Featured post

Delhi Sharks Clinch Title !!!!

Delhi Sharks Clinch Title !!!!   Delhi Sharks emerged victorious at the DAVe BABA VIDYALAYA Tamil Nadu Open Trios Tenpin Bowling Tournament ...

Thursday, 22 December 2022

இயக்குனர் ஆர்.கண்ணன் இயக்கத்தில் இரட்டை வேடத்தில் ஹன்சிகா நடிக்கும் புதிய படம் “ காந்தாரி”.

 இயக்குனர் ஆர்.கண்ணன் இயக்கத்தில் இரட்டை வேடத்தில் ஹன்சிகா நடிக்கும் புதிய படம் “ காந்தாரி”. 


ஆர்.கண்ணன் தயாரித்து இயக்கும்  “காந்தாரி” படத்தில் முதன்முறையாக இரட்டை வேடங்களில் ஹன்சிகா நாயகியாக நடிக்கிறார். ‘காஞ்சனா’ பட வரிசையில் மக்களை கவரும் படமாக ‘காந்தாரி’ இருக்கும்.


கதாநாயகியை மையமாக வைத்து இயக்குனர் ஆர்.கண்ணன் இயக்கும் இது எமோஷனல், ஹாரரை அடிப்படையாக கொண்ட காமெடி த்ரில்லராக இருக்கும்.


ஹன்சிகாவுடன் மற்றும் மெட்ரோ சிரிஷ், மயில்சாமி, தலைவாசல் விஜய், ‘ஆடிகளம்' நரேன், பிரிஜிதா, பவன், என பிரபல நடிகர்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு இடைவிடாமல் நடத்தப்பட்டு முடிவடந்துள்ளது.

#ஜெயம்கொண்டான், #கண்டேன்காதலை, #சேட்டை, #இவன்தந்திரன், போன்று எல்லா வகை கதைகளையும் டைரக்ட் செய்து அனைவருக்கும் பிடிக்கும் தரமான வெற்றிப்படங்களை தமிழ் சினிமாவில் தொடர்ந்து தந்து வருபவர்  இயக்குநர் R.கண்ணன். 

தற்போது, மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான #கிரேட்இந்தியன்கிச்சன் படத்தை தமிழில் டைரக்ட் செய்து ரிலீஸ் செய்ய தயார் நிலையில் வைத்துள்ளார். மும்பை தயாரிப்பு நிறுவனம் ஒன்று இதை தயாரித்துள்ளார்கள். இதில், ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகியாக நடித்துள்ளார். 

இதை அடுத்து, மிர்ச்சி சிவா, யோகிபாபு, கருணாகரன், பிரியா ஆனந்த் நடிக்கும் #காசேதான்கடவுளடா படத்தை

 டைரக்ட் செய்துள்ளார். 



தொழில்நுட்ப வல்லுநர்கள் பட்டியல்:

கதை: எழுத்தாளர் மா.தொல்காப்பியன், 

திரைக்கதை: G. தனஞ்ஜெயன், 

வசனம்: பாடலாசிரியர் ஸ்ரீனி செல்வராஜ், 

மக்கள் தொடர்பு : ஜான்சன்

சண்டைப் பயிற்சி : ஸ்டண்ட் சில்வா,

எடிட்டிங்: ஜிஜேந்திரா,

கலை: பார்த்திபன், 

நிர்வாக தயாரிப்பு: கே.சிவசங்கர், ஓம் சரண். 

ஒளிப்பதிவு: பாலசுப்ரமணியெம்,

இசை: எல்.வி.முத்து கணேஷ்,


தயாரிப்பு நிறுவனம்: மசாலா பிக்ஸ் 

தயாரிப்பு & இயக்கம்: ஆர்.கண்ணன். 


2023 மார்ச் வெளியீடு.

No comments:

Post a Comment