயக்குகிறார். மற்றொரு படத்தை சுகுமாரன் என்பவர் இயக்குகிறார். இந்த படங்களை தயாரிக்கும் தயாரிப்பு நிறுவனங்களை குளோப் நெக்சஸ் நிறுவனம் பிரபலப்படுத்தும் பணியை மட்டுமே செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


‘நீங்களும் மின்னலாம் நட்சத்திரமாய்’ போட்டியில் பங்கேற்பதற்கான பதிவு டிசம்பர் மாதம் தொடங்கி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.  பதிவு செய்ய வேண்டிய கடைசி நாள் மார்ச் 31 ஆம் தேதியாகும். இறுதிப் போட்டி ஏப்ரல் 14 ஆம் தேதி பிரமாண்டமான முறையில் திரையுலக பிரபலங்கள் முன்னிலையில் நடைபெற உள்ளது.


இந்த போட்டியில் பங்கேற்க பொது பிரிவு வயது வரம்பாக 3 முதல் 45 என நிர்ணயம் செய்துள்ளோம். அதேபோல், டீன் என்ற பிரிவுக்கு 13 முதல் 19 வயதும், சீனியர் என்ற பிரிவுக்கு 20 முதல் 45 வயது  நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சிறுவர்களுக்கான வயது வரம்பாக 3 முதல் 12 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


இப்போட்டியில் கலந்துக்கொள்ள www.globenexusmedia.com என்ற இணையதளத்தில் உங்கள் விவரங்களை பதிவு செய்வதோடு, உங்களது 30 நொடிகள் வீடியோவையும் இதே தளத்தில் பதிவேற்றலாம்.


மேலும், இப்போட்டியில் பங்கேற்க நுழைவு கட்டணமாக தனிப்பட்டவர்களுக்கு ரூ.299 வசூலிக்கப்படுகிறது. குழுவாக நடனம் ஆடுபவர்களுக்கு குழு கட்டணமாக ரூ.1499 வசூலிக்கப்படுகிறது. போட்டியில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள் ஆர்வத்தில் பதிவு செய்துவிட்டு பிறகு ஏதோ ஒரு காரணத்தால் அதை சாதாரணமாக விட்டுவிடாமல், இதில் தீவிரமாக செயல்படுவதற்காகவே இந்த சிறு தொகை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த நிலையில், இந்த நிகழ்ச்சியின் அறிமுக விழா ஜனவரி 12 ஆம் தேதி சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில், குளோப் நெக்சஸ் நிறுவனத்தின் தென்னிந்திய தலைவர் திருமதி. மீனாட்சி அருண், நிகழ்ச்சி மேலாளர் செல்வி.பவித்ரா, பொது மேலாளர் செல்வி.தேவிபிரியா ஸ்டீபன், மேலாளர் ஜெயபிரகாஷ் மற்றும் பிரபல பாடகரும், இசையமைப்பாளரும், தற்போது இயக்குநர் அவதாரம் எடுத்திருப்பவருமான அந்தோணி தாசன் ஆகியோர் கலந்துக்கொண்டார்கள்.


நிகழ்ச்சியில் குளோப் நெக்சஸ் நிறுவனத்தின் மேலாளர் ஜெயபிரகாஷ் பேசுகையில், “எங்கள் அழைப்பை ஏற்று இங்கு வந்திருக்கும் அனைத்து ஊடகத்தினருக்கும் நன்றி. எங்கள் நிருவனம் கடந்த 10 வருடங்களாக பல்வேறு துறைகளில் இயங்கி வருகிறது. பிஸினஸ் புரோமோட்டராக பல வருடங்களாக செயல்பட்டு வருகிறோம். தற்போது மீடியாவுக்குள் நுழைகிறோம். இதை சாதாரணமாக செய்ய கூடாது என்பதால், ஒரு கற்றலோடும், மற்றவர்களுக்கு வாய்ப்பு வழங்கும் விதத்திலும் இந்த நிகழ்ச்சியை வடிவமைத்துள்ளோம். நாங்க பிஸினஸ் புரோமோட்டராக பல வருடங்களாக சிறப்பான பங்களிப்பை கொடுத்து வருகிறோம். நீங்கள் எப்படிப்பட்ட தொழில் தொடங்கினாலும் முழுமையான ஒத்துழைப்பு மற்றும் வழிகாட்டியாக உங்களுக்கு துணையாக நின்று உங்களை முன்னேற்றப் பாதையில் அழைத்து செல்வோம், இதை தான் பிஸினஸ் புரோமோட்டராக செய்து கொண்டிருக்கிறோம். அதே போல் சொத்துக்கள் பராமரிப்பு, பொது வர்த்தகம் போன்றவற்றை வெற்றிகரமாக செய்துக்கொண்டிருப்பது போல் தற்போது மீடியா மேனஜ்மெண்ட் துறையிலும் நாங்கள் நுழைந்திருக்கிறோம், இதையும் நாங்கள் சிறப்பாக செய்வோம். இதற்கான ஆரம்ப புள்ளி தான் ‘நீங்களும் மின்னலாம் நட்சத்திரமாய்’.” என்றார்.


