Featured post

Varalaxmi Sarathkumar Glows with Grace in Sri Lanka Photoshoot! A Symbol of

 Varalaxmi Sarathkumar Glows with Grace in Sri Lanka Photoshoot!  A Symbol of Strength, Style, and Stellar Talent Actress Varalaxmi Sarathku...

Monday, 31 December 2018

சின்னத்திரையிலிருந்து வண்ணத்திரைக்கு வந்துள்ள நடிகை!

சின்னத்திரையிலிருந்து வண்ணத்திரைக்கு வந்துள்ள நடிகை!


சின்னத்திரையிலிருந்து   வண்ணத்திரைக்கு ஒரு நடிகை  வந்துள்ளார். அவர் தான்  நடிகை திவ்யா கணேஷ்.

சின்னத்திரையிலிருந்து திரையுலகில் நுழைந்து புகழ் பெற்றவர்கள் பலருண்டு. ஷாருக்கான், மாதவன் தொடங்கி பிரியா பவானி சங்கர் வரை இந்தப்  பட்டியல் நீளும்.

இந்த வரிசையில் அண்மையில் இணைந்திருப்பவர் தான் திவ்யா கணேஷ். தமிழ் பெண்ணான இவர் சொந்த ஊர்  இராமநாதபுரம். ஏராளமான தொலைக் காட்சித் தொடர்களில் நடித்திருப்பவர் . தோற் றம், நடிப்புத் திறமை என
ஒரு சினிமா நடிகைக்கான எல்லா தகுதிகளையும் கொண்டிருக்கிறார்.
இவர் இப்போது மலையாளத்தில் மோகன்லால் அண்ணன் மகன் நாயகனாக நடிக்கும் படத்தில் நாயகியாக நடிக்கிறார். தாழ்வு மனப்பான்மையும் சந்தேகப் புத்தியும் கொண்ட பெண்ணாக அந்தப் படத்தில் நடிக்கிறார். அந்தப் படத்தை மதுசூதனன் என்பவர் இயக்குகிறார்.
அதே போல தெலுங்கில் ஒரு படத்திலும் நாயகியாக நடிக்கிறார் திவ்யா கணேஷ்.

 பெரிய திரைக்கு வந்து மலையாளம் தெலுங்குப் படங்களில் வாய்ப்பு பெற்று நடிக்கும். திவ்யா கணேஷ் புதிய தமிழ் படத்தில் ஒப்பந்தமாகி இருக்கிறார். திவ்யாவின் கனவு, அதிக தமிழ்ப் படத்தில் நடிக்க வேண்டும் என்பது தானாம்.  அந்தக் கனவு    இந்தப்புத்தாண்டில் நிறைவேறட்டும்...







No comments:

Post a Comment