Featured post

மொத ராத்திரி’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா

 *’மொத ராத்திரி’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!* சில  திரைப்படங்கள் மட்டுமே அறிவிக்கப்பட்ட தருணத்திலிருந்தே ரசிகர்களிடையே மிகுந்த...

Showing posts with label Hero Sasikumar. Show all posts
Showing posts with label Hero Sasikumar. Show all posts

Friday, 29 November 2019

The Next Film of 2D Entertainment Starrer Sasikumar and Samudrakani in the lead



The next film of 2D Entertainment, a production house known for consistently delivering quality films that succeed at the box office, began in fine fashion today with the official launch pooja being held at actor Suriya's Agaram Foundation in Valasaravakkam.

Several celebrities including actor Sivakumar, 2D Entertainment Founder and Producer Suriya, Karthi, Sasikumar, Jyotika, Samuthirakani, Soori, Kalaiyarasan, music director D Imman and the CEO of 2D Entertainment Rajasekar Karpoorasundarapandian  participated in the grand event, that took place at around 10.45 this morning.

The film, which, sources say, will have a very unique story, will feature Jyotika, Sasikumar and Samudrakani in the lead and will also feature Soori and Kalaiyarasan in important roles.

Set in a rural backdrop, this film will emphasise the strength of relationships.

Written and directed by Era Saravanan, the film will have cinematographer-cum-director Velraj handling the camera.

D Imman, whose music is a hot favourite of youngsters today, will score the music for the film. The film will be edited by one of Tamil film industry's important editors, S.Ruben. Mujibur Rahman will be the art director of the film, which is to be shot in Pudukottai and Tanjore districts. The list of guests who have attended are Directors Pandiraj, Kalyaan,Fredrick, SY Gowthamraj, TJ Gnanavel,        Guhan Senniapan, Producers SR Prabhu, Cinematographers Ramji Ravi Varma , Kathir and  Playback singer krish

Friday, 20 September 2019

Naadodigal-2 Press Meet and Audio Release














Naadodigal 2 Heroine | அவருதான் எனக்கு எல்லாம் குடுத்தாரு


Heroine Anjali | நாடோடிகள் 2 சசிகுமார் நடிப்போட Version 2 | Nadodigal 2 Press Meet


Hero Sasikumar | என்னோட வாழ்க்கையில நல்லது கேட்டது தெரிஞ்சவங்க தான் என்னை use பண்ணிக்க முடியும்



Director Samuthirakani | இந்த படத்துக்குள்ள எங்க எல்லோருடைய உயிர் இருக்கு





Saturday, 13 July 2019

சசிகுமார், சரத்குமார் இணையும் 'நா நா'


ஒரு படத்துக்கு தலைப்பு என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அது தான் கதையின் முக்கிய அம்சங்களை அதிக தாக்கத்துடன் சொல்கிறது. சில நேரங்களில், அதுவே படத்துக்கான ஈர்ப்பின் முக்கிய ஆதாரமாக கூட மாறுகிறது. அதுவே படம் எதை பற்றியது என்பதை அறியும் ஆர்வத்தையும், கதையுடன் அதன் பொருத்தத்தையும் அறிந்து கொள்ள தூண்டுகிறது. சசிகுமார் மற்றும் சரத்குமார் நடிக்கும் "நா நா" படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், சசிகுமாருடன் சரத்குமார் தோன்றும் படத்தின் முதல் தோற்றம், கதாநாயகனுக்கு இணையான ஒரு வலுவான கதாபாத்திரத்தில் சரத்குமார் நடிக்கிறாரா? என்பது குறித்து ஒரு உடனடி சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 


இயக்குனர் என்.வி.நிர்மல்குமார் இது குறித்து கூறும்போது, “ஆம், சரத்குமாரின் பங்கு நிச்சயமாக கதாநாயகன் சசிகுமார் போலவே முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். திரைக்கதையை எழுதும்போதே, இது ஒற்றை கதாபாத்திரத்தால் இயக்கப்படும் படம் அல்ல, ‘இரட்டை கதாபாத்திரங்கள்’ மூலம் கதை நகரும் என்பதை என்னால் எளிதாக உணர முடிந்தது. நான் மற்றும் எனது குழுவில் உள்ள அனைவருமே சசிகுமார் மற்றும் சரத்குமார் சார் ஆகியோர் தான் இந்த கதாபாத்திரங்களுக்கு பொருத்தமாகவும், முழுமையாகவும் இருப்பார்கள் என்று உணர்ந்தோம். இப்படத்தின் பெரும்பாலான பகுதிகளை சென்னை மற்றும் மும்பையில் இப்போது படமாக்கி இருக்கிறோம்” என்றார்.

