Featured post

Natural Star Nani, Srikanth Odela, Sudhakar

 *Natural Star Nani, Srikanth Odela, Sudhakar Cherukuri, SLV Cinemas #NaniOdela 2 Mass Madness Begins* Natural Star Nani is on a roll, havin...

Saturday 29 December 2018

மலேசியாவில் உச்சத்தை தொடும் பேட்ட படத்தின் விளம்பரம்!

மலேசியாவில் உச்சத்தை தொடும் ‘பேட்ட’ படத்தின் விளம்பரம்!

ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ளது ‘பேட்ட’. இப்படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. 

உலகம் முழுவதும் இப்படத்தினை வெளியிட மாலிக் ஸ்ட்ரீம் கார்ப்பரேஷன் நிறுவனம்  உரிமம் (இந்தியாவை தவிர) பெற்றுள்ளது.

மலேசியாவில் டிசம்பர் 29 மற்றும் 30 ஆம் தேதியில் நடைபெறும் "DRIFT Challenge 2018" கார் ரேஸில் மாலிக் ஸ்ட்ரீம் கார்ப்பரேஷன் சார்பாக இந்திய வீரர் தர்ஷன் ராஜ்(19) இந்த ரேசில் கலந்து கொள்ளவிருக்கிறார். 

மலேசியாவில் உள்ள டாப் 20 ரேஸ் வீரர்கள் இப்போட்டியில் கலந்து கொள்கிறார்கள். 

ரேஸ் காரில் ”பேட்ட” படத்தின் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. இது அப்பகுதி மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது. மேலும், மலேசியா முழுவதும் பல கார்களில் பேட்ட படத்தின் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு விளம்பரப்படுத்தப்பட்டு வருகிறது. 

மேலும், ”இளைஞர்கள் தவறான பாதைக்கு செல்லாமல், இது போன்ற விளையாட்டுகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு விளையாட்டு வீரர்களையும் மாலிக் ஸ்ட்ரீம் கார்ப்பரேஷன் நிறுவனம் நிச்சயம் ஊக்குவிக்கும்.” என்று பெருமையோடு கூறுகிறார் மாலிக் ஸ்டிரீம் கார்ப்பரேஷன் நிறுவன இயக்குனர் மாலிக்.

நேற்று வெளியான ட்ரெய்லர் ரசிகர்களை மட்டுமல்லாது அனைத்து தரப்பினரையும் வெகுவாக கவர்ந்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு பலமடங்கு எகிறியுள்ளது.



No comments:

Post a Comment