Featured post

Varalaxmi Sarathkumar Glows with Grace in Sri Lanka Photoshoot! A Symbol of

 Varalaxmi Sarathkumar Glows with Grace in Sri Lanka Photoshoot!  A Symbol of Strength, Style, and Stellar Talent Actress Varalaxmi Sarathku...

Thursday, 20 December 2018

நடிகர் சங்கத்திற்கு ஒரு லட்சம் நிதி வழங்கிய நடிகர்

நடிகர் சங்கத்திற்கு  ஒரு லட்சம் நிதி வழங்கிய  நடிகர் 'வசந்தம்' ரவி மாறன்..!

'வசந்தம் ரவி' மாறன் நடிக்கும்  'வசந்தம் 2' விரைவில் தொடங்குகிறது..!  

'திருமகள் மூவி லேண்ட்' சார்பில் திரு P B மனோஜ் அவர்கள் தயாரிக்கவுள்ள திரைப்படம்தான் 'வசந்தம் 2'. திரு P B மனோஜ் அவர்கள் பல திரைப்படங்களுக்கு PRODUCTION MANAGER ஆக பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இத்திரைப்படத்தை வசந்தம் ரவி மாறன்  கதை, திரைக்கதை , வசனம் எழுதி இயக்கவுள்ளார். மேலும் இத்திரைப்படத்தில் இவரே கதாநாயகனாகவும் நடிக்கவுள்ளார். இவர் வசந்தம் திரைப்படத்தில் நகைச்சுவை நாயகனாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கதாநாயகியாக ஸ்ரீ ரேகா நடிக்கவுள்ளார் .இவர் தெலுங்கு , மலையாளத்தில் புகழ்பெற்ற நகைச்சுவை நடிகையாவார். 

இசை T S மணிமாறன் , ஒளிப்பதிவு சுந்தர்ராஜன். இத்திரைப்படம் முழுக்க முழுக்க நகைச்சுவையை மையமாக வைத்து உருவாக்கப்படப்பட உள்ளது. மேலும் தமிழ்  சினிமாவில் தற்பொழுது புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர்கள் இத்திரைப்படத்தில் நடிக்கவுள்ளனர். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது

வசந்தம் திரைப்படத்தில் நடித்த நடிகர் ரவி மாறன் அவர்கள் சமீபத்தில் நாடகக்கலை அழிந்துவிட கூடாது என்பதற்காகவும், அதனை மென்மேலும் வளர்ச்சியடைவதற்காகவும் நடிகர் சங்கத்திற்கு ரூ.1.00.000 நிதியாக வழங்கியுள்ளார். இதனை தயாரிப்பாளர் சங்க தலைவர் மற்றும் நடிகர் சங்க பொது செயலாளருமான திரு விஷால் மற்றும் நடிகர் சங்க பொருளாளர் கார்த்தி பெற்றுக்கொண்டனர். உடன் நடிகர்சங்க தலைவர் திரு நாசர் மற்றும் துணை தலைவர் கருணாஸ் , நடிகர் பூச்சிமுருகன் ஆகியோர் இருந்தனர்.


No comments:

Post a Comment