Featured post

நடிகர் அஜித் குமாரின் பிளாக்பஸ்டர் ஹிட் படமான ‘பில்லா

 *நடிகர் அஜித் குமாரின் பிளாக்பஸ்டர் ஹிட் படமான ‘பில்லா’ மே 1, 2024 அன்று மீண்டும் வெளியாகிறது!* ஸ்லீக் அண்ட் ஸ்டைலிஷ் தோற்றத்தில் திரையை அத...

Sunday 2 June 2019

2008 ல் பங்கு சந்தை வீழ்ச்சியைப் போல் மேலும் ஒரு வீழ்ச்சி வருவதற்கு வாய்ப்புள்ளதாக பங்கு சந்தை நிபுணர் ஏ.ஆர். பிரபாகர் தகவல் ...






ஐ டி பி ஐ கேப்பிடல் ,தேசிய செக்யூரிட்டீஸ் டெபாசிட்டரி லிமிடெட் மற்றும் இந்திய பங்கு சந்தையும் இனைத்து பங்கு சந்தை   முதலீட்டாளர்களுக்கான விழிப்புணர்வு  நிகழ்ச்சி தி.நகரிலுள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது...

இந்த முதலீட்டாளருக்கான விழிப்புணர்வு நிகழ்வில் ஐ டி பி ஐ கேப்பிடல் நிறுவனத்தின் ஆராய்ச்சி பிரிவின் தலைவர் ஏ.கே. பிரபாகர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பங்கு சந்தை வர்த்தகத்தில் தற்போதுள்ள சூழலில் எந்த மாதிரியான பங்குகளில் முதலீடு செய்து அதிக லாபத்தை பெறலாம் என்பதினை குறித்து விளக்க உரையாற்றினார்...

இந்த முதலீட்டாளர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வில் ஏராளமான பங்கு சந்தை முதலீட்டாளர்கள் கலந்து கொண்டு தங்கள் சந்தேகங்களை கேட்டறிந்தனர்...

நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஏ.கே. பிரபாகர்...


ஐ டி பி ஐ கேப்பிடல் சார்பாக நடைபெறும் இந்த முதலீட்டாளர்கள் விழிப்புணர்வு நிகழ்வில் எந்த மாதிரியான பங்குகளில் முதலீட்டாளர்கள் நல்ல லாபம் பெறலாம் என்பதினையும் ,

தற்போது புதிய அரசு பதவியேற்றிருக்கும் நிலையில் டிபன்ஸ் மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் கோச்சின் சிப்யார்டு, எல் அன்டு டி போன்ற பங்குகளல் முதலீட்டாளர்களுக்கு நல்ல வெற்றியை தரும் எனவும்,

இந்தியா 75 சதவீதம் வாங்கும் திறன் கொண்ட நாடாக விளங்குவதால் நுகர்வோர் சந்தை சார்ந்த  பங்குகள் நல்ல பயன் தரும் எனவும்,

2008 ல் பங்கு சந்தை வீழ்ச்சியைப் போல் மேலும் ஒரு வீழ்ச்சி வருவதற்கு வாய்ப்புள்ளதாகவும் குறிப்பாக அமெரிக்கா, சீனாவிற்கிடையேயான வர்த்தக போட்டியினால் பங்கு சந்தைகளை பெருங்சரிவை சந்திக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்தார்...




No comments:

Post a Comment