Featured post

Buddhi Clinic Hosts Landmark “Neurofrontiers 2025” International Neuropsychiatry Colloquium

 Buddhi Clinic Hosts Landmark “Neurofrontiers 2025” International Neuropsychiatry Colloquium INA–GNG Partnership Brings 25 Global Experts to...

Wednesday, 17 July 2019

விஜய் ஆண்டனி நடிப்பில் ஆனந்த கிருஷ்ணன் இயக்கும் புதிய படத்தின் பூஜை நடைபெற்றது .

 விஜய் ஆண்டனி நடிப்பில் செந்தூர் ஃபிலிம் இன்டர்நேஷனல் - T . D ராஜா தயாரிப்பில் ஆனந்த கிருஷ்ணன் இயக்கும் புதிய படத்தின் பூஜை நடைபெற்றது .

விஜய் ஆண்டனி நடிப்பில் செந்தூர் ஃபிலிம் இன்டர்நேஷனல் - T . D ராஜா தயாரிப்பில் ஆனந்த கிருஷ்ணன் இயக்கும் புதிய படத்தின் பூஜை நடைபெற்றது .

பிரசாந்த் நடித்த  ஜாம்பவான் , அர்ஜுன் நடித்த  வல்லக்கோட்டை ஆகிய படங்களின் தயாரிப்பை தொடர்ந்து  சசிகுமார் ,நிக்கி கல்ராணி நடிப்பில் T.D ராஜா தயாரிப்பில் வெளியாக இருக்கும் படம்  " ராஜ வம்சம் " .இது  T. D ராஜாவின் மூன்றாவது  படமாகும் . தற்போது மெட்ரோ பட இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன்
இயக்கும் இப்படம் T .D ராஜாவின் நான்காவது தயாரிப்பாகும் .

அரசியல் கலந்த த்ரில்லர் படமான இப்படத்தில் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடிக்கிறார் .

உரு படத்திற்கு இசையமைத்த ஜோகன் என்பவர் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.  N .S உதயகுமார் ஒளிப்பதிவு செய்கிறர். இணை தயாரிப்பு - ராஜா சஞ்சய் .

படக்குழுவினர் கலந்துகொண்டு இப்படத்தின் பூஜை சிறப்பாக நடைபெற்றது .
இதர நடிகை - நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக்குழு விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.

தொழிநுட்பக்குழு : 

இயக்கம் - ஆனந்த கிருஷ்ணன் ,
தயாரிப்பு - T D ராஜா,
இணைத்தயாரிப்பு - ராஜா சஞ்சய்,
இசை - ஜோகன்,
ஒளிப்பதிவு - N S உதயகுமார்,
மக்கள்தொடர்பு - ரியாஸ் கே அஹமது.




No comments:

Post a Comment