Featured post

‘45’ – Pre-Release Event

 *‘45’ – Pre-Release Event* Produced by Suraj Production under the banner of producer Ramesh Reddy, the grand multi-starrer film "45...

Tuesday, 30 October 2018

தென்னிந்திய நடிகர் சங்கம்

தென்னிந்திய நடிகர் சங்கம் அறிக்கை - 29.10.2018


29.10.2018 அன்று நடந்த சிறப்பு செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் 

1. அங்கத்தினர்களுடைய உரிமைகளும் சுயமரியாதையும் காப்பாற்றும் வகையில் ஏற்கனவே தென்னிந்திய நடிகர் சங்கத்தில் சட்டங்கள் இருந்தாலும், நீதிமன்றத்தால் பரிந்துரை செய்யப்பட்ட   'விசாகா குழு' செயல்படும் சட்டங்களின் அடிப்படையில் குழு ஒன்று உருவாக்கப்படும் .



இதில் தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகளோடு பெரும்பான்மை மகளிரும் உட்பட, குழுவாக அமையும். பிரச்சனைகளை உளவியல்  ரீதியாக அலசி ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க மனநல மருத்துவர் ஒருவரும் அதில் இடம் பெறுவார். அதற்க்கு ஆண்பால் பெண்பால் பாகுபாடின்றி பிரச்சினைகளை நடு நிலையோடு அணுகி தீர்வுகளை எடுக்கும்.

2. படப்பிடிப்பு தளங்களில் ஏற்படும் சகல பிரச்சனைகளை உடனடியாக தீர்த்து வைக்க தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தலைமையில், தென்னிந்திய நடிகர் சங்கம், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம், இயக்குனர்கள் சங்கம் உள்ளிட்ட உயர்மட்ட குழு ஒன்றை அமைக்கவும் பரிந்துரை செய்கிறது.

No comments:

Post a Comment