Featured post

ATLEE & RANVEER SINGH'S FIRST EVER COLLABORATION, AGENT CHING ATTACKS WITH SREELEELA AND BOBBY DEOL STREAMING WORLDWIDE NOW!*

 ATLEE & RANVEER SINGH'S FIRST EVER COLLABORATION, AGENT CHING ATTACKS WITH SREELEELA AND BOBBY DEOL STREAMING WORLDWIDE NOW!* Sunda...

Monday, 22 February 2021

பிக்பாஸ் புகழ் கணேஷ் வெங்கட்ராம்

 பிக்பாஸ் புகழ் கணேஷ் வெங்கட்ராம் நடிப்பில் தயாராகும் “உன் பார்வையில்”  ரொமான்ஸ் திரில்லர் திரைப்படம் ! 

பிக்பாஸ் மூலம் மக்கள் மனங்களில் இடம்பிடித்த நடிகர் கணேஷ் வெங்கட்ராம் தற்போது ஒரு ரொமான்ஸ் திரில்லர் திரைப்படத்தில் நடிக்கிறார். “உன் பார்வையில்” எனும் இப்படத்தை Kaho na pyar hai, Pardes, Taal  போன்ற பாலிவுட் மெஹா ஹிட் படங்களின் ஒளிப்பதிவாளர் கபிர் லால் இப்படத்தினை இயக்குகிறார். இது தமிழில் இவருக்கு அறிமுகப்படமாகும்.  

இப்படத்தின் படத்தின் படப்பிடிப்பு டேராடூன், உத்ராகண்ட் பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இப்படம் தமிழ், தெலுங்கு, மராட்டி பெங்காலி மொழிகளில் படமாகிறது. தமிழ் பதிப்பில் கணேஷ் வெங்கட்ராமன், பார்வதி நாயர் முதன்மை பாத்திரத்தில் நடிக்கிறார்கள். 










ரொமான்ஸ் திரில்லராக உருவாகும் இப்படத்தில் கணேஷ் வெங்கட்ராம் சைக்லாஜிஸ்ட் ஆகவும், பார்வதி நாயர் பிஸினஸ் உமனாகவும் நடிக்கிறார்கள். படத்தில் அவர்களின் கெமிஸ்ட்ரி அனைவரையும் கவரும்படி அமைந்துள்ளது. 


நடிகர் கணெஷ் வெங்கட்ராம் கூறியதாவது...

Kaho na pyar hai, Pardes, welcome back போன்ற பல படங்களில் கபிர் அவர்கள் ஒளிப்பதிவில் செய்த மேஜிக் கண்டு பிரமித்திருக்கிறேன். அவர் என்னிடம் கதை சொன்னபோது படு பரபரப்பான சுவாரஸ்யம் மிகுந்த கதையாக இருந்தது. ர்ன் கதாப்பாத்திரம் பல அடுக்குகள் கொண்டதாக இருந்தது. இம்மாதிரியான ஒரு கதாப்பாத்திரத்தில் நடிக்கவே காத்திருந்தேன். படம் அழகாக உருவாகி வருகிறது. 



பார்வதி நாயர் கூறியதாவது..,


நடிப்புக்கு சவால் தரும் கதாப்பத்திரம் என்னுடையது. என் முழு உழைப்பை தந்து நடித்திருக்கிறேன். கணேஷ் வெங்கட்ராம் மிகச்சிறந்த நடிகர். படப்பிடிப்பில் மிகவும் ஒத்துழைப்பாக இருந்தார். கபீர் அவர்கள் ஒவ்வொரு காட்சியையும்  அமைக்கும் விதம் அதை படமாக்கும் விதம் பிரமிப்பானது. 


“உன் பார்வையில்” படத்தினை  Lovely World Production சார்பில் அஜய் சிங் தயாரிக்கிறார். பரபரப்பாக உருவாகிவரும் இப்படத்தினை வரும் ஜூலை மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

No comments:

Post a Comment