Featured post

வடிவேலு - பகத் பாசில் நடிக்கும் 'மாரீசன்' ஜூலை 25ஆம் தேதி வெளியாகிறது

 *வடிவேலு - பகத் பாசில் நடிக்கும் 'மாரீசன்' ஜூலை 25ஆம் தேதி வெளியாகிறது* தமிழ் திரையுலகின் பிரபல நடிகர்களான வடிவேலு - பகத் பாசில் இர...

Wednesday, 28 December 2022

சில்பகலா ப்ரொடக்ஷன் சார்பில் மது

 சில்பகலா ப்ரொடக்ஷன் சார்பில் மது பாலகிருஷ்ணன் தயாரிக்கும் "டேலண்ட்" படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் 9 ம் நாள் கேரளாவில் துவங்கியது.

இதில் ராசியா மற்றும் பிரான்சிஸ்  மோதும் கால் பந்தாட்ட போட்டி கேரளாவில் உள்ள ஒரு தனியார் மைதானத்தில் படமாக்கப்பட்டது..

இப்படம் முழுக்க முழுக்க கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து உருவாக உள்ளது இதில் நாயகியாக ராசியா என்ற புதுமுகம் அறிமுகமாகிறார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் விஷ்ணு ,தினேஷ் ,கார்த்திக் மற்றும் பலர் நடிக்க உள்ளனர்...



தமிழ், மலையாளம் என இரு மொழிகளில் உருவாகும்

இப்படம் கேரளாவில் உள்ள எர்ணாகுளத்தில் துவங்கி சென்னை மற்றும் பாண்டிச்சேரியில் முழு வீச்சில் படபிடிப்பு நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.


இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஜனவரி நான்காம் நாள் பாண்டிச்சேரியில் துவங்க உள்ளது..


இப்படத்திற்கு ஒளிப்பதிவு மற்றும் இயக்கம் அலெக்ஸாண்டர்

இசை அம்ப்ரோஸ் நடனம் பிரான்சிஸ்....

No comments:

Post a Comment