Featured post

கட்டா குஸ்தி 2’ வெற்றியை கொண்டாடிய படக்குழு… 50வது நாள் நன்றி அறிவிப்பு விழா!*

*‘கட்டா குஸ்தி 2’ வெற்றியை கொண்டாடிய படக்குழு… 50வது நாள் நன்றி அறிவிப்பு விழா!* வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ...

Thursday, 3 September 2026

Noah Centineo and Andrew Koji Go Head-to-Head in Explosive New _Street Fighter_ Trailer

*Noah Centineo and Andrew Koji Go Head-to-Head in Explosive New _Street Fighter_ Trailer*



_The World Warrior Tour Kicks Off in Japan as the Trailer Makes History on YouTube. Street Fighter will release on 16 October 2026 across India in English, Hindi, Tamil and Telugu_


Paramount Pictures and Legendary Entertainment have kicked off the global World Warrior Tour with an epic first-ever trailer launch across the iconic Shinjuku Yunika Vision screens in Tokyo.


Stars Noah Centineo, Andrew Koji, Callina Liang and Jason Momoa were joined by local cast member Hirooki Goto, Japanese voice talent Eiko Kano, director Kitao Sakurai and Street Fighter game director Takayuki Nakayama for the first-of-its-kind event.


The New _Street Fighter_ Trailer Isn’t Just Watchable. It’s Playable. In conjunction with the Japan launch, Paramount Pictures and Legendary Entertainment debuted the first-ever playable full-length movie trailer on YouTube, inviting fans around the world to fight their way through the new _Street Fighter_ trailer as they watc

 

Set in 1993, estranged Street Fighters Ryu (Andrew Koji) and Ken Masters (Noah Centineo) are thrown back into combat when the mysterious Chun-Li (Callina Liang) recruits them for the next World Warrior Tournament: a brutal clash of fists, fate, and fury. But behind this battle royale lies a deadly conspiracy that forces them to face off against each other and the demons of their past. And if they don’t, it’s GAME OVER!


Helmed by director Kitao Sakurai, Street Fighter is set to bring the battle from the arcade to the big screen with Hadoukens, roundhouses, and all your favorite characters.   


The cast includes Noah Centineo as Ken Masters, Andrew Koji as Ryu, Callina Liang as Chun-Li, Joe “Roman Reigns” Anoa’i as Akuma, David Dastmalchian as M. Bison, Cody Rhodes as Guile, Andrew Schulz as Dan Hibiki, Eric André as Don Sauvage, Vidyut Jammwal as Dhalsim, Orville Peck as Vega, Olivier Richters as Zangief, Hirooki Goto as E. Honda, Rayna Vallandingham as Juli, Alexander Volkanovski as Joe, with Curtis “50 Cent” Jackson as Balrog and Jason Momoa as Blanka.


_Street Fighter_ will release on 16 October 2026 across India in English, Hindi, Tamil and Telugu.

புதிய ‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ டிரெய்லரில் நேருக்கு நேர் மோதும் நோவா சென்டினியோ மற்றும் ஆண்ட்ரூ கோஜி!

 *புதிய ‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ டிரெய்லரில் நேருக்கு நேர் மோதும் நோவா சென்டினியோ மற்றும் ஆண்ட்ரூ கோஜி!*



*ஜப்பானில் தொடங்கி யூடியூபில் வரலாறு படைத்த ‘வேர்ல்ட் வாரியர் டூர்’ டிரெய்லர்! ‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ திரைப்படம் இந்தியாவில் ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் அக்டோபர் 16, 2026 அன்று வெளியாகிறது!*


பாரமவுண்ட் பிக்சர்ஸ் மற்றும் லெஜண்டரி என்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து, உலகளாவிய ‘வேர்ல்ட் வாரியர் டூர்’ நிகழ்வை ஜப்பானில் பிரம்மாண்டமாகத் தொடங்கியுள்ளன. இதன் ஒரு பகுதியாக, டோக்கியோவின் புகழ்பெற்ற ஷின்ஜுகு யூனிகா விஷன் திரைகளில் ‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ திரைப்படத்தின் முதல் டிரெய்லர் வெளியிடப்பட்டது.


நடிகர்கள் நோவா சென்டினியோ, ஆண்ட்ரூ கோஜி, கலினா லியாங் மற்றும் ஜேசன் மோமோவா ஆகியோருடன், ஜப்பானைச் சேர்ந்த நடிகர் ஹிரூகி கோட்டோ, ஜப்பானிய குரல் கலைஞர் ஈகோ கனோ, இயக்குநர் கிட்டாவ் சகுராய் மற்றும் ‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ கேம் இயக்குநர் தகாயுகி நகயாமா ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.


புதிய ‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ டிரெய்லரைப் பார்ப்பதோடு மட்டுமல்லாது விளையாடவும் முடியும். ஜப்பான் வெளியீட்டுடன் இணைந்து, பாராமெளண்ட் பிக்சர்ஸ் மற்றும் லெஜெண்ட்ரி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனங்கள் யூடியூபில் முதல் முறையாக முழுநீள விளையாடும்படியான திரைப்பட டிரெய்லரை அறிமுகப்படுத்தியுள்ளன. இதன் மூலம் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள், டிரெய்லரைப் பார்த்துக்கொண்டே அதில் நேரடியாக விளையாடி, ‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ உலகத்துக்குள் நுழைய முடியும்.


1993 ஆம் ஆண்டை பின்னணியாகக் கொண்ட இந்தக் கதையில், ஒருவரை ஒருவர் பிரிந்த நிலையில் இருக்கும் ‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்ஸ்’ ரியூ (ஆண்ட்ரூ கோஜி) மற்றும் கென் மாஸ்டர்ஸ் (நோவா சென்டினியோ) மீண்டும் சண்டைக் களத்திற்குத் திரும்புகின்றனர். மர்மமான சுன்-லி (கலினா லியாங்), அடுத்த ‘வேர்ல்ட் வாரியர்’ போட்டிக்காக இருவரையும் அழைக்கிறார். அங்கு ஆக்ரோஷமான குத்துச்சண்டை, விதி மற்றும் கோபம் நிறைந்த கடுமையான மோதல் காத்திருக்கிறது. ஆனால், இந்தப் பிரம்மாண்டமான சண்டைக்குப் பின்னால் ஒரு ஆபத்தான சதித்திட்டம் இருப்பது தெரியவருகிறது. அந்தச் சதித்திட்டம் ரியூ மற்றும் கென் இருவரையும் ஒருவருக்கொருவர் மட்டுமல்லாமல், அவர்களின் கடந்த காலத்தில் புதைந்திருக்கும் தங்களது சொந்தப் போராட்டங்களையும் எதிர்கொள்ளத் தள்ளுகிறது. அவர்கள் அதை எதிர்கொள்ளத் தவறினால் கேம் ஓவர்!


இயக்குநர் கிட்டாவ் சகுராய் இயக்கியுள்ள ‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’, ஆர்கேட் கேமில் இருந்து பெரிய திரைக்கு இந்தப் புகழ்பெற்ற போராட்டத்தை கொண்டு வருகிறது. ஹடோகென்கள், ரவுண்ட்ஹவுஸ் கிக்குகள் என ரசிகர்களுக்குப் பிடித்த அனைத்து கதாபாத்திரங்களுடனும் இந்தத் திரைப்படம் பிரம்மாண்டமான ஆக்‌ஷன் விருந்தை வழங்கவுள்ளது. 


இந்தப் படத்தில் நோவா சென்டினியோ (கென் மாஸ்டர்ஸ்), ஆண்ட்ரூ கோஜி (ரியூ), கலினா லியாங் (சுன்-லி), ஜோ ’ரோமன் ரெயின்ஸ்’ அனோவாய் (அகுமா), டேவிட் டாஸ்ட்மால்சியன் (எம். பைசன்), கோடி ரோட்ஸ் (குயிலே), ஆண்ட்ரூ ஷுல்ஸ் (டான் ஹிபிகி), எரிக் ஆண்ட்ரே (டான் சாவேஜ்), வித்யுத் ஜம்வால் (தல்சிம்), ஆர்வில் பெக் (வேகா), ஆலிவர் ரிக்டர்ஸ் (சாங்கிஃப்), ஹிரூகி கோட்டோ (இ. ஹோண்டா), ரெய்னா வல்லண்டிங்ஹாம் (ஜூலி), அலெக்சாண்டர் வோல்கனோவ்ஸ்கி (ஜோ), கர்டிஸ் ’50 சென்ட்’ ஜாக்சன் (பால்ராக்) மற்றும் ஜேசன் மோமோவா (பிளாங்கா) ஆகியோர் நடித்துள்ளனர்.


‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ திரைப்படம் இந்தியாவில் ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் 16 அக்டோபர் 2026 அன்று வெளியாகிறது.

மாரி செல்வராஜ் வழங்கும், அமீர் நடிப்பில் ‘மாகாளி’ – பூஜையுடன் படப்பிடிப்பு துவங்கியது!

 மாரி செல்வராஜ் வழங்கும், அமீர் நடிப்பில் ‘மாகாளி’ – பூஜையுடன் படப்பிடிப்பு துவங்கியது!










தமிழ் சினிமாவில் தனித்துவமான, சமூக அக்கறை கொண்ட படைப்புகளால் கவனம் ஈர்த்து வரும் மாரி செல்வராஜ் வழங்கும் புதிய திரைப்படம் ‘மாகாளி’. இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இனிதே துவங்கியது.


