Featured post

CHALLANI'S DAIMOND FESTIVAL

 *CHALLANI'S DAIMOND FESTIVAL*  Challani Jewellers T.Nagar Celebrates Diamond Festival From 5th June To 15th June. The Inauguration Has ...

Monday, 3 October 2022

இயக்குநர் போயபத்தி ஸ்ரீனு, ஹீரோ ராம் பொத்தினேனி இணையும் BoyapatiRAPO படத்தின் அதிரடி அப்டேட் தசரா

 இயக்குநர் போயபத்தி ஸ்ரீனு, ஹீரோ ராம் பொத்தினேனி  இணையும் BoyapatiRAPO படத்தின் அதிரடி அப்டேட் தசரா கொண்டாட்டமாக அக்டோபர் 5 வெளியாகிறது !!   



தெலுங்கு திரையுலகில் பல வெற்றிகளை தந்த முன்னணி பிரபலங்களான இயக்குநர் போயபத்தி ஸ்ரீனு, நடிகர் உஸ்தாத் ராம் பொத்தினேனி மற்றும் தயாரிப்பாளர் ஸ்ரீனிவாசா சிட்தூரி ஒரு மிகப்பெரும் திரைப்படத்தில் இணைந்துள்ளனர். இப்படம் தற்போதைக்கு BoyapatiRAPO என்று தலைப்பிடப்பட்டுள்ளது. 


இப்படத்தின் தகவல் வெளிவந்தது முதலே ரசிகர்கள் மிகப்பெரும் எதிர்பார்ப்பில் இருந்தனர் இந்த நிலையில் இன்று தயாரிப்பு தரப்பு ஒரு மிகப்பெரும் அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். படம் குறித்தான முதல் அறிவிப்பு தசரா கொண்டாட்டமாக அக்டோபர் 5 வெளியாவதாக தயாரிப்பு தரப்பு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு வெளியான நொடியிலிருந்து இணையத்தில் வைரலாகி வருகிறது. 


படத்தின் அறிவிப்பு வெளியானதை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். திரையுலகின் மிக வெற்றிகரமான பிரபலங்கள் இணையும் இத்திரைப்படம் இப்போதெ மிகப்பெரும் ஆர்வத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. தசரா திருவிழா இந்த அறிவிப்பால் மிகப்பெரும் கொண்டாட்டமாக மாறியுள்ளதாக ரசிகர்கள் தெரிவித்து வருகிறார்கள்.  


தயாரிப்பாளர் மற்றும் நடிகர் இருவரையும் பரவசப்படுத்தும்  மாஸ் அம்சங்கள் நிறைந்த ஒரு அருமையான கதையுடன் வந்திருக்கிறார் போயபத்தி ஸ்ரீனு. மிகப்பெரும் பட்ஜெட்டில் உயர் தொழில்நுட்ப கலைஞர்களுடன் பிரபல தயாரிப்பாளர் ஸ்ரீனிவாசா சிட்தூரி  Srinivasaa Silver Screens சார்பில் இப்படத்தை தயாரிக்கிறார்.

No comments:

Post a Comment