Featured post

Mark Your Calendars: Prabhas starrer 'Kalki

 *Mark Your Calendars: Prabhas starrer 'Kalki 2898 AD' to hit theatres on 27th June 2024* This year's highly-anticipated sci-fi ...

Friday 26 October 2018

Drama artists request to make MGR Soul Happy

பத்திரிக்கையாளர்களே எம்.ஜி.ஆரின் ஆன்மாவை சந்தோஷப்படுத்துங்கள்-நாடக நடிகரின் வேண்டுகோள்..!!

நாடக உலகிலிருந்து திரையுலகில் கால் பதித்து சாதனைகள் பல
புரிந்த”மக்கள் திலகம்”எம்.ஜி.ஆர்.அவர்களின் நூற்றாண்டையொட்டி நாடக உலகின் சார்பில் “பாரதி கலைஞர் எஸ்.வி. சகஸ்ரநாமம் சென்டினரி அகாடமி”யின் சார்பாக “கேட்டதும் கொடுப்பவனே” என்ற நாடகத்தை பல சபாக்களில் நடத்தி நூற்றாண்டு நாயகர் எம். ஜி.ஆர். அவர்களுக்கு சமர்ப்பணம் செய்து வருகிறார்கள்.இந்த நாடகத்தின் கதைவசனம் 16 வயதினிலே திரைப்படப் புகழ் வசனகர்த்தா மறைந்த கலைமணி அவர்களால் எழுதப்பட்டது. அதற்கு இப்போது புதிய பரிணாமம் கொடுத்து நாடாகமாக்கம், இயக்கம், தயாரிப்பு என எல்லாவற்றையும் ‘கலைமாமணி’ பி.ஆர். துரை ஏற்று நடத்தி வருகிறார்.நாடகத்தில் கதாநாயகன் செய்த தர்மமே கடைசியில் அவனை காப்பாற்றுகிறது என்பதுதான் கதையின் சாராம்சம்.மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்கு சமர்ப்பணம் செய்ய தகுதியான நாடகம் தான்.




சின்னத்திரை..வெள்ளித்திரையில் கொடிகட்டிப் பறக்கும் பூவிலங்கு மோகன் அவர்கள்தான் ‘கேட்டதும் கொடுப்பவனே’-நாடகத்தின் கதையின் நாயகன்..இவருடன் ‘கலைமாமணி’, ஏ. பி.என். தசரதன், வந்தனா பாப்பாத்தி, உஷாநந்தினி, எம்.ஏ. பிரகாஷ், என்.எஸ். சுரேஷ், வெங்கட்ராமன், பக்திசரன், ரமணி, ரஞ்சித், பிரபாகர், ஸ்ரீ ராகவ், எழில் நம்பி, Tutor கணேசன் ஆகியோருடன் ‘கலைமாமணி ‘பி.ஆர். துரை ஆகியோர் நடித்து வருகிறார்கள்.



சமீபத்தில் இந்த நாடகம் மைலாப்பூர் பைன் ஆர்ட்ஸ் கிளப்பில் நடைபெற்றது. ஸ்ரீ ஸ்ரீ ஆத்ம சைதன்யானந்ஜி மகராஜ் அவர்கள் முன்னிலையில் , பாரதிய ஜனதாகட்சியின் மூத்த தலைவராகிய திரு. இலகணேசன் அவர்கள் தலைமைவகித்து பேசியபோது.. “இந்த நாடகம் இந்த காலகட்டத்தில் மட்டும் அல்ல இன்னும் 40 ஆண்டுகள் கடந்து நடைபெற்றாலும் இந்த நாடகம் புதுமைதான் என்று சொல்லி பாராட்டியதோடு , மஹாபாரத கதையிலிருந்து தான தர்மத்தின் பெருமையை விளக்கும் ஒரு உபகதையையும் இணைத்து பேசி நாடகத்தில் நடித்த பூவிலங்கு மோகனையும், கதை வசனம், இயக்கம் ஆகிய பொறுப்புக்களையும் ஏற்று பாலகிருஷ்ணனாக நடித்த கலைமாமணி பி.ஆர். துரையையும் மற்ற நடிகர்களையும் பாராட்டிப் பேசினார்..நாடக உலகில் கொடிகட்டிப் பறந்து வரும் எஸ்.வி.சேகரும் நாடகத்தையும்..நாடகக் கலைஞர்களையும் வெகுவாகப் பாராட்டிப் பேசினார்.


கலைமாமணி பி.ஆர். துரை நம்மிடம் பேசுகையில்..”பத்திரிகையாளர்கள் எல்லோரும் அவசியம் இதை நாடகத்தை பார்த்துவிட்டு அதன் பிறகு விமர்சனம் செய்தால் அதனுடைய ரீச்சே தனிதான்.பத்திரிகை விமர்சனம் .எல்லாதரப்பு மக்களிடமும் சென்று அவர்கள் ஆவலோடு இந்த நாடகத்தைப் பார்க்க வருவார்கள்.இந்த உதவியை பத்திரிகையாளர்கள் அவசியம் செய்து தரவேண்டும்.இனி தொடர்ந்து நாங்கள் போடும் இந்த நாடகத்திற்கு வருகைதருமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன்…மக்கள் திலகத்திற்காக நாங்கள் இந்த நாடகத்தை சமர்ப்பணம் செய்கிறோம்..உங்களது விமர்சனம் எம்.ஜி.ஆரின் ஆன்மாவை சந்தோஷப்படுத்தும் என்று கூறினார் “கலைமாமணி” பி.ஆர். துரை.

No comments:

Post a Comment