நடிகர் அமீர் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தை, மாரி செல்வராஜின் இணை இயக்குநரான எஸ். பி. அரவிந்த் எழுதி இயக்குகிறார். சமூகத்தின் முக்கியமான ஒரு பிரச்சினையை அழுத்தமாகவும் தாக்கமிக்க வகையிலும் பேசும் படைப்பாக ‘மாகாளி’ உருவாகி வருகிறது.


இப்படத்தை ஐங்கரன் இண்டர்நேஷனல் சார்பாக K. கருணாமூர்த்தி - நவ்வி ஸ்டுடியோஸ் சார்பாக திவ்யா மாரி செல்வராஜ் மற்றும் மாரி செல்வராஜ் இணைந்து தயாரிக்கின்றனர்.


மனித வாழ்வின் வலி, எல்லைகள் மற்றும் ஒரு ஆழமான சமூக அக்கறை கொண்ட அழுத்தமான கதைக்களத்தில் ரசிகர்களை நெகிழச் செய்யும் படைப்பாக உருவாகி வருகிறது.


தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டிருக்கும் முதல் போஸ்டரில், பிரம்மாண்டமான விலங்கின் எலும்புக்கூட்டுக்குள் தனிமையில் நடந்து செல்லும் அமீரின் தோற்றம் மற்றும் இரண்டாம் போஸ்டரில் எங்கும் சிதறிக் கிடக்கும் விலங்குகளின் எலும்புக்கூடுகளுக்கு நடுவே ‘மாகாளி’ என்ற தலைப்பு இடம்பெற்றுள்ளது. இந்த போஸ்டர்கள் படத்தின் இருண்ட மற்றும் ஆழமான பின்னணியை வெளிப்படுத்துகிறது. வெறுமை, அழிவு, இயற்கையின் வலி மற்றும் சமூகத்தின் ஒரு மறைக்கப்பட்ட யதார்த்தம் போன்ற பல அடுக்குகளை உணர்த்தும் இந்தக் காட்சியமைப்பு, படத்தின் மீது கூடுதல் ஆர்வத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.


இப்படத்தில் அமீர், சுவாசிகா, அனிஷ்மா அனில்குமார், ஹரிஹரன், அஸ்வின் ராம் மற்றும் லெனின் பாரதி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.


இப்படத்திற்கு செல்வரத்தினம் பிரதீபன் ஒளிப்பதிவு செய்கிறார். செல்வா RK படத்தொகுப்பையும், ஜஸ்டின் பிரபாகரன் இசையையும் கவனிக்கின்றனர். ராமு தங்கராஜ் கலை இயக்கத்தையும், திலீப் சுப்பராயன் சண்டைப் பயிற்சியையும், வர்ஷினி சங்கர் ஆடை வடிவமைப்பையும் மேற்கொள்கின்றனர். சுரேன் ஜி மற்றும் அழகிய கூத்தன் ஒலி வடிவமைப்பிலும், கபிலன் விளம்பர வடிவமைப்பிலும், ஜெய்குமார் வைரவன் நிழற்படத்திலும், நாகேந்திரன் ஒப்பனையிலும் பணியாற்றுகின்றனர். வெங்கட் ஆறுமுகம் நிர்வாகத் தயாரிப்பாளராகவும், சதிஷ் மக்கள் தொடர்பு அதிகாரியாகவும் பணியாற்றுகிறார்.


‘மாகாளி’ படம் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

Romeo Pictures – Aviate Pictures இணையும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்!

 *Romeo Pictures – Aviate Pictures இணையும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்!*



பிரம்மாண்ட திரைப்படத் தயாரிப்பிலும், வெற்றிகரமான விநியோகத்திலும் முத்திரை பதித்த தயாரிப்பாளர் ராகுலின் Romeo Pictures நிறுவனம், தனது புதிய படத்தினை Aviate Pictures கோகுல் ஸ்ரீனிவாசனுடன் இணைந்து தயாரிக்கிறது. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று இனிதே துவங்கியது. ‘ரைட்டர்’ பட இயக்குநரும், ‘DC’ படத்தின் எழுத்தாளருமான ஃபிராங்க்ளின் ஜேக்கப் இப்படத்தை இயக்குகிறார்.


இளைய திலகம் பிரபு மற்றும் விஜய் வர்மா முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கும் இப்படத்தில், நடிகை ஷிவாத்மிகா ராஜசேகர் கதாநாயகியாக நடிக்கிறார். Romeo Pictures ராகுல் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்து நடிக்கிறார். டார்க் ஹியூமர் ஜானரில், வித்தியாசமான கதைக்களத்தில், திரில்லர் கலந்த காமெடி திரைப்படமாக இப்படம் உருவாகவுள்ளது.


படப்பிடிப்பின் முதல் நாளான இன்று, நடிகர் விக்ரம் பிரபு மற்றும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் ஆகியோர் படப்பிடிப்புத் தளத்திற்கு நேரில் வருகை தந்து, படக்குழுவினரை சந்தித்து தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர். இவர்களின் வருகை படக்குழுவினருக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியது.


இப்படத்தில் முத்துக்குமார், ரமேஷ் திலக், திலீப் சுப்பராயன், தீனா, அருண் மாதேஸ்வரன், கவிதா பாரதி மற்றும் அவினாஷ் ரகுதேவன் உள்ளிட்ட பலர் முன்னணி நட்சத்திரங்களாக இணைந்து நடிக்கின்றனர்.


இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். பிரதீப் காளிராஜா ஒளிப்பதிவு செய்ய, பிரசன்னா G.K படத்தொகுப்புப் பணிகளை மேற்கொள்கிறார். P.C. ஸ்டன்ட்ஸ் சண்டைப் பயிற்சியைக் கவனிக்க, யுகபாரதி பாடல்களை எழுதுகிறார். நவ்ஷாத் அகமது ஆடை வடிவமைப்பையும், சக்தி வெங்கட்ராஜ் M கலை இயக்கத்தையும் மேற்கொள்கின்றனர்.


வித்தியாசமான கதைக்களத்தில், அனுபவம் வாய்ந்த நடிகர் பிரபு மற்றும் இளம் தலைமுறை நடிகர்கள் இணையும் இந்தப் புதிய படம், ரசிகர்களுக்கு ஒரு புதுமையான திரையரங்க அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் தலைப்பு மற்றும் இதர முக்கிய தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவுள்ளன.

ஹாய்’ படத்திற்கு கிடைத்த வரவேற்பு மகிழ்ச்சியில் – பத்திரிகை, ஊடக நண்பர்களைச் சந்தித்து நன்றி தெரிவித்த படக்குழு!

 *‘ஹாய்’ படத்திற்கு கிடைத்த வரவேற்பு மகிழ்ச்சியில் – பத்திரிகை, ஊடக நண்பர்களைச் சந்தித்து நன்றி தெரிவித்த படக்குழு!*









நயன்தாரா மற்றும் கவின் முதன்முறையாக இணைந்து நடித்த ‘ஹாய்’ திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 28 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான நிலையில், ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் பெரும் பாராட்டுகளைப் பெற்று, வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. படத்திற்கு கிடைத்து வரும் வரவேற்பு மற்றும் ஆதரவுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, படக்குழுவினர் பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களைச் சந்தித்து தங்களது நன்றியைத் தெரிவித்தனர்.


இந்த சந்திப்பில் படத்தில் பணியாற்றிய நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் கலந்து கொண்டு, ‘ஹாய்’ திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் கிடைத்து வரும் வரவேற்பு குறித்து தங்களது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர்.


இந்நிகழ்வில்…


தயாரிப்பாளர் எஸ். எஸ். லலித்குமார் பேசுகையில்,


“முதலில் பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி. நீங்கள் இல்லாமல் எந்தப் படத்தையும் மக்கள் மத்தியில் சரியான முறையில் கொண்டு சேர்ப்பது சாத்தியமில்லை. ‘ஹாய்’ திரைப்படத்திற்கும் நீங்கள் தொடர்ந்து அளித்து வரும் ஆதரவுக்கு மிகுந்த நன்றி. இந்தப் படத்தை உருவாக்கியபோது, பெரிய படங்களுக்குப் பிறகு ஏன் இப்படிப்பட்ட படத்தைத் தயாரிக்கிறீர்கள் என்று பலர் கேட்டார்கள். நல்ல கதையையும், நல்ல படத்தையும் ரசிகர்களுக்குக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் இந்தப் படத்தைத் தயாரித்தோம். இன்று அதற்கு கிடைத்து வரும் வரவேற்பு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது,” என்றார்.


“இந்த மேடையில் இருக்கும் அனைவருடனும் எனக்கு மிகவும் நெருக்கமான உறவு உள்ளது. குறிப்பாக பிரபு சார் படப்பிடிப்பின்போது காட்டிய அன்பை மறக்க முடியாது. தூத்துக்குடி படப்பிடிப்புக்கு வருவதற்கு முன்பே என்னைத் தொடர்புகொண்டு, ‘தம்பி, நீ எதுவும் சாப்பிடாதே, வீட்டில் இருந்து உணவு கொண்டு வருகிறேன், என்னிடம்தான் சாப்பிட வேண்டும்’ என்று அன்புடன் கூறினார். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் அவர் காட்டிய அந்த பாசத்திற்கும் அன்பிற்கும் நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். அவருடன் நிறைய விஷயங்களில் சண்டை போட்டிருக்கிறேன், அதே நேரத்தில் அந்த உறவில் இருக்கும் அன்புதான் மிகப்பெரியது,” என்றார்.


“பிலோவுடன் எனக்கு குடும்பம் போன்ற உறவு. இதுவரை நான்கு படங்களில் அவருடன் இணைந்து பணியாற்றியுள்ளேன். அதனால் அவரைப் பற்றி பேசுவதற்கே ஒரு தனி நெருக்கம் இருக்கிறது. இந்தப் படத்திற்காக உழைத்த நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஒவ்வொருவரின் பங்களிப்பும் இந்த வெற்றிக்கு முக்கியமானது,” என்றார்.


