Featured post

காட்சித் தொடர்பு (Visual Communication) மற்றும் மக்கள் தொடர்பு (Public Relations) ஆகிய துறைகளில் கல்வி

காட்சித் தொடர்பு (Visual Communication) மற்றும் மக்கள் தொடர்பு (Public Relations) ஆகிய துறைகளில் கல்வி மற்றும் தொழில் துறைக்கு இடையிலான ஒத்த...

Sunday, 27 September 2026

25 மாவட்டங்கள்… 2,000 ரசிகர்கள்… பிரம்மாண்டமாக நடைபெற்ற திரு. சூர்யா ரசிகர்களின் Photoshoot!

25 மாவட்டங்கள்… 2,000 ரசிகர்கள்… பிரம்மாண்டமாக நடைபெற்ற திரு. சூர்யா ரசிகர்களின் Photoshoot!













அகில இந்திய சூர்யா நற்பணி இயக்கத்தின் சார்பில் நேற்று நடைபெற்ற Photoshoot நிகழ்வில் 25 மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 2,000 ரசிகர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


ரசிகர்களை சந்தித்த திரு. சூர்யா அவர்கள், ஒவ்வொருவரையும் தனித்தனியாக சந்தித்து, அவர்களின் நலன் குறித்து விசாரித்ததுடன், ரசிகர்கள் அனைவரும் பாதுகாப்பை முதன்மையாகக் கருதி, ஒழுக்கத்துடனும் பொறுப்புடனும் செயல்பட வேண்டும் என்றும் அன்புடன் அறிவுறுத்தினார்.


திரு. சூர்யா அவர்களின் இந்த எளிமையான அணுகுமுறையும், ஒவ்வொரு ரசிகரையும் தனிப்பட்ட முறையில் கவனித்துக்கொண்ட விதமும் அங்கு திரண்டிருந்த ரசிகர்களிடையே பெரும் நெகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியது.



நன்றி

Unmissable intensity And Charisma, Nothing Like Ever Before! Vicky Kaushal In His Both The Look Posters From Sanjay Leela Bhansali's Love & War!

 Unmissable intensity And Charisma, Nothing Like Ever Before! Vicky Kaushal In His Both The Look Posters From Sanjay Leela Bhansali's Love & War!*




*“Truly One Off The Bucket List!” Vicky Kaushal Marks His First-Ever Collaboration With Sanjay Leela Bhansali In Love & War’s Second Poster!*


Sanjay Leela Bhansali’s much-anticipated Love & War stands among the biggest films of the year and is poised to set a new benchmark in Indian cinema. Bringing together three of the industry’s biggest stars, Ranbir Kapoor, Alia Bhatt, and Vicky Kaushal, for the first time in a grand SLB spectacle, the film promises to be a cinematic experience unlike any other. With anticipation already soaring, the makers have further intensified the excitement with the first-look posters of Ranbir Kapoor and Alia Bhatt, both of which arrived like a storm and received an overwhelming response from audiences. Now, with Vicky Kaushal’s first-look posters, the glimpse certainly showcases a different shade.


In one poster, Vicky Kaushal, seen with a cigarette and a lighter, sporting an intense gaze, looks nothing short of extraordinary in his first look. While in another one he is seen in a pool holding a bouquet of flowers, looking remarkably different from what we have seen in the first poster. The posters has an adorably intriguing feel to it, with the actor’s presence leaving us guessing about the character he is set to portray. This indeed speaks volumes about SLB’s brilliant storytelling, which keeps everyone hooked and ready for something unexpected. Intriguing as it looks, the poster brings out an unexplored side of Vicky Kaushal, and it will be exciting to see him step into the world of an SLB hero for the first time, bringing his incredible acting prowess to the screen.


Taking to their social media, the makers shared both the posters and wrote -


After Ranbir Kapoor and Alia Bhatt’s first-look posters, seeing Vicky Kaushal’s posters has made it even harder to wait to witness what the film has to offer on the big screen. Ever since the announcement, the first glimpse into the world of the film has been eagerly awaited, and now, after seeing these stunning posters of the cast, the wait has become all the more exciting.


