Featured post

Ulaganayagan Kamal Haasan Watches ‘Bethlehem Kudumba Unit’ and Appreciates the Team in Chennai

 Ulaganayagan Kamal Haasan Watches ‘Bethlehem Kudumba Unit’ and Appreciates the Team in Chennai* The team of ‘Bethlehem Kudumba Unit’ recent...

Thursday, 3 September 2026

புதிய ‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ டிரெய்லரில் நேருக்கு நேர் மோதும் நோவா சென்டினியோ மற்றும் ஆண்ட்ரூ கோஜி!

 *புதிய ‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ டிரெய்லரில் நேருக்கு நேர் மோதும் நோவா சென்டினியோ மற்றும் ஆண்ட்ரூ கோஜி!*



*ஜப்பானில் தொடங்கி யூடியூபில் வரலாறு படைத்த ‘வேர்ல்ட் வாரியர் டூர்’ டிரெய்லர்! ‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ திரைப்படம் இந்தியாவில் ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் அக்டோபர் 16, 2026 அன்று வெளியாகிறது!*


பாரமவுண்ட் பிக்சர்ஸ் மற்றும் லெஜண்டரி என்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து, உலகளாவிய ‘வேர்ல்ட் வாரியர் டூர்’ நிகழ்வை ஜப்பானில் பிரம்மாண்டமாகத் தொடங்கியுள்ளன. இதன் ஒரு பகுதியாக, டோக்கியோவின் புகழ்பெற்ற ஷின்ஜுகு யூனிகா விஷன் திரைகளில் ‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ திரைப்படத்தின் முதல் டிரெய்லர் வெளியிடப்பட்டது.


நடிகர்கள் நோவா சென்டினியோ, ஆண்ட்ரூ கோஜி, கலினா லியாங் மற்றும் ஜேசன் மோமோவா ஆகியோருடன், ஜப்பானைச் சேர்ந்த நடிகர் ஹிரூகி கோட்டோ, ஜப்பானிய குரல் கலைஞர் ஈகோ கனோ, இயக்குநர் கிட்டாவ் சகுராய் மற்றும் ‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ கேம் இயக்குநர் தகாயுகி நகயாமா ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.


புதிய ‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ டிரெய்லரைப் பார்ப்பதோடு மட்டுமல்லாது விளையாடவும் முடியும். ஜப்பான் வெளியீட்டுடன் இணைந்து, பாராமெளண்ட் பிக்சர்ஸ் மற்றும் லெஜெண்ட்ரி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனங்கள் யூடியூபில் முதல் முறையாக முழுநீள விளையாடும்படியான திரைப்பட டிரெய்லரை அறிமுகப்படுத்தியுள்ளன. இதன் மூலம் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள், டிரெய்லரைப் பார்த்துக்கொண்டே அதில் நேரடியாக விளையாடி, ‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ உலகத்துக்குள் நுழைய முடியும்.


1993 ஆம் ஆண்டை பின்னணியாகக் கொண்ட இந்தக் கதையில், ஒருவரை ஒருவர் பிரிந்த நிலையில் இருக்கும் ‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்ஸ்’ ரியூ (ஆண்ட்ரூ கோஜி) மற்றும் கென் மாஸ்டர்ஸ் (நோவா சென்டினியோ) மீண்டும் சண்டைக் களத்திற்குத் திரும்புகின்றனர். மர்மமான சுன்-லி (கலினா லியாங்), அடுத்த ‘வேர்ல்ட் வாரியர்’ போட்டிக்காக இருவரையும் அழைக்கிறார். அங்கு ஆக்ரோஷமான குத்துச்சண்டை, விதி மற்றும் கோபம் நிறைந்த கடுமையான மோதல் காத்திருக்கிறது. ஆனால், இந்தப் பிரம்மாண்டமான சண்டைக்குப் பின்னால் ஒரு ஆபத்தான சதித்திட்டம் இருப்பது தெரியவருகிறது. அந்தச் சதித்திட்டம் ரியூ மற்றும் கென் இருவரையும் ஒருவருக்கொருவர் மட்டுமல்லாமல், அவர்களின் கடந்த காலத்தில் புதைந்திருக்கும் தங்களது சொந்தப் போராட்டங்களையும் எதிர்கொள்ளத் தள்ளுகிறது. அவர்கள் அதை எதிர்கொள்ளத் தவறினால் கேம் ஓவர்!


இயக்குநர் கிட்டாவ் சகுராய் இயக்கியுள்ள ‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’, ஆர்கேட் கேமில் இருந்து பெரிய திரைக்கு இந்தப் புகழ்பெற்ற போராட்டத்தை கொண்டு வருகிறது. ஹடோகென்கள், ரவுண்ட்ஹவுஸ் கிக்குகள் என ரசிகர்களுக்குப் பிடித்த அனைத்து கதாபாத்திரங்களுடனும் இந்தத் திரைப்படம் பிரம்மாண்டமான ஆக்‌ஷன் விருந்தை வழங்கவுள்ளது. 


இந்தப் படத்தில் நோவா சென்டினியோ (கென் மாஸ்டர்ஸ்), ஆண்ட்ரூ கோஜி (ரியூ), கலினா லியாங் (சுன்-லி), ஜோ ’ரோமன் ரெயின்ஸ்’ அனோவாய் (அகுமா), டேவிட் டாஸ்ட்மால்சியன் (எம். பைசன்), கோடி ரோட்ஸ் (குயிலே), ஆண்ட்ரூ ஷுல்ஸ் (டான் ஹிபிகி), எரிக் ஆண்ட்ரே (டான் சாவேஜ்), வித்யுத் ஜம்வால் (தல்சிம்), ஆர்வில் பெக் (வேகா), ஆலிவர் ரிக்டர்ஸ் (சாங்கிஃப்), ஹிரூகி கோட்டோ (இ. ஹோண்டா), ரெய்னா வல்லண்டிங்ஹாம் (ஜூலி), அலெக்சாண்டர் வோல்கனோவ்ஸ்கி (ஜோ), கர்டிஸ் ’50 சென்ட்’ ஜாக்சன் (பால்ராக்) மற்றும் ஜேசன் மோமோவா (பிளாங்கா) ஆகியோர் நடித்துள்ளனர்.


‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ திரைப்படம் இந்தியாவில் ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் 16 அக்டோபர் 2026 அன்று வெளியாகிறது.

No comments:

Post a Comment