“விஷ்ணு கதை சொல்லும் விதமே மிகவும் தனித்துவமானது. அவர் கதையை விவரிக்கும்போதே அந்தக் கதையின் உணர்வை நம்மால் முழுமையாக உணர முடியும். அவர் முதலில் கதை சொல்லியபோதே அந்த எமோஷன் என்னை மிகவும் கவர்ந்தது. இன்று அந்தக் கதையை ஒரு நல்ல படமாக உருவாக்கி ரசிகர்களிடம் கொண்டு சேர்த்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. விஷ்ணுவுக்கும், இந்தப் படத்திற்காக உழைத்த அனைத்து நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி,” என்றார்.



ஒளிப்பதிவாளர் ராஜேஷ் சுக்லா பேசுகையில்..,


“அனைவருக்கும் நன்றி. படப்பிடிப்பு முழுவதும் என் மீது அன்பும் அக்கறையும் காட்டியதற்கும், சிறப்பான உணவு மற்றும் பரிசுகளை வழங்கியதற்கும் நன்றி. இந்தப் படத்தில் பணியாற்ற எனக்கு வாய்ப்பு அளித்ததற்காக படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இயக்குநர் விஷ்ணுவுடன் இணைந்து பணியாற்றியது மிகவும் மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது. அவர் முதன்முதலில் என்னிடம் கதையை விவரித்தபோதே, அவர் ஒரு சிறப்பான படத்தை உருவாக்குவார் என்ற நம்பிக்கை எனக்கு ஏற்பட்டது. அந்த நம்பிக்கை இன்று நிஜமாகியிருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. விஷ்ணுவை நான் அன்பாக ‘தளபதி’ என்றுதான் அழைப்பேன். இந்த வாய்ப்புக்கும் படக்குழுவினரின் அன்பிற்கும் அனைவருக்கும் தனது நன்றி.



இசையமைப்பாளர் ஜென் மார்ட்டின் பேசுகையில்..,


“அனைவருக்கும் நன்றி. இயக்குநர் விஷ்ணுவுடனும், நடிகர் கவினுடனும் இணைந்து பணியாற்றுவது எனக்கு இது நான்காவது படம். கவின் எனக்கு பள்ளிக் கால நண்பர். பள்ளி நாட்களில், ‘நீ நடிகராக வருவாய், நான் இசையமைப்பாளராக வருவேன்’ என்று நாங்கள் பேசிய நாட்களில் இருந்து இன்று இந்த தருணம் வரை வந்திருப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. எங்களது கனவு இன்று நனவாகியிருப்பதைப் போல் உணர்கிறேன். இந்தப் படம் நல்ல வெற்றியைப் பெற்றிருப்பது எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி. கவினுடன் இது எனது நான்காவது படம் என்பதால், அவர் என்மீது வைத்துள்ள நம்பிக்கையை ஒரு அளவுக்காவது காப்பாற்றியிருக்கிறேன் என்று நம்புகிறேன். இந்தப் படத்தின் இசையும் ரசிகர்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறேன். அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை நன்றி,” என்றார்.


நடிகை அம்ருதா சீனிவாசன் பேசுகையில்..,


“என்னை மேடைக்கு அழைத்து பேச வைப்பார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை. ஊடக நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றி. பிரபு சார், ராதிகா மேம், சுகாசினி மேம் போன்ற மூத்த கலைஞர்கள் முன்னிலையில் நிற்பதே எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியும் பெருமையும். ‘ஹாய்’ உண்மையிலேயே ஒரு அழகான ஃபீல்-குட் திரைப்படம். இப்படிப்பட்ட படங்கள் தமிழ் சினிமாவில் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து ரசிப்பவை. இசை, படத்தொகுப்பு, இயக்கம், கதை என ஒவ்வொரு துறையினரும் ஒன்றிணைந்து பங்களித்தால்தான் இப்படிப்பட்ட ஒரு முழுமையான திரைப்படத்தை உருவாக்க முடியும். இயக்குநர் விஷ்ணு ஒவ்வொரு ஃபிரேமையும் மிகவும் கவனமாகவும் அழகாகவும் செதுக்கியுள்ளார். படத்தைப் பார்த்துவிட்டு வெளியே வரும்போது மிகவும் மகிழ்ச்சியான உணர்வு கிடைத்தது. ரசிகர்களுக்கும் அதே அனுபவம் கிடைக்கும் என்று நம்புகிறேன். தொடர்ந்து வரும் வாரங்களிலும் ரசிகர்கள் படத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டும். இந்தப் படத்தை சிறப்பாக உருவாக்கிய லலித் சார், பிலோமின் ராஜ் சார், ஜென் மார்ட்டின் சார் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி,” என்றார்.



நடிகர் குரேஷி பேசுகையில்..,


“பொதுவாக பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக இருந்து நடிகர்களை வரவேற்றுள்ளேன். ஆனால், இன்று ஒரு நடிகராக இந்த மேடையில் நிற்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. என்மீது நம்பிக்கை வைத்து, இந்தப் படத்தில் நண்பன் கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு அளித்த படக்குழுவினருக்கு நன்றி. குறிப்பாக கவின் அண்ணாவுக்கு என் நன்றி. இயக்குநர் விஷ்ணு மிகவும் நல்ல மனிதர். மழை, புயல், வெள்ளம் என எத்தகைய சவால்கள் வந்தாலும் அவற்றையெல்லாம் சமாளித்து, வெற்றியாக மாற்றும் திறமை அவருக்கு உள்ளது. அவருடன் இந்தப் பயணத்தில் இணைந்து பணியாற்றியது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.


பிரபு சார், ராதிகா மேடம் போன்ற மூத்த கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றியது மறக்க முடியாத அனுபவம். குறிப்பாக பிரபு சார் என்னிடம் மிகவும் இயல்பாகவும் அன்பாகவும் பழகினார். புதிய நடிகர் என்ற எந்தத் தயக்கத்தையும் எனக்கு ஏற்படுத்தாமல், தானாகவே வந்து பேசுவார், அன்பாக விசாரிப்பார். அவருடன் பகிர்ந்து கொண்ட அந்த தருணங்கள் என்றும் மறக்க முடியாதவை. ராதிகா மேடத்துடன் ஏற்கனவே ஒரு நிகழ்ச்சியில் பணியாற்றியுள்ளேன். இந்தப் படத்தில் அவருடன் இணைந்து நடித்த அனுபவமும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அவர் மிகவும் கலகலப்பானவர்; நம்மை கிண்டல் செய்து சிரிக்க வைப்பதிலும் வல்லவர்.


மேலும், இசையமைப்பாளர் ஜென் மார்ட்டின் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவருடனும் பணியாற்றியது மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது. படக்குழுவினர் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இனி மேலும் பல படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. என்னிடம் இன்னும் நிறைய திறமைகள் இருப்பதாக நானே நம்புகிறேன். எனவே, எனக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கி ஆதரிக்க வேண்டும்,” என்றார்.


நடிகை காவ்யா பேசுகையில்..,


“ ஹாய்’ படத்திற்கு மக்கள் மத்தியில் இருந்து கிடைத்து வரும் அன்பும் வரவேற்பும் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இந்த மேடையில் இன்று நிற்பது எனக்கு மிகவும் மதிப்புமிக்க தருணம். கல்லூரி காலத்தில் ராதிகா மேடத்தைப் பார்த்து, அவரைப் போல ஒரு பெரிய நடிகையாக வேண்டும் என்று கனவு கண்டேன். இன்று அவருடனேயே திரையைப் பகிர்ந்து நடித்திருப்பது எனக்கு கனவு நனவான தருணமாக உள்ளது. ‘மைதிலி’ கதாபாத்திரத்தில் நடிக்க என்மீது நம்பிக்கை வைத்த படக்குழுவினருக்கும், அந்தக் கதாபாத்திரத்திற்கு அன்பு அளித்து வரும் ரசிகர்களுக்கும் மனமார்ந்த நன்றி. இது எனது பயணத்தின் தொடக்கம் மட்டுமே; இனி மேலும் நல்ல கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் அன்பைப் பெற வேண்டும்,” என்றார்.


இயக்குநர் விஷ்ணு எடவன் பேசுகையில்..,


“ஹாய்’ என் முதல் திரைப்படம் என்பதால், இந்த மேடையில் இயக்குநராக நிற்பது எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியான தருணம். இந்தப் பயணத்தில் எனக்கு வாய்ப்பளித்து, என்னை நம்பி இந்தப் படத்தை உருவாக்க உதவிய அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. குறிப்பாக, என் ஆரம்பகால சினிமா பயணத்தில் எனக்கு அடையாளம் கிடைக்க காரணமாக இருந்தவர்களுக்கும், என்னை தொடர்ந்து ஊக்கப்படுத்தி ஆதரித்தவர்களுக்கும் நான் எப்போதும் நன்றியுள்ளவனாக இருப்பேன்.


இந்தப் படத்தில் நடித்த ஒவ்வொரு கலைஞரும் என்மீது நம்பிக்கை வைத்து, தங்களது முழுமையான ஒத்துழைப்பை வழங்கினர். மூத்த நடிகர்கள் முதல் இளம் நடிகர்கள் வரை அனைவரும் தங்களது கதாபாத்திரங்களை சிறப்பாகக் கொண்டு வந்தனர். சத்யன் சார், குரேஷி, அக்ஷய் குமார், அம்ருதா, காவ்யா உள்ளிட்ட அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. எனது முதல் படத்திலேயே இவ்வளவு திறமையான நடிகர்களுடன் பணியாற்றியது எனக்குப் பெருமையான விஷயம்.