“Love & War”, a Sanjay Leela Bhansali film, starring Ranbir Kapoor, Alia Bhatt, and Vicky Kaushal. Releasing worldwide on 21st January 2027, in Hindi, Tamil, and Telugu.


https://www.instagram.com/p/DdvZOzRoR17/?stkn=M2V2YWN2cXJkYTRw


https://www.instagram.com/p/DdvtsaLIHoz/?stkn=bXMzMm10aTFqcHNs

இதுவரை பார்த்திராத அதீத தீவிரமும் கம்பீரமும்… சஞ்சய் லீலா பன்சாலியின் ‘Love & War’

 *இதுவரை பார்த்திராத அதீத தீவிரமும் கம்பீரமும்… சஞ்சய் லீலா பன்சாலியின் ‘Love & War’ படத்தில் விக்கி கௌஷலின் இரு மாறுபட்ட தோற்றங்கள்!*




*“எனது விருப்பப் பட்டியலில் இருந்த ஒன்று!” – சஞ்சய் லீலா பன்சாலியுடன் முதல் முறையாக இணைந்த விக்கி கௌஷல், ‘Love & War’ படத்தின் இரண்டாவது போஸ்டரில் அசத்தல்!*


சஞ்சய் லீலா பன்சாலியின் மிகவும் எதிர்பார்க்கப்படும் ‘Love & War’ திரைப்படம், இந்த ஆண்டின் மிகப் பிரம்மாண்டமான படங்களில் ஒன்றாக உருவாகி வருகிறது. இந்திய சினிமாவில் புதியதொரு மைல்கல்லை உருவாக்கும் வகையில் இப்படம் உருவாகி வருகிறது. திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களான ரன்பீர் கபூர், ஆலியா பட் மற்றும் விக்கி கௌஷல் ஆகிய மூவரும் முதன்முறையாக இணைந்து நடிக்கும் இந்த பிரம்மாண்டமான சஞ்சய் லீலா பன்சாலி படைப்பு, ரசிகர்களுக்கு இதுவரை காணாத ஒரு சினிமா அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஏற்கனவே உச்சத்தில் இருக்கும் நிலையில், ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட்டின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களை வெளியிட்டு படக்குழு ரசிகர்களின் ஆர்வத்தை மேலும் அதிகரித்தது. இரு போஸ்டர்களும் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது விக்கி கௌஷலின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகியுள்ளன. இந்த போஸ்டர்கள் அவரது கதாபாத்திரத்தின் முற்றிலும் மாறுபட்ட பரிமாணத்தை வெளிப்படுத்துகின்றன.


ஒரு போஸ்டரில் சிகரெட் மற்றும் லைட்டருடன், தீவிரமான பார்வையுடன் தோன்றும் விக்கி கௌஷல், மிகவும் கம்பீரமாகவும் வித்தியாசமாகவும் காட்சியளிக்கிறார். மற்றொரு போஸ்டரில், நீச்சல் குளத்தில் மலர்க்கொத்துடன் இருக்கும் அவர், முதல் போஸ்டரில் பார்த்த தோற்றத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டவராக காட்சியளிக்கிறார்.


இந்த போஸ்டர்கள் ரசிகர்களிடையே ஆர்வத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளன. விக்கி கௌஷல் ஏற்று நடிக்கவிருக்கும் கதாபாத்திரம் குறித்த பல கேள்விகளையும் இந்த போஸ்டர்கள் எழுப்புகின்றன. எதிர்பாராத திருப்பங்களுடன் ரசிகர்களை தொடர்ந்து தன் கதைக்குள் ஈர்க்கும் சஞ்சய் லீலா பன்சாலியின் தனித்துவமான கதை சொல்லும் திறனுக்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.