“நா நா” என்ற தலைப்பின் உண்மையான அர்த்தம் என்ன என்று இயக்குனர் என்.வி. நிர்மல்குமாரிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது, “இதுதான் உண்மையான ரகசியம். முழு படத்தையும் நீங்கள் பார்க்கும்போது நிச்சயமாக தலைப்பு நியாயமானதாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்" என்றார்.

கல்பதரு பிக்சர்ஸ் சார்பில் பி.கே.ராம் மோகன் தயாரிக்கும் இந்த படத்திற்கு கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்கிறார். ஹர்ஷவர்தான் ராமேஸ்வர் இசையமைக்கிறார். எஸ்பி ராஜா சேதுபதி (படத்தொகுப்பு), ஆர்.சக்தி சரவணன் (சண்டைப்பயிற்சி), வாசுகி பாஸ்கர் (உடைகள்) மற்றும் கபிலன் வைரமுத்து, ஏக்நாத் (பாடல்கள்), கனிஷ்க் (நிர்வாக தயாரிப்பு) ஆகியோர் தொழில்நுட்ப கலைஞர்களாக பணிபுரிகிறார்கள்.

Friday, 7 June 2019

Sarath Kumar joins Kalpataru Pictures’ “Production No.3

Sarath Kumar joins Kalpataru Pictures’ “Production No.3” starring Sasikumar in lead role

Producer P.K. Ram Mohan of Kalpataru Pictures is prettily exhilarated with the way his upcoming film tentatively titled “Production No.3” is shaping up. The film featuring Sasikumar in lead role is helmed by NV Nirmal Kumar, whose maiden direction ‘Salim’ had him enthroned as a bankable filmmaker. Touted to be an action-adventure entertainer, each and every element of this film is projecting the film entirely as a different and fresh treat in the Sasikumar league of movies. In particular, the next schedule kick-starting at luxurious city of Mumbai, especially with the combination of Sarath Kumar has upgraded the impact.

Producer P.K. Ram Mohan says, “Everything we planned is proceeding at brisk and steady momentum. If not for the perfect planning and execution of Nirmal Kumar, this would have not been possible. To handle a project with prominent actors and that too completing the schedules on time without any delay is bliss for any producer. In this aspect, I am feeling so much satisfied with the way how our film is shaping up. We are now delighted to have the versatile actor Sarathkumar sir onboard. What keeps us excited is not just for having him as a part of this film, but the new makeover and style that he will exhibit here. We are commencing our second schedule of 25 days from June 6, which will be completely shot in Mumbai. This is really a special phase of shoot as it will have some crucial scenes shot across the exotic locales of this cosmopolitan city.”

When asked about the role that Sarath Kumar essays in the film, he jocularly adds, “Usually, it would be a producer’s strict rule to keep everyone in the team refrained from letting the cat out of bag and I shouldn’t be breaking the rules right. All that I can assure is that it would be totally a new experience for the audience to watch him in this film. Especially, the unusual combination of Sarath Kumar-Sasikumar will be a spotlighting element as their characters are intensely substantial.”

Totting up for now, producer P.K. Ram Mohan says, “Each and every artiste and technician are enthusiastically energetic and it’s pushing my confidence as a producer at this stage of production itself.”

Ganesh Chandra (DoP), Anand Mani (Art) and Sakthi Saravanan (Choreography) are among the technical crew. The official announcement on the film’s heroine and music director will be made shortly.

Thursday, 30 May 2019

சசிகுமார் நடிப்பில் ஹித்தேஷ் ஜெபக் தயாரிக்கும் பிரம்மாண்டமான இன்வெஸ்டிகேஷன் திரில்லர் படம் !!