இசையமைப்பாளர் ஜென் மார்ட்டினுடனான நட்பு பள்ளிப் பருவத்திலிருந்தே தொடர்கிறது. பள்ளி நாட்களிலேயே ‘நான் இயக்குநராவேன், நீ இசையமைப்பாளராவாய்’ என்று பேசிக் கொண்டிருந்தோம். இன்று எனது முதல் படத்திற்கு அவரே இசையமைத்திருப்பது எனக்கு மிகவும் உணர்வுப்பூர்வமான மகிழ்ச்சியை அளிக்கிறது. அதேபோல் ஒளிப்பதிவாளர் ராஜேஷ் சுக்லா, படத்தொகுப்பாளர் பிலோமின் ராஜ் உள்ளிட்ட தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் இந்தப் படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருந்தனர். அவர்களின் பங்களிப்பு இல்லாமல் நான் வழி தெரியாமல் இருந்திருப்பேன்.


எனக்கு வாய்ப்பளித்து, என் மீது நம்பிக்கை வைத்து இந்தப் படத்தின் பின்னால் உறுதுணையாக நின்ற தயாரிப்பாளர்கள் விக்னேஷ் சிவன் அண்ணா, நயன்தாரா மேம், எஸ். எஸ். லலித்குமார் சார் மற்றும் அனைத்து தயாரிப்பாளர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி. படப்பிடிப்பு தொடங்கியது முதல் படம் வெளியாகி வெற்றி பெறும் வரை, பலரும் பல்வேறு வகையில் எனக்கு ஆதரவாக இருந்தனர். இந்தப் படம் எனக்கு மட்டும் கிடைத்த வெற்றியல்ல; என்னை நம்பி இந்தப் பயணத்தில் இணைந்த ஒவ்வொருவருக்கும் கிடைத்த வெற்றி. அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி,” என்றார்.



நடிகை ராதிகா சரத்குமார் பேசுகையில், “முதலில் ‘ஹாய்’ படக்குழுவினர் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள். இன்றைய சூழலில் ஒரு படம் வெற்றிகரமாக ஓடுவது என்பது மிகவும் சவாலான விஷயம். பல்வேறு சவால்களுக்கு மத்தியில் இந்தப் படத்தை உருவாக்கி, ரசிகர்களிடம் கொண்டு சேர்த்து வெற்றி பெற்றிருக்கும் படக்குழுவினருக்கு என் பாராட்டுகள். இயக்குநர் விஷ்ணு பல சவால்களைக் கடந்து இந்த வெற்றியைப் பெற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது,” என்றார்.


“நான் இன்னும் படத்தைப் பார்க்கவில்லை என்றாலும், படத்தைப் பார்த்த பலரும் மிகவும் ரசித்ததாகவும், உணர்ச்சிப்பூர்வமான அனுபவமாக இருந்ததாகவும் கூறியுள்ளனர். பாக்யராஜ் சாருடன் பணியாற்றிய அனுபவம் மிகவும் இனிமையானது. நகைச்சுவையாகப் பழகும் அவர், தனது அனுபவத்தின் மூலம் பல அருமையான ஆலோசனைகளையும் வழங்குவார். அதேபோல், பிரபு சார் எனக்கு மிகவும் பிடித்த சக நடிகர். அவரது குடும்பத்தின் விருந்தோம்பலும், சினிமா மீதான அன்பும் எப்போதும் சிறப்பானது,” என்றார்.


“கவினின் ‘டாடா’ படத்தைப் பார்த்தபோதே அவருக்கு சிறப்பான எதிர்காலம் இருப்பதாக நினைத்தேன். ‘ஹாய்’ படத்தின் வெற்றிக்கும், அவரது பயணத்திற்கும் வாழ்த்துகள். விஷ்ணுவுக்கும் அவரது வெற்றிக்கும் புதிய வாழ்க்கைப் பயணத்திற்கும் வாழ்த்துகள். மேலும், விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் வெற்றியில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. நயன்தாரா வெளியில் மென்மையானவராகத் தோன்றினாலும், மனதளவிலும் உடல் ரீதியாகவும் மிகவும் வலிமையானவர். இந்த வெற்றிக்காக படக்குழுவினர் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது மனமார்ந்த வாழ்த்துகள்,” என்றார்.


நடிகை சுஹாசினி பேசுகையில்,


“ ‘ஹாய்’ படத்தில் எனக்கு ஒரு காட்சி மட்டுமே இருந்தாலும், அதில் பணியாற்றியது மகிழ்ச்சியாக இருந்தது. இயக்குநர் விஷ்ணுவுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். இது அவரது பயணத்தின் ஆரம்பம் மட்டுமே. ஆரம்பத்திலேயே பல சவால்களைச் சந்தித்திருக்கலாம், ஆனால் அவை அனைத்தையும் கடந்து இனி அவரது பயணம் மேலும் மகிழ்ச்சியாகத் தொடர வேண்டும் என்று வாழ்த்துகிறேன்,” என்றார்.


மேலும், “இந்தப் படத்திற்காக அனைவரும் கடுமையாக உழைத்திருக்கிறீர்கள். அந்த உழைப்புக்கான பலன் இன்று கிடைத்திருப்பது மகிழ்ச்சி. கடந்த இரண்டு நாட்களாக ‘ஹாய்’ படத்தைப் பற்றியே பலரும் நல்ல விதமாகப் பேசுவதை கேட்டு வருகிறேன். இந்த வெற்றிக்கு நீங்கள் அனைவரும் தகுதியானவர்கள். இப்படிப்பட்ட மகிழ்ச்சியான தருணங்கள் வாழ்க்கையில் அடிக்கடி கிடைப்பதில்லை. எனவே, இந்த வெற்றியை முழுமையாக மகிழ்ந்து கொண்டாடுங்கள். ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்,” என்றார்.




நடிகர் பிரபு பேசுகையில்..,


“ ‘ஹாய்’ ஒரு அருமையான படக்குழு. இந்தப் படத்தில் அனைவருடனும் இணைந்து பணியாற்றிய அனுபவம் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இயக்குநர் விஷ்ணு எனக்கு நல்ல கதாபாத்திரம் கொடுத்து, இந்தப் படத்தில் நடிக்க வாய்ப்பளித்ததற்கு நன்றி. தயாரிப்பாளர் லலித்குமார் சாருக்கும், இந்த வாய்ப்பிற்காக என்னை அழைத்த நயன்தாராவுக்கும் எனது நன்றி. படப்பிடிப்பு முழுவதும் மிகவும் மகிழ்ச்சியான சூழல் நிலவியது. பாக்யராஜ் சாருடன் இணைந்து இருந்த தருணங்களும் மறக்க முடியாதவை,”.


“கவின் இந்தப் படத்தில் மிகவும் சிறப்பாக நடித்திருக்கிறார். அவரிடம் நிறைய திறமையும், நல்ல எதிர்காலத்திற்கான பலமும் இருக்கிறது. தொடர்ந்து இன்னும் சிறப்பாக வளர வேண்டும். ஜென் மார்ட்டினின் இசையும் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது. படக்குழுவில் உள்ள அனைவரும் தங்களது பணியை சிறப்பாகச் செய்துள்ளனர். ‘ஹாய்’ படத்திற்கு கிடைத்து வரும் நல்ல விமர்சனங்களும், நேர்மறையான வரவேற்பும் மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது,”.


மேலும், “படக்குழுவினர் அனைவரும் கடுமையாக உழைத்துள்ளனர். குறிப்பாக விஷ்ணு படப்பிடிப்பின்போது பல சவால்களைச் சந்தித்தார். சில நேரங்களில் சிரிப்பார், சில நேரங்களில் அழுத்தத்தில் இருப்பார். ஆனால், இன்று இந்த வெற்றியால் அவர் மகிழ்ச்சியாக இருப்பதைப் பார்ப்பது சந்தோஷமாக உள்ளது. பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களும் படத்திற்கு தொடர்ந்து நேர்மறையான ஆதரவை அளித்து வருகிறீர்கள். இந்த உற்சாகத்துடன் ‘ஹாய்’ படம் இன்னும் பெரிய வெற்றியைப் பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன். இந்தப் படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை நன்றி,” என்றார்.



நடிகர் கவின் பேசுகையில்..,


“முதலில் அனைவருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி. மாதத்தின் கடைசியில் வெளியான ‘ஹாய்’ படத்திற்கு நீங்கள் அளித்த ஆதரவு எங்களுக்கு ஆச்சரியமும் மகிழ்ச்சியும் கலந்த உணர்வைத் தந்துள்ளது. சமீபத்தில் தொடர்ந்து பல நல்ல படங்கள் வெளியாகி வரவேற்பைப் பெற்ற நிலையில், ‘ஹாய்’ படத்திற்கும் ரசிகர்கள் எந்த அளவுக்கு ஆதரவு அளிப்பார்கள் என்ற ஒரு சிறிய பதற்றம் இருந்தது. ஆனால், தற்போது பல ஊர்களில் திரையரங்குகளுக்குச் செல்லும்போது கூட ரசிகர்கள் உற்சாகமாக படத்தை ரசிப்பதைப் பார்க்க முடிகிறது. அதற்காக அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.