விக்கி கௌஷலின் இதுவரை பார்த்திராத ஒரு புதிய பரிமாணத்தை இந்த போஸ்டர்கள் வெளிப்படுத்துகின்றன. முதன்முறையாக சஞ்சய் லீலா பன்சாலியின் உலகில் ஒரு கதாநாயகனாக விக்கி கௌஷல் களமிறங்குவது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது அபாரமான நடிப்புத் திறன் இந்தப் படத்தில் எவ்வாறு வெளிப்படப் போகிறது என்பதைக் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.


படக்குழுவினர் தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் இரு போஸ்டர்களையும் பகிர்ந்து பதிவிட்டுள்ளனர் –


ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட்டின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களைத் தொடர்ந்து, விக்கி கௌஷலின் இந்த போஸ்டர்களைப் பார்த்த பிறகு, இப்படத்தை வெள்ளித்திரையில் காணும் ஆவல் ரசிகர்களிடையே மேலும் அதிகரித்துள்ளது. படம் அறிவிக்கப்பட்ட நாள் முதலே, இப்படத்தின் உலகத்தைப் பற்றிய முதல் பார்வைக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். தற்போது முன்னணி நட்சத்திரங்களின் அசத்தலான போஸ்டர்கள் வெளியாகியுள்ள நிலையில், படத்திற்கான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.


சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவாகும் ‘Love & War’ திரைப்படத்தில் ரன்பீர் கபூர், ஆலியா பட் மற்றும் விக்கி கௌஷல் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படம் 2027 ஜனவரி 21 அன்று உலகம் முழுவதும் இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகிறது.

https://www.instagram.com/p/DdvZOzRoR17/?stkn=M2V2YWN2cXJkYTRw

https://www.instagram.com/p/DdvtsaLIHoz/?stkn=bXMzMm10aTFqcHNs


ராவணனாக மிரட்டும் ராக்கிங் ஸ்டார் யஷ்! ராமாயணம் முதல் அதிகாரப்பூர்வ போஸ்டர் வெளியானது

 🔥 ராவணனாக மிரட்டும் ராக்கிங் ஸ்டார் யஷ்! ராமாயணம் முதல் அதிகாரப்பூர்வ போஸ்டர் வெளியானது



பிரம்மாண்டத்தின் உச்சத்தில் யஷ் – ராவணனாக கம்பீரம், பார்வையில் அனல்!


இந்திய சினிமா ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வரும் ராமாயணம் திரைப்படத்தின் அடுத்த பிரம்மாண்ட அப்டேட் வெளியாகியுள்ளது. நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் ராவணனாக நடிக்கும் ராக்கிங் ஸ்டார் யஷின் முதல் அதிகாரப்பூர்வ போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.


தங்கக் கிரீடம், முத்து மாலைகள், பிரம்மாண்டமான தங்க ஆபரணங்கள் என ராஜ கம்பீரத்தில் காட்சியளிக்கும் யஷ், தனது தீவிரமான பார்வையால் போஸ்டரையே ஆக்கிரமிக்கிறார்.


டிரெய்லர் வெளியானது முதலே யஷின் ராவணன் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த புதிய போஸ்டர் அந்த எதிர்பார்ப்பை மேலும் பல மடங்கு உயர்த்தியுள்ளது.


வலிமை, அறிவு, அதிகாரம் மற்றும் கம்பீரம் என ராவணனின் பல்வேறு பரிமாணங்களையும் பிரதிபலிக்கும் வகையில் யஷின் கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. வெளியாகியுள்ள இந்த போஸ்டர், ராமாயணம் திரைப்படம் உருவாகி வரும் பிரம்மாண்டத்தின் ஒரு சிறு முன்னோட்டமாகவே பார்க்கப்படுகிறது.