நடிகர் சசிகுமார் கெத்தாக நடந்து வந்து காலரைத் தூக்கிவிட்டு நடித்த கிராமத்து படங்கள் இன்றளவும் அவருக்கான ரசிகர் பேட்டயை அப்படியே வைத்திருக்கிறது. மேலும் அவர் புதுமையான கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்தாலும் மக்கள் அவரைக் கொண்டாட தயாராகவே இருக்கிறார்கள்.  கிராமத்து நாயகன் என்பதைத் தாண்டி அவர் பல படங்களில் தனது தடங்களை அற்புதமாக பதித்து வருகிறார். மேலும் அவர் கரியரில் சிறப்பான இடத்தைப் பிடிக்கும் படமாக ஒரு புதிய படம் உருவாக இருக்கிறது. நான் அவனில்லை, அஞ்சாதே, பாண்டி, வன்மம், மாப்பிள்ளை, டிக் டிக் டிக் உள்பட பதிமூன்று படங்களைத்   தயாரித்த நெமிச்சந்த் ஜெபக் நிறுவனம் சார்பாக ஹித்தேஷ் ஜெபக் தயாரிக்கும் இன்வெஸ்டிகேஷன் திரில்லர் படத்தில் சசிகுமார் நடிக்கிறார். இப்படத்தில் சசிகுமார் உடன் தேசியவிருது பெற்ற  ஜோக்கர் படத்தின் நாயகன்  குருசோமசுந்தரம் நடிக்கிறார். இப்படத்தில் கதாநாயகியாக   மானஷா ராதா கிருஷ்ணன் நடிக்கிறார்.   மேலும் இப்படத்தில் இளங்கோ குமரவேல், மாரிமுத்து, அப்புக்குட்டி, ஜார்ஜ் மரியான், பசங்க சிவக்குமரன், சுஜாதா, வித்யா ப்ரதீப்,
 மஞ்சுபெத்து ரோஸ் மற்றும் பலர்  நடிக்கின்றனர்.

மலையாளத்தில் காலேஜ் டேஸ், காஞ்சி, டியான், ஆகிய தரமான படங்களைத் தந்த ஜி.என்.கிருஷ்ணகுமார் இப்படத்தை எழுதி இயக்குகிறார்.

இப்படத்தில் சசிகுமார் சஸ்பெண்ட் செய்யப்பட்ட போலீஸாக நடிக்கிறார். படம் முழுதும் இன்வெஸ்டிகேஷன் திரில்லர் என்பதால் பார்வையாளரை படம் தன் வசப்படுத்திக் கொள்ளும் விதமாக கதை திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறதாம்.  

இவை போன்ற திரில்லர் படங்களுக்கு இசையின் பங்களிப்பு மிக முக்கியம். அதை இப்படத்தில் அர்ப்பணிப்பு உணர்வோடு வெகு சிறப்பாக செய்து வருகிறார் இசை அமைப்பாளர் ரோனி ராப்பில்.

சினிமா என்பதே காட்சிமொழி என்பதால், அந்த மொழியை  S.கோபிநாத் அவர்களின் கேமரா மிக அற்புதமாக கற்று வைத்திருக்கிறது. அந்த ரிசல்ட் நமக்குத் திரையில் மிகப்பிரம்மாண்டமாக தெரியும். அவரின் ஒளிப்பதிவு இப்படத்தில் பெரிய அளவில் பேசப்படும்.

அன்பு அறிவு மாஸ்டரின் அதிரடி சண்டைக்காட்சிகள் எப்போதும் பிரம்மிக்க வைப்பவை. பொதுவாக போலீஸ் கதை என்றால் அங்கு சண்டைக்கு பஞ்சமே இருக்காது. இப்படத்தின் சண்டைக்காட்சிகள் படத்திற்கு பெரும்பலம் சேர்க்க இருக்கிறது.
எடிட்டராக தனது சிறப்பான பணியை
K.j வெங்கட் ரமணன் செய்துவருகிறார்.
இப்படத்தின் வசனங்களை  அருள்செழியன் எழுத
கலை இயக்கத்தை சிவகுமார் யாதவ் கவனிக்கிறார்.

இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப்படம் தயாரிப்பாளர் ஹித்தேஷ் ஜெபக் அவர்களின் 14-வது தயாரிப்பாகும்.

Friday, 1 March 2019

கலைமாமணி விருது வழங்கிய தமிழக அரசுக்கு நடிகர் / இயக்குனர் சசிகுமார் நன்றி தெரிவித்துள்ளார்.

கடந்த 2011 ஆண்டு முதல் 8 ஆண்டுகளுக்கான கலைமாமணி விருது 201 மேற்பட்டவர்களுக்கு தமிழக அரசு வழங்கி சிறப்பித்துள்ளது.


இந்நிலையில் நடிகர் / இயக்குனரான சசிகுமார் அவர்களுக்கு தமிழக அரசு  கலைமாமணி விருதினை வழங்கியுள்ளது.பொள்ளாச்சியில் தன் படப்பிடிப்பில் (sasikumar19 ) இருந்த சசிகுமார் அவர்கள் விருது வழங்கிய  தமிழக அரசுக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

மேலும் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் பரிந்துரையின்படி , இயல் இசை , நாடகம் , கிராமியம் , திரைத்துறை மற்றும் சின்னத்திரை போன்ற கலைப்பிரிவுகளின் கீழ் கலைமாமணி விருதுபெற்ற அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.