Featured post

Makers of The India Story Drop a Hard-Hitting Promo Exposing Food Adulteration in India

 Makers of The India Story Drop a Hard-Hitting Promo Exposing Food Adulteration in India* Presented by Zee Studios in association with MIG P...

Thursday, 1 August 2019

கதை திருடும் கார்பரேட் நிறுவனங்களை தோலுரிக்க வரும் படம் படைப்பாளன்

                          
 
உலகிலேயே கொடுமையான திருட்டு ஒரு படைப்பாளியின் அறிவைத் திருடுவது தான். அறிவைத் திருடி கொள்ளை லாபம் பார்ப்பவர்கள் அந்த அறிவுக்கு சொந்தமான படைப்பாளியை துரும்புக்கும் கண்டுகொள்வதில்லை. இப்படியான அறிவுத் திருட்டு கதைத் திருட்டு என்ற பெயரில் தமிழ்சினிமாவில் நிறைய நடக்கிறது. அதை மையப்படுத்தி உருவாகியுள்ள படம் தான் “ படைப்பாளன் “ LS தியான் பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பில் S.நடச்சத்திரம் செபஸ்தியான், பிரபுலீன்பாபு, ஆண்டனி ஆகியோர் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளனர்.
இந்த படத்தில் LS.பிரபுராஜா நாயகனாக நடித்துள்ளார். மற்றும் மனோபாலா, இயக்குனர் தருண்கோபி, ஜாக்குவார் தங்கம், பாடகர் வேல்முருகன், காக்கா முட்டை ரமேஷ் - விக்கி, அஷ்மிதா, வளவன், திருச்சி வேலுச்சாமி ஆகியோர் நடித்துள்ளனர்.


தொழில்நுட்ப கலைஞர்கள்

ஒளிப்பதிவு : வேல்முருகன்
இசை  : கிருபாகரன்
பாடல்கள் : கு.கார்த்திக்
கலை : ஸ்ரீமன் பாலாஜி
எடிட்டிங்  : எஸ்.பி.அகமது
மக்கள் தொடர்பு : மணவை புவன்
கதை, திரைக்கதை, வசனம் எழுதி, இயக்கி,நாயகனாக நடித்துள்ளார்  -  L.S.பிரபுராஜா இவர் இயக்குனர் தருண்கோபியிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர்.
படம் பற்றி நாயகனும், இயக்குனருமான L.S.பிரபுராஜா கூறியதாவது..


முழுக்க முழுக்க சினிமாவில் இயக்குனராக துடிக்கும் ஒரு உதவி இயக்குனரின் கதை இது. முன்பெல்லாம் படத்தயாரிப்பாளர்கள் எளிமையான இடத்தில் இருந்து வந்தவர்களாக இருந்தார்கள். இப்போது பெரும்பாலான படங்களை தயாரிப்பது கார்ப்பரேட் நிறுவனங்கள் தான். கதை கேட்பது கிடையாது, பவுண்டட் ஸ்கிரிப்ட் கொடுங்கள் படித்து விட்டு சொல்கிறோம் என்று கதை வாங்கி கிடப்பில் போட்டு அவர்களை
அழைக்கழிக்கிறார்கள். பிறகு சில நாட்களில் ஒரு பிரபலமான இயக்குனர்களை வைத்து அந்த கதையை படமாக்கி வெளியிடுகிறார்கள்.
அந்த உதவி இயக்குனரின் உழைப்பு, வலிகளிக்கு மதிப்பு கொடுப்பதில்லை. அப்படி கார்ப்பரேட் நிறுவனம் ஒன்றிற்கு கதை சொல்லப் போகும் ஒரு உதவி இயக்குநரின் சொந்தக் கதைப் பற்றியும் அவன் சொன்ன கதைப்பற்றியும் தான் இந்த படம். கடவுள் ஒருவனை தண்டிக்க நினைத்தால் அவனை உதவி இயக்குநராக படைத்து விடுவார் என்று சொல்வார்கள். உதவி இயக்குநர்களின் வாழ்வு அத்தகைய துயரம் நிறைந்தது. உதவி இயக்குநராக இருப்பவனுக்கு பெண் கிடைப்பதில் இருந்து வீடு கிடைப்பது வரை பெரும் சங்கடம் தான். மக்களிடையே சினிமா இயக்குனர் என்றால் ஒரு விதமான மோசமாகவே கருதுகிறார்கள். ஆனால் மக்களை தங்கள்  படங்களின் மூலம் மகிழ்விப்பவனே ஒரு படைப்பாளன் தான் அப்படியான வலி மிகுந்த உதவி இயக்குநரின்  வலிகளையும் வழிகளையும்  இப்படம் வெளிச்சம் போட்டுக் காட்ட உள்ளது என்கிறார் நாயகனும் இயக்குனருமான L.S.பிரபுராஜா.

No comments:

Post a Comment