ரன்பீர் கபூர் ஸ்ரீ ராமராகவும், சாய் பல்லவி சீதையாகவும், யஷ் ராவணனாகவும், சன்னி தியோல் அனுமனாகவும் நடிக்கும் இந்தப் பிரம்மாண்ட காவியம், தீபாவளி 2026-ல் பாகம் 1 ஆகவும், தீபாவளி 2027-ல் பாகம் 2 ஆகவும் வெளியாகிறது.

Rocking Star Yash’s First Official Poster From Ramayana Is Out! Commands the Frame in the Powerful Avatar of Ravana

 *Rocking Star Yash’s First Official Poster From Ramayana Is Out! Commands the Frame in the Powerful Avatar of Ravana*



Produced by Namit Malhotra’s Prime Focus Studios in association with 8-time Oscar-winning DNEG and Yash’s Monster Mind Creations, Ramayana stars Ranbir Kapoor, Sai Pallavi and Yash!


Namit Malhotra’s Ramayana, directed by Nitesh Tiwari, is among the most highly anticipated films of the year. With anticipation around the epic continuing to soar with every new reveal, the makers have now unveiled the first official poster of Rocking Star Yash as Ravana, offering a striking glimpse of the larger-than-life avatar he brings to the screen.


Since the trailer’s release, Yash’s portrayal of Ravana has emerged as one of the film’s most talked-about elements. Making an immediate impact from his very first appearance, the actor brings an imposing intensity and formidable aura to the iconic character, further fuelling anticipation around his portrayal in the epic.


The newly unveiled poster captures Yash in all his commanding glory. Adorned in a bright, glittering golden crown embellished with precious gems, layered pearl necklaces and heavy gold bracelets, Yash commands the frame with his intense gaze and imposing presence. Ravana was a powerful king, a person of unparalleled knowledge and a formidable ruler of Lanka, and Yash has perfectly embodied his commanding demeanour and personality. The striking visual further offers a glimpse into the grandeur and scale with which Ravana has been envisioned for the big screen.


Bringing to life one of the greatest tales ever told, Nitesh Tiwari’s Ramayana seeks to translate the epic’s scale, emotion and timeless characters into a cinematic spectacle. Ranbir Kapoor essays Lord Ram, Sai Pallavi plays Sita, Yash takes on the role of Ravana, Sunny Deol portrays Hanuman, while Ravi Dubey plays Lakshman. The film will be released in Hindi, Tamil, Telugu, Kannada, and Malayalam in India. 


Directed by Nitesh Tiwari and produced by Namit Malhotra’s Prime Focus Studios in association with 8-time Oscar-winning DNEG and Yash’s Monster Mind Creations, the two-part epic will release worldwide in IMAX, with Part 1 arriving in Diwali 2026 and Part 2 in Diwali 2027.

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்

 *புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்*




 *எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாறு முதன்முறையாக திரைப்படமாகிறது!*


இதில் எம்.ஜி.ஆர் ஆக ஜெ.எம்.பஷீர் நடிக்கிறார். இவர் தேசிய தலைவர் என்ற படத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவராக நடித்தவர் 


எம்.ஜி.ஆருடன் நெருங்கிப் பழகியவர்கள், குடும்பத்தினர், அரசியல் நிர்வாகிகள், அரசு அதிகாரிகள், சக நடிகர்–நடிகைகள் மற்றும் திரையுலகப் பிரபலங்களின் அனுபவங்களுடன் உருவாகிறது


புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாறு, அவரது பெயரிலேயே “புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.” என்ற தலைப்பில் முதன்முறையாக திரைப்படமாக உருவாகிறது.


நாடக மேடையில் தனது கலைப் பயணத்தைத் தொடங்கி, பின்னர் வெள்ளித்திரையில் கதாநாயகனாக உயர்ந்து, தனது நடிப்பாலும் மனிதநேயத்தாலும் கோடிக்கணக்கான மக்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தவர் எம்.ஜி.ஆர்.