புதிய மாதம் தொடங்கியுள்ள நிலையில், குடும்பத் தேவைகளுக்கான செலவுகளை எல்லாம் செய்து முடித்த பிறகு, பொழுதுபோக்கிற்காக நீங்கள் ஒதுக்கும் நேரத்தையும் பணத்தையும் இந்த வார இறுதியில் ‘ஹாய்’ படத்திற்காக செலவிட்டால், மனம் நிறைந்த மகிழ்ச்சியுடன் திரும்பிச் செல்வீர்கள் என்பதை உறுதியாகச் சொல்ல முடியும். திரையரங்குகளில் ரசிகர்கள் சிரித்து, மகிழ்ந்து, சில காட்சிகளில் உணர்ச்சிவசப்பட்டு படத்தை ரசிப்பதைப் பார்க்கும்போது, நாங்கள் நினைத்த நோக்கம் நிறைவேறிய திருப்தி கிடைக்கிறது. குடும்பத்துடன் அனைவரும் ஒன்றாக அமர்ந்து, கவலைகளை மறந்து ரசிக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் இந்தப் படத்தை எளிமையாகவும் அழகாகவும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் உருவாக்கினோம்.


இயக்குநர் விஷ்ணுவின் இந்தப் பயணம் மிகவும் சிறப்பானது. பொதுவாக ஒரு படம் வெற்றி பெற்றால்தான் ஒருவருடைய வாழ்க்கை மாறும் என்று சொல்வார்கள். ஆனால், ‘ஹாய்’ படத்தின் பயணமும் விஷ்ணுவின் தனிப்பட்ட வாழ்க்கைப் பயணமும் இணைந்தே நகர்ந்தது. படம் தொடங்கிய காலகட்டத்தில் அவருடைய திருமண ஏற்பாடுகளும் நடைபெற்றன. படப்பிடிப்பு ஒருபுறம் நடந்துகொண்டிருக்க, மறுபுறம் தனது வாழ்க்கையின் முக்கியமான அத்தியாயத்திற்கும் அவர் தயாராகிக் கொண்டிருந்தார். ஆரம்பத்தில் மிக வேகமாகத் தொடங்கிய படப்பிடிப்பு, பல்வேறு காரணங்களால் நீண்ட பயணமாக மாறினாலும், இன்று படம் வெற்றிபெற்று அனைவரும் ஒன்றாகக் கொண்டாடுவது மகிழ்ச்சியாக இருக்கிறது.

நான் எப்போதும் இலக்கை அடைவதைவிட, அந்த இலக்கை நோக்கிய பயணம்தான் முக்கியம் என்று நம்புவேன். ஒரு படம் வெற்றி பெறுகிறதா, தோல்வி அடைகிறதா என்பது ஒரு கட்டம் மட்டுமே. ஆனால், அந்தப் பயணத்தில் நாம் சந்திக்கும் மனிதர்கள், நமக்காக நிற்பவர்கள், நமக்கு ஆதரவாக இருப்பவர்கள்தான் வாழ்க்கை முழுவதும் நம்முடன் வரும் உண்மையான பலம். அந்த வகையில் ‘ஹாய்’ படத்தின் பயணம் எனக்கு மிகவும் அழகான அனுபவமாக அமைந்தது.


கதை கேட்டவுடன் விஷ்ணுவிடம், ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் அவர் நினைத்த நடிகர்களே நடிக்க வேண்டும் என்று சொன்னேன். ராதிகா மேடம், பிரபு சார், சுகாசினி மேடம், பாக்யராஜ் சார் என ஒவ்வொருவரையும் தாண்டி வேறு யாரையும் அந்தக் கதாபாத்திரங்களில் கற்பனை செய்ய முடியவில்லை. அந்த நடிகர்கள் இணைந்தால்தான் இந்தக் கதைக்கு முழுமையான பலம் கிடைக்கும் என்று அப்போதே உணர்ந்தேன். இன்று அந்தக் குழுவினர் அனைவரும் ஒன்றாக அமர்ந்து இந்தப் படத்தின் வெற்றியைப் பகிர்ந்து கொள்வதைப் பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது,” இந்த வெற்றியை பெற்று தந்த பத்திரிக்கை ஊடக நண்பர்கள் அனைவருக்கும் நன்றி என்றார்.


அறிமுக இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கத்தில் veliyaana ‘ஹாய்’ திரைப்படத்தில் நயன்தாரா, கவின், கே. பாக்யராஜ், பிரபு, ராதிகா சரத்குமார், விடிவி கணேஷ், சத்யன், ‘ஆதித்யா’ கதிர், குரேஷி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ராஜேஷ் சுக்லா ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஜென் மார்ட்டின் இசையமைத்துள்ளார். படத்தொகுப்பை பிலோமின் ராஜ் மேற்கொண்டுள்ள நிலையில், கலை இயக்கத்தை எஸ். கண்ணன் கவனித்துள்ளார்.


முழுக்க முழுக்க குடும்பத்துடன் ரசிக்கும் வகையிலான ஃபேமிலி என்டர்டெய்னராக வெளிவந்த இப்படத்தை ஜீ ஸ்டுடியோஸ், தி ரவுடி பிக்சர்ஸ் மற்றும் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனங்கள் சார்பில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் மற்றும் எஸ். எஸ். லலித்குமார் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். வினோத் சி. ஜே. மற்றும் கே. எஸ். மயில்வாகனன் இணை தயாரிப்பாளர்களாகவும், வி. கே. குபேந்திரன் கிரியேட்டிவ் புரொடியூசராகவும் பணியாற்றியுள்ளனர்.


கடந்த ஆகஸ்ட் 28 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியான ‘ஹாய்’ திரைப்படம், தற்போது ரசிகர்களின் உற்சாகமான வரவேற்புடன் அரங்கு நிறைந்த காட்சிகளாக வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

7 Star Boys Movie Review

7 Star Boys Tamil Movie Review


ஹாய் மக்களே! இன்னிக்கு நம்ம பார்க்கப் போறது ஒரு football background-ல வந்திருக்கிற ஒரு cute-ஆன, feel-good sports movie. படத்தோட பெயர் ‘7 Star Boys’



பொதுவாவே sports movieன்னு சொன்னாலே நம்ம mind-ல என்ன வரும்? பெரிய stadium, thousands of audience, hero-வோட mass entry, motivational dialogues, கடைசில ஒரு பெரிய வெற்றி… இதுதான் நமக்கு immediately ஞாபகம் வரும்.


ஆனா இந்த படம் அந்த formula-வை follow பண்ணாம, ரொம்ப simple-ஆ ஒரு விஷயத்தை சொல்லுது.


ஒரு சின்ன ஊர்ல இருக்குற ஒரு பையனுக்கு football மேல passion இருந்தா போதும்… அவனோட கனவு எவ்வளவு பெரியதாகவும் இருக்கலாம். அந்த கனவை நம்பி அவன் முயற்சி பண்ணும்போது, அவனுக்கு சரியான support கிடைச்சா என்ன நடக்கும் என்பதைத்தான் இந்த படம் நமக்கு காட்டுது.


இந்த படம் மலையாளத்துல Aanaparambile World Cup’ என்ற பெயர்ல ஏற்கனவே வெளியாகி இருந்தது. இப்போ தமிழ் audience-க்காக ‘7 Star Boys’ என்ற பெயர்ல வந்திருக்கு.


படத்தை இயக்கியிருக்கிறது Nikhil Premraj Main role-ல Antony Varghese நடித்திருக்காரு. அதோட இன்னொரு special என்னன்னா, முன்னாள் Indian football player I.M. Vijayan-ம் படத்துல முக்கியமான கதாபாத்திரத்துல நடித்திருக்காரு.


சரி… இப்போ கதைக்குள்ள போகலாம்.


இந்த படத்தோட centre-ல இருக்கிறது ஒரு group of school boys.


இவங்களுக்கு footballன்னா சாதாரண விளையாட்டு கிடையாது. அதுதான் அவங்களோட உலகமே. நேரம் கிடைச்சாலே ground-க்கு போயிடுவாங்க. Ball-ஐ எடுத்துக்கிட்டு விளையாட ஆரம்பிச்சா, வேற எதுவுமே அவங்களுக்கு ஞாபகத்துல இருக்காது.


அவங்களுக்குள்ள ஒரு common dream இருக்கு.


எப்படியாவது football-ல நல்லா வரணும். பெரிய அளவுல விளையாடணும். தங்களோட talent-ஐ prove பண்ணணும்.


ஆனா நம்ம எல்லாருக்குமே தெரியும்…


கனவு காண்றது easy… அதை அடையுறதுக்கான வாய்ப்பு கிடைக்கிறது தான் difficult.


Talent இருந்தாலும் அதை சரியான direction-ல கொண்டு போக ஒருத்தர் தேவை. அதுதான் இந்த பசங்களுக்கு ஆரம்பத்துல பெரிய challenge.


அந்த நேரத்துலதான் Antony Varghese-ோட character அவங்க வாழ்க்கைக்குள்ள வருது.


இந்த பசங்க football-ஐ எவ்வளவு serious-ஆ எடுத்துக்கிறாங்கன்னு அவர் புரிஞ்சுக்கிறாரு. அவங்க talent-ஐ கவனிக்கிறாரு. அதுக்கப்புறம் அந்த குழந்தைகளோட dream-க்கு ஒரு support system-ஆ மாறுறாரு.


அதுக்கப்புறம் அவங்களுக்கு கிடைக்கிற opportunities, training, போட்டிக்கு தயாராகுற விதம், நடுவுல வர்ற challengesன்னு கதை கொஞ்சம் கொஞ்சமா interesting-ஆ நகருது.


இதுக்கு மேல story சொன்னா climax-ல என்ன நடக்குதுன்னு நாம சொல்ல வேண்டியிருக்கும். அதனால அந்த portion-ஐ நான் reveal பண்ணல.


