Featured post

CHALLANI'S DAIMOND FESTIVAL

 *CHALLANI'S DAIMOND FESTIVAL*  Challani Jewellers T.Nagar Celebrates Diamond Festival From 5th June To 15th June. The Inauguration Has ...

Thursday, 27 October 2022

சமந்தாவின் ஆக்‌ஷன் த்ரில்லர் கதையான ‘யசோதா’வின் ட்ரைய்லர் பாராட்டுகளைப் பெற்று வருகிறது!

 *சமந்தாவின் ஆக்‌ஷன் த்ரில்லர் கதையான ‘யசோதா’வின் ட்ரைய்லர் பாராட்டுகளைப் பெற்று வருகிறது!*


இன்று வெளியாக இருக்கும் நடிகை சமந்தாவின் ‘யசோதா’ படத்தின் ட்ரைய்லர் காட்சிகள் நிச்சயம் பார்வையாளர்களின் அட்லிரின் சுரப்பை அதிகரிக்கும் வகையிலான மிரட்டலான காட்சிகள் மற்றும் பின்னணி இசையைக் கொண்டுள்ளது. 

தெலுங்கில் நடிகர் விஜய்தேவரகொண்டா, தமிழில் நடிகர் சூர்யா, கன்னடத்தில் நடிகர் ரக்‌ஷித் ஷெட்டி, மலையாளத்தில் துல்கர் சல்மான் மற்றும் இந்தியில் வருண் தவாண் வெளியிடுகின்றனர். 



‘யசோதா’ படத்தில் நடிகை சமந்தா வாடகைத்தாய் கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார். கதையில் கடுமையான மருத்துவக் குற்றங்களை தைரியத்துடன் சமந்தா வெளிப்படுத்தும் வகையிலான காட்சிகள் மற்றும் வசனங்கள் அமைக்கப்பட்டுள்ளது. சமந்தாவின் அதிரடி ஆக்‌ஷன் காட்சிகள் தவிர்த்து, உன்னி முகுந்தன் மற்றும் சமந்தாவுக்கு இடையிலான காதல் காட்சிகள் கதையை இலகுவாக்கும். நடிகை வரலக்‌ஷ்மி கதையில் எதிர்மறையான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த அதிரடியான ஆக்‌ஷன் கதைக்கு தனது இசை மூலம் கதையின் பரபரப்பை இன்னும் அடுத்த நிலைக்கு இசையமைப்பாளர் மணிஷர்மா எடுத்து சென்றுள்ளார். 


இது குறித்து தயாரிப்பாளர் சிவலெங்கா கிருஷ்ண பிரசாத் கூறும்போது, ‘ட்ரையலரை வெளியிடும் நடிகர்கள் விஜய் தேவரெகொண்டா, சூர்யா, ரக்‌ஷித் ஷெட்டி, துல்கர் சல்மான், வருண் தவான் ஆகியோருக்கு நன்றி. தெலுங்கு,தமிழ், இந்தி, கன்னடம், மலையாளம் என அனைத்து மொழிகளிலும் ‘யசோதா’ படத்திற்கு எதிர்ப்பார்ப்பும் வரவேற்பும் உள்ளது. ஏற்கனவே, யூடியூப்பில் ‘யசோதா’ ட்ரெண்டிங்கில் உள்ளது. படத்தில் சமந்தாவின் நடிப்பும் மணிஷர்மாவின் இசையும் பார்வையாளர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.படத்தின் கதையை நாங்கள் சொல்லி விட்டாலும் படத்தின் காட்சிகளும், கதையோட்டமும் நிச்சயம் பார்வையாளர்களை இருக்கை நுனிக்கு கொண்டு வரும். ஸ்ரீதேவி மூவிஸ் பேனரின் கீழ் இந்த ஆக்‌ஷன் த்ரில்லர் படத்தை உலகம் முழுவதும் வருகிற நவம்பர் 11ம் தேதி வெளியிட இருக்கிறோம்’ என்றார். 


பான் இந்தியா வெளியீடாக நவம்பர் 11ம் தேதி ஐந்து மொழிகளில் வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் இறுதி வடிவம் குறித்து இயக்குநர்கள் ஹரி, ஹரிஷ் மற்றும் தயாரிப்பாளர் சிவலெங்கா கிருஷ்ண ப்ரசாத் ஆகியோர் மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளனர். 


சமந்தா தவிர்த்து நடிகர்கள் வரலக்‌ஷ்மி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி ஷர்மா, சம்பத் ராஜ், ஷத்ரு, மாதுரிமா, கல்பிகா கணேஷ், திவ்யா ஸ்ப்ரிடா, ப்ரியங்கா ஷர்மா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.  


*படத்தின் தொழில்நுட்பக் குழு விவரம்:*

இசை: மணிஷர்மா,

வசனம்: புலகம் சின்னராயனா, டாக்டர். சல்லா பாக்யலக்‌ஷ்மி, 

பாடல்கள்: ராமஜோகிய சாஸ்திரி,

கிரியேட்டிவ் இயக்குநர்: ஹேமம்பர் ஜஸ்தி, 

கேமரா: M. சுகுமார், 

கலை: அசோக், 

சண்டைப் பயிற்சி: வெங்கட், யானிக் பென், 

எடிட்டர்: மார்தாண்ட் கே. வெங்கடேஷ், 

லைன் புரொட்யூசர்: வித்யா சிவலெங்கா, 

இணைத் தயாரிப்பாளர்: சிந்தா கோபாலாகிருஷ்ண ரெட்டி, 

நிர்வாகத் தயாரிப்பாளர்: ரவிக்குமார் GP, ராஜா செந்தில்,

இயக்கம்: ஹரி மற்றும் ஹரிஷ்,

தயாரிப்பாளர்: சிவலெங்க கிருஷ்ண ப்ரசாத்,

பேனர்: ஸ்ரீதேவி மூவிஸ்.

No comments:

Post a Comment