அரசியல் களத்தில் பேரறிஞர் அண்ணாவுடன் இணைந்து பயணித்த அவர், பின்னர் 17.10.1972 அன்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அ.தி.மு.க.) என்ற பெயரில் தனிக்கட்சியைத் தொடங்கி, தேர்தல் அரசியலில் களம் கண்டார். தொடர்ந்து தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்று, தனது ஆட்சிக்காலத்தில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை முன்னெடுத்தார்.


திரைப்படம், அரசியல், மக்கள் சேவை என பல்வேறு தளங்களில் தனக்கென ஒரு வரலாற்றை உருவாக்கிய எம்.ஜி.ஆரின் வாழ்க்கை இன்றும் தலைமுறைகளைத் தாண்டி பேசப்படும் ஒன்றாக உள்ளது.


இந்த திரைப்படம் வெறும் வாழ்க்கை வரலாற்றை மட்டும் பதிவு செய்யாமல், எம்.ஜி.ஆருடன் நெருங்கிப் பழகி, அவருடன் பயணித்தவர்கள், அவரது குடும்ப உறுப்பினர்கள், அரசியல் கட்சி நிர்வாகிகள், அவரது ஆட்சிக்காலத்தில் பணியாற்றிய அரசு அதிகாரிகள், சக நடிகர்–நடிகைகள் மற்றும் திரையுலகப் பிரபலங்கள் ஆகியோரின் நேரடி அனுபவங்களையும் நினைவுகளையும் அடிப்படையாகக் கொண்டு உருவாகிறது.


எம்.ஜி.ஆரின் தனிப்பட்ட வாழ்க்கை, திரைப்பயணம், அரசியல் வளர்ச்சி, மக்கள் தொடர்பு, மனிதநேயம் மற்றும் முதலமைச்சராக அவர் ஆற்றிய பணிகள் உள்ளிட்ட பல்வேறு பரிமாணங்கள் திரைப்படத்தில் இடம்பெற உள்ளன.


எம்.ஜி.ஆர். கட்சி தொடங்கிய அக்டோபர் 17-ம் தேதி, அவர் வாழ்ந்த ராமாவரம் தோட்ட இல்லத்தில், முக்கிய பிரபலங்கள் முன்னிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.


படத்தின் இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர்–நடிகைகள் உள்ளிட்ட முக்கிய திரைப்படக் குழுவினர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.


மக்களின் மனதில் என்றும் வாழும் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் வாழ்க்கையும் வரலாறும் திரையில் புதிய தலைமுறைக்கு அறிமுகமாகும் வகையில் இப்படம் உருவாகிறது.

அன்புள்ள பத்திரிக்கை நண்பர்களுக்கு வணக்கம்,

அன்புள்ள பத்திரிக்கை நண்பர்களுக்கு வணக்கம், 









நான் ஏற்கனவே கூறியபடி *கிட்டி* படத்தின் தொழில்நுட்ப கலைஞர்களின் விவரம் செவ்வாய் கிழமை அன்று அனுப்புகிறேன் என்று கூறினேன். இருந்தாலும் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் விமர்சனங்களை எழுதுவதற்கு உங்களுக்கு வசதியாக இருக்கும் என்ற காரணத்தினால் தொழில்நுட்பக் குழு விபரம் மற்றும் புகைப்படங்களையும் தற்பொழுது அனுப்பி வைக்கிறேன் என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.


எனவே தங்களது மேலான விமர்சனங்களை நாளை இரவு முதல் தங்களது இணையதளத்தில் பதிவிட்டு எனக்கு அந்த லிங்கை அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.


 என்றென்றும் உங்கள் அன்பில் 

*சரண்* பி ஆர் ஓ 


💐💐💐💐💐💐💐💐💐


படத்தின் நடிகர் , நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் குழு விபரம். 


