Featured post

Verus Productions presents Gautham Ram Karthik starrer "ROOT" shooting

 Verus Productions presents Gautham Ram Karthik starrer "ROOT" shooting wrapped up! Verus Productions, the makers of Gautham Ram K...

Saturday, 13 July 2019

சசிகுமார், சரத்குமார் இணையும் 'நா நா'


ஒரு படத்துக்கு தலைப்பு என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அது தான் கதையின் முக்கிய அம்சங்களை அதிக தாக்கத்துடன் சொல்கிறது. சில நேரங்களில், அதுவே படத்துக்கான ஈர்ப்பின் முக்கிய ஆதாரமாக கூட மாறுகிறது. அதுவே படம் எதை பற்றியது என்பதை அறியும் ஆர்வத்தையும், கதையுடன் அதன் பொருத்தத்தையும் அறிந்து கொள்ள தூண்டுகிறது. சசிகுமார் மற்றும் சரத்குமார் நடிக்கும் "நா நா" படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், சசிகுமாருடன் சரத்குமார் தோன்றும் படத்தின் முதல் தோற்றம், கதாநாயகனுக்கு இணையான ஒரு வலுவான கதாபாத்திரத்தில் சரத்குமார் நடிக்கிறாரா? என்பது குறித்து ஒரு உடனடி சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 


இயக்குனர் என்.வி.நிர்மல்குமார் இது குறித்து கூறும்போது, “ஆம், சரத்குமாரின் பங்கு நிச்சயமாக கதாநாயகன் சசிகுமார் போலவே முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். திரைக்கதையை எழுதும்போதே, இது ஒற்றை கதாபாத்திரத்தால் இயக்கப்படும் படம் அல்ல, ‘இரட்டை கதாபாத்திரங்கள்’ மூலம் கதை நகரும் என்பதை என்னால் எளிதாக உணர முடிந்தது. நான் மற்றும் எனது குழுவில் உள்ள அனைவருமே சசிகுமார் மற்றும் சரத்குமார் சார் ஆகியோர் தான் இந்த கதாபாத்திரங்களுக்கு பொருத்தமாகவும், முழுமையாகவும் இருப்பார்கள் என்று உணர்ந்தோம். இப்படத்தின் பெரும்பாலான பகுதிகளை சென்னை மற்றும் மும்பையில் இப்போது படமாக்கி இருக்கிறோம்” என்றார்.

“நா நா” என்ற தலைப்பின் உண்மையான அர்த்தம் என்ன என்று இயக்குனர் என்.வி. நிர்மல்குமாரிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது, “இதுதான் உண்மையான ரகசியம். முழு படத்தையும் நீங்கள் பார்க்கும்போது நிச்சயமாக தலைப்பு நியாயமானதாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்" என்றார்.

கல்பதரு பிக்சர்ஸ் சார்பில் பி.கே.ராம் மோகன் தயாரிக்கும் இந்த படத்திற்கு கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்கிறார். ஹர்ஷவர்தான் ராமேஸ்வர் இசையமைக்கிறார். எஸ்பி ராஜா சேதுபதி (படத்தொகுப்பு), ஆர்.சக்தி சரவணன் (சண்டைப்பயிற்சி), வாசுகி பாஸ்கர் (உடைகள்) மற்றும் கபிலன் வைரமுத்து, ஏக்நாத் (பாடல்கள்), கனிஷ்க் (நிர்வாக தயாரிப்பு) ஆகியோர் தொழில்நுட்ப கலைஞர்களாக பணிபுரிகிறார்கள்.

No comments:

Post a Comment