அந்தோணி தாசன் பேசுகையில், “மிகவும் சந்தோஷாம இருக்கு, கிளோப் நெக்சஸ் நிறுவனம் எடுக்கும் இந்த மாபெரும் முயற்சியை வாழ்த்துகிறேன். சிறுவயதில் நான் கூட்டத்துடன் கூட்டமாக  திரைப்படங்களை பார்த்து மகிழ்ந்திருக்கிறேன், ஒரு ரசிகனாக கொண்டாடியிருக்கிறேன். இன்று நாட்டுப்புற கலையில் இருந்து வளர்ந்து, மக்களோட ஆசீர்வாதம், தெய்வத்தின் அருள், உங்களைப் போன்ற பெரியவர்களின் ஊக்கத்தால் இன்று ஒரு இயக்குநராக அறிமுகமாவதில் மகிழ்ச்சியடைகிறேன். நான் பயணிக்கும் பாதை சரியானது என்று நான் கருதுகிறேன். கூத்து கலைஞராக மக்களை நேரடியாக மகிழ்வித்து இருக்கிறேன், ஒரு பாடகனாகவும், இசையமைப்பாளராகவும் மக்களை மகிழ்வித்திருக்கிறேன். இப்போது நான் எடுத்திருக்கும் இயக்குநர் அவதாரத்தையும் சிறப்பாக செய்வேன் என்று நான் வணங்கும் கடவுள் அருளால் நம்புகிறேன், கடவுளுக்கு நிகராக இருக்கும் ஊடகத்தாரையும், ரசிகர்களையும் நான் வேண்டிக்கொள்கிறேன். குளோப் நெக்சஸின் ‘நீங்களும் மின்னலாம் நட்சத்திரமாய்’ நிகழ்ச்சி திறமைசாலிகளுக்கான மிகப்பெரிய வாய்ப்பு. விசில் சத்தம் மற்றும் கைதட்டல் தனக்கும் கிடைக்காதா என்று பலர் ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள், அப்படிப்பட்டவர்களின் ஏக்கத்தை போக்குகின்ற ஒரு வாய்ப்பாக இந்த நிகழ்ச்சி அமைய இருக்கிறது. இதில் பங்கேற்று வெற்றிகரமாக வாய்ப்புகளை பெற வேண்டும். எனக்கு கூட நிறைய பேர் போன் செய்து, நான் நல்லா பாடுவேன், நடனம் ஆடுவேன் என்று சொல்வார்கள், அப்படிப்பட்டவர்களுக்கு சரியான தளம் அமையவில்லையே என்று நான் நினைத்தது உண்டு, தற்போது அப்படி ஒரு தளத்தை இந்த நிகழ்ச்சி ஏற்படுத்தி கொடுத்ததில் மகிழ்ச்சி. இதில் வெற்றி பெறுபவர்களுக்கு நான் இயக்கும் படத்தில் வாய்ப்பு வழங்குவது எனக்கு பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. நான் இயக்கும் படத்தின் தலைப்பு மற்றும் தயாரிப்பு நிறுவனத்தின் பெயர் உள்ளிட்ட விபரங்கள் சித்திரை முதல் நாளான ஏப்ரல் 14 ஆம் தேதி நடைபெறும் ‘நீங்களும் மின்னலாம் நட்சத்திரமாய்’ இறுதிப் போட்டியில் அறிவிக்கப்படும், நன்றி.” என்றார்.

Enter the Gateway of Cinema exhibiting your talents through "Neengalum Minnalam Natchathiramai"

Enter the Gateway of Cinema exhibiting your talents through "Neengalum Minnalam Natchathiramai"







The programme “Neengalum Minnalam Natchathiramai” season 1 is coming to make talented people shine as stars! “Neengalum Minnalam Natchathiramai” provides a great cinema platform for talent persons. Talented peoples are not only given prizes but also, they get a chance to act in movies and a recognition by participating in the programme “Neengalum Minnalam Natchathiramai”.


With the growth of social media, many talented people had become globally popular today, but the right opportunity for them is not easy to find. Globe Nexus is attempting to create such an opportunity for the talented persons by launching the grand talent hunt competition in the name “Neengalum Minnalam Natchathiramai” Those who are interested in the fields of acting, music, comedian and dance will shine like stars on the silver screen by participating in the show “Neengalum Minnalam Natchathiramai” to prove their talent. And also, the title winner will get a chance in a movie respective to their titles.

To participate in the competition “Neengalum Minnalam Natchathiramai”, you have to upload a 30 seconds video showcasing your skills like acting, dancing, singing and comedian and so on in our official website. In addition to individual dances, you can also upload videos of group dances. In Group dance only 3 to 5 participants are allowed. 

A panel of silver screen celebrities has been set up to select the best talent from these videos. Thereby, 4 participants were selected in each category for the finale. A Total of 24 participants will be selected for the grand finale by the jury members. The title winner in each category will be awarded with Rs. 5 lakhs and be given opportunities in the films. Similarly, the second runner up will get Rs.3 lakh, the third runner up will get Rs.2 lakh prize, the fourth runner up will get Rs.1 lakh prize according to their titles.

Winners in the acting category will be given opportunities to act, winners in music category will get a chance to sing and the winners of dance category will get a chance to dance. The name, logo and film title of the production house and the two films will be announced at the “Neengalum Minnalam Natchathiramai” finale programme. One of these two films is directed by popular singer and music composer Mr. “Folk Marley”Anthony Daasan and the other film is directed by V. Sugumaran. It is noteworthy that the Globe Nexus company is only popularising the production houses that make these films.



The registration for participating in the programme “Neengalum Minnalam Natchathiramai” starts in December and has been well received by the people. Last date to register is 31st March,2024. Likewise, the registered participants can upload their reels till 05 April,2024.


Participants with the age limit of 3 to 45 years as general category to participate in this competition. Similarly, the age limit for teen category is 13 to 19 years and for senior category is 20 to 45 years and for child category, it is 3 to 12 years. To participate in the programme, you can register your details on the official website www.globenexusmedia.com and upload your 30 seconds video on the same site.


Also, an entry fee of Rs.299 is charged for individuals to participate in the programme. A group fee of Rs.1499 is charged for group dancers. It is worth noting that this fee is a small amount which is charged for their active participation in the registration so that they will give their best and not for any other reason.

For more details contact:

+91-9043980996 / 9384272571