நாயகன் - அசோக்-விஜய்

2வது நாயகன் 

போலீஸ் - யுகன்

நாயகிகள் -

சங்கவி - மஹா

நிஷா - பூஜா

சிமுஅத்வானி- தீப்தி

டாக்டர் - அரவிந்த் ராஜ் 

ஜட்ஜ் -ஓய்.ஜி.மகேந்திரன்




இசை - காதர்

ஒளிப்பதிவு -வி.எஸ்.வேலன்

நடனம் - ராக் சங்கர் 

எடிட்டர் - கார்த்திக் பாண்டியன்

ஸ்டண்ட் - 'பாப்புலர்' பாபு

பாடல்கள் - ப்ரியன், சீர்காழி சிற்பி,

தமிழ்மகன்

கலை இயக்குனர் - வாலி

மக்கள் தொடர்பு - சரண்

கதை,திரைக்கதை ,வசனம், இயக்கம்  - நெடுமாறன் மோகன்தாஸ். 

ரியா கிரியேஷன்ஸ் சார்பாக திருமாறன் படத்தை தயாரித்திருக்கிறார் .

Saturday, 26 September 2026

சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘SK27’ – அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

 *சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘SK27’ – அதிகாரப்பூர்வ அறிவிப்பு!*







தமிழ் திரையுலகில் பல தசாப்தங்களாக வித்தியாசமான கதைக்களங்களையும், தரமான படைப்புகளையும் வழங்கி வரும் சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் அடுத்த பிரம்மாண்ட தயாரிப்பாக, சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய திரைப்படம் உருவாகிறது. தற்காலிகமாக ‘SK27’ என அழைக்கப்படும் இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.


டி.ஜி. தியாகராஜன் வழங்கும் இப்படத்தை செந்தில் தியாகராஜன், அர்ஜுன் தியாகராஜன் மற்றும் சாய் சித்தார்த் ஆகியோர் தயாரிக்கின்றனர். இப்படத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக கயாது லோகர் நடிக்கிறார். சிவகார்த்திகேயன் – கயாது லோகர் இணையும் முதல் திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. ‘பரிதாபங்கள்’ புகழ் சுதாகர் மற்றும் ஜார்ஜ் மரியான் ஆகியோரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.


முன்னணி நடிகராக பல்வேறு வெற்றிப் படங்களை வழங்கி வரும் சிவகார்த்திகேயனின் அடுத்த படைப்பாக உருவாகும் ‘SK27’, அவரது திரைப்பயணத்தில் மற்றுமொரு புதிய கூட்டணியை உருவாக்கியுள்ளது. இந்தப் படத்தின் மூலம் சிவகார்த்திகேயன், இயக்குநர் ராம் குமார் பாலகிருஷ்ணனுடன் முதன்முறையாக இணைகிறார்.


‘பார்க்கிங்’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் ராம் குமார் பாலகிருஷ்ணன், இப்படத்தை எழுதி இயக்குகிறார். ‘பார்க்கிங்’ படத்தில் எளிமையான ஒரு பிரச்சினையை மையமாக வைத்து விறுவிறுப்பான திரைக்கதையை உருவாக்கியிருந்த அவரது கதை சொல்லும் பாணி கவனம் பெற்ற நிலையில், சிவகார்த்திகேயனுடன் அவர் இணையும் ‘SK27’ மீதும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.


படத்தின் தொழில்நுட்பக் குழுவில் முன்னணி கலைஞர்கள் இணைந்துள்ளனர். ஒளிப்பதிவை ஓம் பிரகாஷ் கையாள, படத்தொகுப்புப் பணிகளை கலைவாணன் மேற்கொள்கிறார். கலை இயக்குநராக ராஜேஷ், ஆடை வடிவமைப்பாளராக பிரவீன் ஆகியோர் தங்களது பங்களிப்பை வழங்குகின்றனர். அதிரடி சண்டைக் காட்சிகளுக்கு ஸ்டீவன் குமார் சண்டைப் பயிற்சி இயக்குநராக பணியாற்றுகிறார்.