இந்த படத்துல எனக்கு ரொம்ப பிடிச்ச விஷயமே, இந்த குழந்தைகளுக்கு கொடுத்திருக்கிற importance தான்.


ஏன்னா ஒரு sports movieன்னா hero தான் எல்லாத்தையும் பண்ணி ஜெயிச்சுக் காட்டுற மாதிரி நிறைய படங்கள் பார்த்திருப்போம்.


ஆனா இங்க அப்படி கிடையாது.


Antony Varghese இருந்தாலும், camera எப்போதும் அவரை மட்டும் follow பண்ணிக்கிட்டு இருக்காது. அந்த சிறுவர்களோட journey-க்கும் நிறைய space கொடுத்திருக்காங்க.


அவங்க friendship…


அவங்க சின்ன சின்ன fights…


ஒருத்தரை ஒருத்தர் கலாய்க்குறது…


Football விளையாடும்போது காட்டுற excitement…


ஜெயிக்கணும்னு நினைக்குற அந்த determination…


இதெல்லாம்தான் படத்தோட real charm.


சில scenes-ல இவங்க எல்லாரும் acting பண்றாங்கன்னு கூட நமக்கு தோணாது. நிஜமாவே ஒரு கிராமத்துல football விளையாடுற பசங்களோட வாழ்க்கையை camera capture பண்ணுற மாதிரி இருக்கும்.


அதனாலதான் இந்த movie-க்கு ஒரு natural feel கிடைக்குது.


Antony Varghese-ஐ பொறுத்தவரைக்கும், அவருக்கு கொடுத்திருக்கிற role-ஐ ரொம்ப சரியா புரிஞ்சு நடித்திருக்காரு.


அவருக்கு unnecessary-ஆ hero elevation கொடுக்கல. அந்த பசங்களோட interact பண்றது, அவங்களுக்கு confidence கொடுக்குறது, அவங்களோட சேர்ந்து சந்தோஷப்படுறது என எல்லாமே ரொம்ப casual-ஆ இருக்கு.


அவரோட energy இந்த character-க்கு நல்லா suit ஆகுது.


அதே மாதிரி I.M. Vijayan வர்றது இன்னொரு interesting factor.


ஒரு real-life football legend-ஐ இந்த பசங்களுக்கு football சொல்லிக் கொடுக்குற character-ல பார்க்கும்போது, அந்த portions இன்னும் believable-ஆ feel ஆகுது.


அவரோட football knowledge-ம், screen presence-ம் அந்த scenes-க்கு நல்ல weight கொடுக்குது.


இப்போ first half-ஐ பற்றி சொன்னா…


முதல் பாதி முழுக்க football match-ஐ மட்டும் focus பண்ணாம, இந்த பசங்க யாரு, அவங்களோட world என்ன, football மேல அவங்களுக்கு ஏன் இவ்வளவு passionன்னு நமக்கு புரிய வைக்குற மாதிரி போகுது.


அதனால ஆரம்பத்துல கொஞ்சம் relaxed pace இருக்கும்.


ஆனா எனக்கு அது ஒரு positive-ஆதான் தோணுது.


ஏன்னா climax-ல அந்த பசங்களுக்காக நாம tension ஆகணும்னா, முதல்ல அவங்களோட journey-யை நாம understand பண்ணணும் இல்லையா?


அதுக்கு இந்த ஆரம்ப portion நல்ல foundation போடுது.


அதுக்கப்புறம் story முக்கியமான football tournament-ஐ நோக்கி move ஆக ஆரம்பிச்சதும், படத்தோட energy-யும் கொஞ்சம் கொஞ்சமா அதிகரிக்குது.


குறிப்பா last 30 minutes தான் இந்த படத்தோட biggest highlight.


அந்த match ஆரம்பிச்சதும் நம்மளுக்கும் ஒரு curiosity வந்துடும்.


யாரு ஜெயிப்பாங்க?


எந்த team முன்னாடி போகும்?


இந்த பசங்க இவ்வளவு நாளா போட்ட effort-க்கு என்ன result கிடைக்கும்?


அப்படின்னு நாம screen-ஐ கவனிக்க ஆரம்பிச்சிடுவோம்.


ஒரு football match-ஐ வெறும் game-ஆ காட்டாம, அந்த பசங்களோட dream-க்கு ஒரு final test மாதிரி present பண்ணியிருக்காங்க.


அதனால அந்த match portions நல்லா connect ஆகுது.


குறிப்பா ball ஒரு side-ல இருந்து இன்னொரு side போகும்போது, அடுத்து என்ன நடக்கும்னு தெரிஞ்சுக்கணும்னு ஒரு excitement வருது.


Sports movie-க்கு தேவையான அந்த adrenaline feel-ஐ climax நல்லாவே கொடுக்குது.


அதோட இன்னொரு நல்ல விஷயம் என்னன்னா, படம் முழுக்க serious mood-ல இருக்காது.


Kids சம்பந்தப்பட்ட scenes-ல நிறைய fun இருக்கு.


அவங்க பேசுற விதம், ஒருத்தரை ஒருத்தர் கலாய்க்குறது, Antony Varghese கூட சேர்ந்து வர்ற சில situationsன்னு ஆங்காங்கே comedy மற்றும் light moments இருக்கு.


அதனால movie ஒரு heavy emotional sports drama-ஆ மாறாம, family audience-க்கும் easy-ஆ connect ஆகுற மாதிரி இருக்கு.


Emotion-ஐ பொறுத்தவரைக்கும் கூட, “இப்போ audience அழணும்”ன்னு force பண்ணாம, அந்த பசங்களோட dream மற்றும் struggle மூலமாவே emotion வர வைக்கிறாங்க.


அதுதான் இன்னும் natural-ஆ feel ஆகுது.


Technical side-லயும் படம் நல்லா இருக்கு.

Fayaz Siddik வோட  cinematography ரொம்ப pleasant-ஆ இருக்கு.


கிராமத்து surroundings, football ground, குழந்தைகள் விளையாடுற அந்த atmosphere எல்லாத்தையும் நல்லா capture பண்ணியிருக்காரு.


குறிப்பா match scenes-ல camera work நல்ல energy கொடுக்குது.


Music மற்றும் background score-ஐ Jakes Bejoy handle பண்ணியிருக்காரு.


Football portions வரும்போது BGM கொடுக்குற lift நல்லா work ஆகுது. குறிப்பா climax-ல music கூட சேரும்போது அந்த match இன்னும் engaging-ஆ feel ஆகுது.


இன்னொரு முக்கியமான விஷயம்…


இந்த movie-ஐ பார்க்கும்போது நாம பெரிய twists-ஐ எதிர்பார்க்க வேண்டிய அவசியம் இல்லை.


Sports genre-ல சில விஷயங்கள் எப்படி போகும்னு நாம முன்கூட்டியே guess பண்ண முடியும்.


ஆனா இந்த படத்தோட focus twist-ல இல்லை.


இந்த பசங்க அந்த journey-ல என்ன experience பண்ணுறாங்க என்பதில்தான்.


அவங்களோட friendship, football மேல இருக்குற love, கிடைக்கிற support, போட்டிக்காக அவங்க தயாராகுற விதம்… இதுதான் படத்தோட actual heart.


அதனால familiar sports movie elements இருந்தாலும், குழந்தைகளின் perspective-ல சொல்லியிருக்கிறது படத்துக்கு ஒரு தனி feel கொடுக்குது.


மொத்தத்துல பார்த்தா…


‘7 Star Boys’ ஒரு பெரிய scale-ல உருவாக்கப்பட்ட sports spectacle கிடையாது.


ஆனா ஒரு சின்ன football ground-ல இருந்து ஒரு பெரிய கனவு எப்படி ஆரம்பிக்குது என்பதை அழகா சொல்லும் ஒரு simple feel-good movie.


இந்த படத்தோட biggest strength அந்த குழந்தைகள்தான்.


அவங்களோட innocence, friendship, football மேல இருக்குற passion எல்லாமே நம்மளையும் அந்த world-க்குள்ள கூட்டிட்டு போயிடுது.


Antony Varghese நல்ல support கொடுத்திருக்காரு. I.M. Vijayan-ோட presence football portions-க்கு இன்னும் authenticity கொடுக்குது.


முக்கியமா climax football match படத்துக்கு தேவையான speed-ஐ கொடுத்து, நல்ல satisfying finish-ஐ கொடுக்குது.


So, football பிடிக்கிறவங்க மட்டும் இல்லாம, family-ஆ சேர்ந்து ஒரு simple-ஆன feel-good sports movie பார்க்கணும்னு நினைக்கிறவங்களும் இந்த படத்தை try பண்ணலாம்.


பெரிய பெரிய mass moments இல்லாமலேயே ஒரு சின்ன கனவை நம்ம மனசுக்குள்ள கொண்டு போய் வைக்க முடியும் என்பதுதான் இந்த படத்தோட அழகு.


‘7 Star Boys’ – Ground சின்னதா இருக்கலாம்… ஆனா அந்த குட்டீஸ்களின் கனவு ரொம்ப பெருசு!

Bethlehem Kudumba Unit Movie Review

Bethlehem Kudumba Unit Tamil Movie Review


ஹாய் மக்களே, இன்னிக்கு நம்ம Bethlehem Kudumba Unit படத்தோட review-வை தான் பாக்கப் போறோம். இந்த படத்துல Nivin Pauly, Mamitha Baiju, Sangeeth Prathap, Suresh Krishna, Vinay Forrt, Roshan Shanavas, Shyam Mohan உள்ளிட்ட பலர் நடித்திருக்காங்க. இந்த படத்தை Girish AD இயக்கியிருக்காரு. ஏற்கனவே Premalu மூலமா audience-க்கு ஒரு நல்ல feel-good experience கொடுத்த team, இந்த முறை ஒரு age-gap காதல் கதையை ரொம்ப அழகான முறையில சொல்லியிருக்காங்க.



பொதுவா age-gap romanceன்னு சொன்னாலே சில படங்கள்ல அது கொஞ்சம் uncomfortable-ஆ feel ஆகுற மாதிரி இருக்கும். ஆனா Bethlehem Kudumba Unit அந்த விஷயத்தை ரொம்ப mature-ஆ handle பண்ணியிருக்கு. Age difference இருக்குறதையே மறைக்காம, அதே நேரத்துல அதை மட்டும் வைத்து கதையை sensationalise பண்ணாம, இருவரோட relationship எப்படி naturally develop ஆகுது என்பதுக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்காங்க.


இந்த படத்தோட கதையின் மையத்துல இருக்குறது Justin மற்றும் Ashley. Justin கதாபாத்திரத்துல Nivin Paulyயும், Ashley-ஆ Mamitha Baijuவும் நடித்திருக்காங்க. இருவருக்கும் இடையில noticeable ஆன age difference இருக்கு. ஆனா படம் ஆரம்பத்துலேயே காதலை திணிச்சு காட்டாம, சின்ன சின்ன சந்திப்புகள், conversations, understanding மற்றும் friendship மூலமா இந்த relationship-ஐ மெதுவா build பண்ணுது.


அதனால தான் இவங்க ரெண்டு பேரும் காதலை உணர ஆரம்பிக்குற நேரம் ரொம்ப satisfying-ஆ இருக்கு. பெரிய dramatic proposal அல்லது over-the-top romance இல்லாம, அந்த காதல் இயல்பா உருவாகுற மாதிரி காட்டியிருக்காங்க. குறிப்பா intervalக்கு முன்னாடி வர்ற அந்த emotional moment ரொம்ப அழகா work ஆகுது.


இந்த படத்துல காதல் மட்டும் இல்லாம, குடும்பத்தோட expectations மற்றும் social pressure-ம் முக்கியமான role play பண்ணுது. Justin-க்கு வீட்டுல திருமணம் பண்ணிக்கணும்னு pressure வருது. அதே நேரத்துல Ashley-யோட அம்மாவும் அவங்க வாழ்க்கையை தன்னோட விருப்பத்துக்கு கொண்டு வர முயற்சி பண்ணுறாங்க.


Ashley-யை Justin-கிட்ட இருந்து பிரிக்க அவங்க அம்மா emotional pressure கொடுக்குறாங்க. இன்னொரு பக்கம் Ashley-யோட uncle Alex, குடும்பத்துல முக்கியமான முடிவுகளை எடுக்குற ஒருத்தரா தன்னை முன்னிலைப்படுத்திக்கிறாரு. Ashley-யோட அப்பாவை family-ல serious-ஆ எடுத்துக்காத சூழ்நிலையும் கதைக்குள்ள subtle-ஆ காட்டப்பட்டிருக்கு.


இந்த மாதிரி characters எல்லாருமே முழுக்க நல்லவங்க, கெட்டவங்கன்னு பிரிக்கப்படாம, ஒவ்வொருத்தருக்கும் அவரவர் perspective இருக்குற மாதிரி எழுதப்பட்டிருக்காங்க. அதுதான் படத்தோட இன்னொரு strength. Family relationships எவ்வளவு complicated-ஆ இருக்க முடியும் என்பதையும் சின்ன சின்ன சம்பவங்கள் மூலமா காட்டியிருக்காங்க.


Performance-ஐ பத்தி பேசணும்னா Nivin Pauly தான் முதல்ல சொல்லணும். அவரோட biggest strength என்னன்னா, ரொம்ப பெரிய விஷயங்களை கூட சின்ன reactions மூலமா அழகா convey பண்ணிடுறது. Justin character-ல அவர் ரொம்ப natural-ஆவும் lovable-ஆவும் இருக்காரு.


அவரோட expressions, body language, dialogue delivery எல்லாமே character-க்கு நல்லா suit ஆகுது. குறிப்பா Justin-ஓட innocence மற்றும் emotional side-ஐ Nivin ரொம்ப அழகா கொண்டு வந்திருக்காரு. இந்த மாதிரி simple characters-க்கு அவர் கொடுக்குற warmth தான் audience-ஐ அவரோட connect பண்ணுது.


Mamitha Baiju -ம் Ashley character-ல மிகவும் natural-ஆ இருக்காங்க. இந்த கதாபாத்திரத்துல ஒரு பெண் தன்னோட வாழ்க்கையை தானே decide பண்ணணும்னு நினைக்குற attitude இருக்கு. அதே நேரத்துல family-யை விட்டுட்டு தனியா போகணும்னு நினைக்குற மாதிரி இல்லாம, அவங்களோட feelings-ஐயும் புரிஞ்சுக்க முயற்சி பண்ணுறாங்க.


Mamitha-வோட expressions மற்றும் performance ரொம்ப subtle-ஆ இருக்கு. குறிப்பா Justin-கூட அவங்க பேசுற scenes-ல chemistry நல்லா work ஆகுது. இந்த படத்துல அவங்க character-க்கு கிடைச்சிருக்குற simple presentation கூட performance-க்கு இன்னும் natural feel கொடுக்குது.


Supporting cast-ம் படத்துக்கு நல்ல strength கொடுத்திருக்காங்க. குறிப்பா Vettukili Prakash Justin-ஓட அப்பாவா நல்ல performance கொடுத்திருக்காரு. மற்ற supporting characters-ம் கதையை forward அ கொண்டு போறதுக்கு தேவையான அளவுக்கு நல்ல contribution கொடுத்திருக்காங்க.


இந்த படத்தோட இன்னொரு பெரிய plus point Vishnu Vijay-ஓட music. Songs கதைக்குள்ள naturally blend ஆகுது. Romance மற்றும் emotional portions வரும்போது music அந்த mood-ஐ இன்னும் elevate பண்ணுது. Background score கூட ரொம்ப pleasant-ஆ இருக்கு.


Ajmal Sabu ஓட cinematography-ம் படத்தோட warm feel-க்கு நல்லா support பண்ணிருக்கு. Characters வாழ்ற இடம், family atmosphere, காதல் scenesன்னு ஒவ்வொரு frame-ம் ஒரு comfortable மற்றும் heartwarming feel கொடுக்குற மாதிரி இருக்கு.


Director Girish AD இந்த கதையை பெரிய பெரிய twists மூலமா சொல்லாம, everyday life-ல நடக்குற சின்ன சின்ன விஷயங்கள் மூலமா சொல்லியிருக்காரு. அதனால படம் ஒரு பெரிய cinematic drama-வா இல்லாம நம்ம பக்கத்து வீட்டுல நடக்குற ஒரு relationship story மாதிரி feel ஆகுது.


குறிப்பா age difference-ஐ வைத்து cheap comedy அல்லது unnecessary controversy create பண்ணாம, அந்த relationship-ஐ ஒரு genuine emotional connection-ஆ காட்டியிருக்காங்க. அதுதான் இந்த படத்தோட முக்கியமான பலமே. 


Climax-ம் நல்ல emotional satisfaction கொடுக்குற மாதிரி இருக்கு. Characters எல்லாருடைய emotions-ம் ஒரு point-க்கு வந்து சேரும்போது அந்த family drama இன்னும் அழகா work ஆகுது. சில conversations நமக்கு scripted-ஆ feel ஆகுற இடங்கள் இருந்தாலும், அந்த moments கூட படத்தோட overall warmth-ஐ maintain பண்ணுது.


இந்த படம் இன்னொரு முக்கியமான விஷயத்தையும் யோசிக்க வைக்குது. ஒரு ஆணை விட வயசுல பெரிய பெண் ஒருத்தர் younger man-ஐ காதலிச்சா, society அதே அளவுக்கு அதை normal-ஆ accept பண்ணுமா? இல்ல உடனே கேள்விகள், comments, judgement எல்லாம் ஆரம்பிச்சிடுமா?


அதனால Bethlehem Kudumba Unit ஒரு காதல் கதையை மட்டும் சொல்லாம, relationship-ஐ society எப்படி பார்க்குது என்பதையும் ஒரு light-hearted manner-ல touch பண்ணியிருக்கு. Love-க்கு வயசு ஒரு number மட்டும்தானா, இல்ல society உருவாக்கி வைத்திருக்குற rules-ம் அதுல முக்கியமா என்பதையும் audience யோசிக்க வைக்குது.


மொத்தத்துல Bethlehem Kudumba Unit ஒரு warm-ஆன, feel-good romantic family drama. Nivin Pauly-ஓட natural performance, Mamitha Baiju-வோட charming acting, இருவருக்கும் இடையில இருக்குற chemistry, Vishnu Vijay-ஓட music, Ajmal Sabu-வோட pleasant visuals மற்றும் Girish AD-ஓட mature storytelling எல்லாமே படத்துக்கு பெரிய plus.


பெரிய action, unnecessary drama எதுவும் இல்லாம, relationships மற்றும் emotions-ஐ மையமா வைத்து ஒரு அழகான காதல் கதையை சொல்லியிருக்காங்க. Age-gap romance-ஐ ஒரு fresh மற்றும் positive perspective-ல பார்க்கணும்னு நினைக்குறவங்களுக்கு இந்த படம் definitely ஒரு நல்ல experience.