படத்தின் அறிவிப்பு போஸ்டரில், மையத்தில் சிவப்பு நிற கார் ஒன்று இடம்பெற, அதைச் சுற்றிலும் ஏராளமான மக்கள் சூழ்ந்திருப்பது போன்று பிரம்மாண்டமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. காரை நோக்கி மக்கள் திரண்டு ஓடி வருவது போன்ற காட்சியும், சுற்றிலும் காணப்படும் கூட்டமும், புகை மற்றும் ஒளி அமைப்பும் போஸ்டருக்கு பரபரப்பான தோற்றத்தை அளிக்கின்றன. குறிப்பாக சிவப்பு, பச்சை மற்றும் கருப்பு நிறங்களின் கலவையில் உருவாக்கப்பட்டுள்ள இந்தக் காட்சியமைப்பு, படத்தின் பின்னணியில் ஒரு தீவிரமான மற்றும் ஆக்‌ஷன் நிறைந்த உலகம் இருக்குமோ என்ற ஆர்வத்தைத் தூண்டும் வகையில் அமைந்துள்ளது.


இதனால், ‘SK27’ ஒரு அதிரடி ஆக்‌ஷன் பின்னணியிலான திரைப்படமாக இருக்குமா? என்ற ஆர்வத்தை இந்த அறிவிப்பு போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.


படத்தின் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த விவரங்கள் அடுத்தடுத்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில், சிவகார்த்திகேயன் – கயாது லோகர் நடிப்பில், ராம் குமார் பாலகிருஷ்ணன் இயக்கும் ‘SK27’ படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கியுள்ள நிலையில், படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் மீதான எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது.

Sathya Jyothi Films’ Sivakarthikeyan Starrer ‘SK27’ – Officially Announced!

 *Sathya Jyothi Films’ Sivakarthikeyan Starrer ‘SK27’ – Officially Announced!*







Sathya Jyothi Films, a production house that has been entertaining Tamil audiences for several decades with diverse storylines and quality films, has officially announced its next ambitious production, starring Sivakarthikeyan. Tentatively titled ‘SK27’, the film’s official announcement poster has now been unveiled.


Presented by T.G. Thyagarajan, the film is produced by Sendhil Thyagarajan, Arjun Thyagarajan. It is co-produced by Saravanan and Sai Siddharth. Sivakarthikeyan will play the lead role, with Kayadu Lohar as the female lead. This marks the first collaboration between Sivakarthikeyan and Kayadu Lohar. ‘Parithabangal’ fame Sudhakar and George Maryan will also be seen in important roles.


‘SK27’, which features Sivakarthikeyan in the lead, brings together another new combination in his career. The film marks Sivakarthikeyan’s first collaboration with filmmaker Ramkumar Balakrishnan, who previously gained widespread attention with his National Award winning film Parking. The official announcement confirms that Ramkumar Balakrishnan is writing and directing the project.


Ramkumar Balakrishnan, who made his directorial debut with Parking, is known for building an engaging screenplay around a seemingly simple conflict. His collaboration with Sivakarthikeyan in ‘SK27’ has already generated considerable curiosity among film audiences.


Om Prakash is handling the cinematography, while Kalaivanan is taking care of the editing. Rajesh is the production designer, Praveen is the costume designer, and Steven Kumar serves as the stunt master.


The announcement poster features a striking red car at the centre, surrounded by a huge crowd of people. The visual depicts people rushing towards the car, while the surrounding crowd, smoke and dramatic lighting give the poster an intense and energetic appearance. The combination of red, green and black tones further adds to the overall visual impact, creating curiosity about the world and backdrop of the film.


The poster has consequently sparked curiosity among fans about whether ‘SK27’ will be an action-oriented film with an intense backdrop.


Further details regarding the rest of the cast and technical crew are expected to be revealed through subsequent official announcements.


Produced by Sathya Jyothi Films, starring Sivakarthikeyan and Kayadu Lohar, and directed by Ramkumar Balakrishnan, ‘SK27’ has officially commenced production today. With the project now on the floors, anticipation for the film’s upcoming updates is steadily building.