சோ, இந்த வாரம் family-யோட சேர்ந்து ஒரு cute-ஆன, emotional-ஆன, feel-good romantic movie பார்க்கணும்னு நினைச்சீங்கன்னா Bethlehem Kudumba Unit-ஐ தாராளமா theatre-ல போய் பாருங்க. காதலுக்கு வயசு முக்கியமா, மனசு முக்கியமா என்பதை அழகா சொல்லுற ஒரு pleasant family entertainer தான் இந்த Bethlehem Kudumba Unit!

Wednesday, 2 September 2026

MOONWALK’ TO LIGHT UP DIWALI 2026 WITH HAPPINESS, LAUGHTER AND FAMILY ENTERTAINMENT.

 *‘MOONWALK’ TO LIGHT UP DIWALI 2026 WITH HAPPINESS, LAUGHTER AND FAMILY ENTERTAINMENT.*




BEHINDWOODS PRODUCTIONS proudly announces that MOONWALK, featuring the iconic combination of Prabhudeva and A R Rahman, will hit theatres worldwide this DIWALI 2026, promising audiences a spectacular festive celebration filled with laughter and unforgettable family moments.


Designed to transform theatres into a true festival of joy, MOONWALK aims to create an experience that audiences of all ages can cherish together.


With A R Rahman's chartbuster soundtrack, MOONWALK stars Prabhudeva in the lead, supported by an exciting cast featuring Yogi Babu, Aju Varghese, Arjun Ashokan, Satz, Nishma, Sushmitha, Redin Kingsley, Mottai Rajendran, Lollu Sabha Swaminathan, Dr. Santhosh Jacob, Deepa Shankar, and Ramkumar Natarajan. More importantly, A R Rahman makes his acting debut in a fun cameo. Another highlight of the movie is Yogi babu appearing in 16 different roles. 

Positioned as one of the most anticipated Tamil family entertainers of 2026, MOONWALK seamlessly blends comedy, music and dance into a vibrant cinematic celebration. At a time when families are looking for wholesome entertainment that can be enjoyed together, MOONWALK arrives as a refreshing theatrical experience created exclusively for the festive season.


MOONWALK is written and directed by Manoj NS, Founder and CEO of India's leading digital media platform, Behindwoods. Speaking about the announcement, Manoj NS said: "Diwali is a festival that brings families together, and we want Moonwalk to do the same. This film has been created as a celebration of happiness, laughter, music, and dance. This Diwali, our MOONWALK team happily invites family audiences to come together and experience a film that will leave them smiling."


The three tracks released from MOONWALK - Yethu, Tinga and Macarena have received a tremendous response from Music and Dance lovers world wide. Mayile, the fourth song, featuring AR Rahman and Prabhudeva in it, will be released soon. 


With its energetic soundtrack, entertaining storytelling, and feel-good narrative, MOONWALK is poised to become a grand laughter-filled family celebration of Diwali 2026.

The film features cinematography by Anoop V. Shylaja, choreography by Sekhar VJ and Piyush Shazia, production design by Shanoo, and costume design by Divya George and Swetha Raju.


MOONWALK, produced by Manoj NS, Divya Manoj and Praveen Elak under Behindwoods Productions, will release simultaneously in Tamil, Telugu and Hindi languages. Romeo Pictures has acquired the worldwide distribution rights, while Lahari has acquired the film’s music rights.

மூன்வாக்’ - 2026 தீபாவளி விருந்தாக மகிழ்ச்சி, சிரிப்பை அள்ளித் தரும் குடும்ப பொழுதுபோக்கு படமாக திரைக்கு வருகிறது

 *‘மூன்வாக்’ - 2026 தீபாவளி விருந்தாக மகிழ்ச்சி, சிரிப்பை அள்ளித் தரும் குடும்ப பொழுதுபோக்கு படமாக திரைக்கு வருகிறது*




பிஹைண்ட்வுட்ஸ் புரொடக்ஷன்ஸ் (Behindwoods Productions) பெருமையுடன் வழங்கும் ‘மூன்வாக்’ திரைப்படம் 2026 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. நடனப் புயல் பிரபுதேவா மற்றும் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் ஆகியோரின் புகழ்பெற்ற கூட்டணியில் உருவாகி உள்ள இத்திரைப்படம், பார்வையாளர்களுக்கு சிரிப்பும், மறக்க முடியாத குடும்ப தருணங்களும் நிறைந்த ஒரு பிரம்மாண்டமான திருவிழா அனுபவத்தைத் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


திரையரங்குகளை கொண்டாட்டமாக மாற்றும் ‘மூன்வாக்’ திரைப்படம், வயது வித்தியாசமின்றி அனைத்து பிரிவு பார்வையாளர்களுக்கும் நிச்சயம் மிகச்சிறந்த அனுபவத்தை வழங்கும் 


ஏ.ஆர். ரஹ்மானின் கலக்கலான இசை அமைப்பில் உருவாகியுள்ள 'மூன்வாக்' திரைப்படத்தில் பிரபுதேவா கதாநாயகனாக நடித்துள்ளார். அவருடன் யோகி பாபு, அஜு வர்கீஸ், அர்ஜுன் அசோகன், சாட்ஸ், நிஷ்மா, சுஷ்மிதா, ரெடின் கிங்ஸ்லி, மொட்டை ராஜேந்திரன், லொள்ளு சபா சுவாமிநாதன், டாக்டர் சந்தோஷ் ஜேக்கப், தீபா சங்கர் மற்றும் ராம்குமார் நடராஜன் உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளமே இணைந்து நடித்துள்ளனர்.


இப்படத்தின் மிக முக்கியமான சிறப்பம்சமாக, இசைஅமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் ஒரு ஜாலியான சிறப்புத் தோற்றத்தில் நடிகராக அறிமுகமாகிறார். மேலும், நடிகர் யோகி பாபு 16 வித்தியாசமான கதாபாத்திரங்களில் தோன்றுவது படத்தின் மற்றொரு பெரிய ஹைலைட் ஆகும்!


2026-ஆம் ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்றாக உருவாகியுள்ள ‘மூன்வாக்’, நகைச்சுவை, இசை மற்றும் நடனம் ஆகியவற்றை தடையின்றி ஒன்றிணைத்து ஒரு கலகலப்பான திரைப்பட அனுபவத்தை வழங்குகிறது. குடும்பங்கள் ஒன்றாகக் கண்டு மகிழக்கூடிய பொழுதுபோக்குத் திரைப்படங்கள் தேவைப்படும் இந்தக் காலத்தில், பண்டிகைக் காலத்திற்காகவே சிறப்புமிக்க ஒரு புத்துணர்ச்சியூட்டும் அனுபவமாக 'மூன்வாக்' வருகிறது.


இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் ஊடக நிறுவனமான பிஹைண்ட்வுட்ஸ் (Behindwoods)-ன் நிறுவனர் (Founder & CEO) மனோஜ் என்.எஸ் இத்திரைப்படத்தை எழுதி இயக்கியுள்ளார்.


இந்த அறிவிப்பு குறித்து இயக்குநர் மனோஜ் என்.எஸ் கூறுகையில்: "தீபாவளி என்பது குடும்பங்களை ஒன்று சேர்க்கும் ஒரு திருவிழா, அதே வேலையை எங்களுடைய 'மூன்வாக்' திரைப்படமும் செய்ய வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். இந்த படம் மகிழ்ச்சி, சிரிப்பு, இசை மற்றும் நடனத்தின் கொண்டாட்டமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த தீபாவளிக்கு, குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக வந்து, முகம் நிறைய சிரிப்போடு திரையரங்கை விட்டு வெளியேறும் ஒரு திரைப்பட அனுபவத்தைப் பெற 'மூன்வாக்' குழுவின் சார்பில் அன்புடன் அழைக்கிறோம்."


இப்படத்திலிருந்து ஏற்கனவே வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ள ‘ஏத்து'

 (Yethu), ‘டிங்கா’ (Tinga) மற்றும் ‘மகரினா’ (Macarena) ஆகிய மூன்று பாடல்களும் உலகெங்கிலும் உள்ள இசை மற்றும் நடனப் பிரியர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளன. இதைத் தொடர்ந்து, ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் பிரபுதேவா இணைந்து நடித்துள்ள ‘மயிலே’ (Mayile) என்ற நான்காவது பாடல் விரைவில் வெளியாகவுள்ளது.


ஆற்றல் மிக்க இசை, பொழுதுபோக்கு நிறைந்த கதைக்களம் மற்றும் மனதை மகிழ்விக்கும் அம்சங்களுடன், 2026 தீபாவளிப் பண்டிகையைச் சிரிப்பால் நிரப்பும் ஒரு சிறப்பான குடும்பக் கொண்டாட்டமாக 'மூன்வாக்' அமையவுள்ளது.


இத்திரைப்படத்திற்கு அனூப். வி. ஷைலஜா ஒளிப்பதிவு செய்ய, சேகர் வி.ஜே மற்றும் பியூஷ்-ஷாஜியா நடன இயக்கம் செய்துள்ளனர். ஷனூ கலை இயக்குநராகவும், திவ்யா ஜார்ஜ் மற்றும் ஸ்வேதா ராஜு ஆடை வடிவமைப்பாளர்களாகவும் பணியாற்றியுள்ளனர்.


பிஹைண்ட்வுட்ஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் மனோஜ் என்.எஸ், திவ்யா மனோஜ் மற்றும் பிரவீன் எலக் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள 'மூன்வாக்' திரைப்படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது. இப்படத்தின் சர்வதேச திரையரங்கு விநியோக உரிமையை ரோமியோ பிக்சர்ஸ் (Romeo Pictures) பெற்றுள்ளது, மேலும் இசை உரிமையை லஹரி (Lahari Music) நிறுவனம் கைப்பற்றியுள்ளது.