Featured post

We are overjoyed to share the incredible news of "Are You OK Baby" receiving heartfelt

 We are overjoyed to share the incredible news of "Are You OK Baby" receiving heartfelt acclaim at the prestigious 14th DSPFF-24. ...

Sunday 14 July 2019

கிராமப்புற மாணவர்களுக்கு மூடப்பட்ட இரும்பு கதவுகள் - நடிகர் சூர்யா

தேசிய கல்விக்கொள்கை வரைவு கிராமப்புற மாணவர்களுக்கு மூடப்பட்ட இரும்பு கதவுகள் - நடிகர் சூர்யா பத்திரிகையாளர் சந்திப்பில் 
அரசு பள்ளி மாணவர்கள் குறித்து பேச்சு!!




தேசிய கல்விக்கொள்கை வரைவு அறிக்கை பற்றி அகரம் பவுண்டேஷன் நடத்திய பத்திரிக்கையாளர் சந்திப்பில் நடிகர் சூர்யா பத்திரிகையாளரிடம் பேசினார். இதில் அவர், " மத்திய அரசு வெளியிட்டுள்ள தேசிய கல்விக்கொள்கை மக்களிடம் சென்று இன்னும் முழுமையாக சேரவில்லை, இன்னும் இது பற்றிய விழிப்புணர்வு ஏற்படாத காரணத்தினால் இந்த பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தேறியுள்ளது. மத்திய அரசு வெளியிட்டுள்ள இந்த கல்விக்கொள்கை வரைவில், 3ஆம் வகுப்பு முதல் நுழைவு தேர்வு, கல்வி தேர்வு என தேர்வுகள் வைக்கப்படுவதாக அறிவித்துள்ளனர். சரியான சமமான கல்வி இல்லாமல் எப்படி கல்வி தேர்வுகள் வைக்க முடியும்? இந்த புதிய கல்விக்கொள்கை என்பது முப்பது கோடி மாணவர்களின் வாழ்க்கை பற்றியது. இந்த கல்விக்கொள்கை பற்றிய கருத்துக்கள் மக்களிடம் இருந்து கிடைக்கப்பெற்றால் மட்டுமே மாற்ற முடியும் என்கின்ற போது பெற்றோர்களும், ஆசிரியர்களும் இது குறித்து அதிக கவனம் செலுத்த வேண்டும்.

தற்போது ஓராசிரியர் உள்ள பள்ளிகள் மூடப்பட்டு வருகிறது, அவ்வாறு இருக்கையில் எப்படி அங்கு படிக்கும் பிள்ளைகள் இதுபோன்ற கொள்கைகளுக்கு ஏற்ப தேர்வுகளை எழுத முடியும்.  ஆரம்பக் கல்வியிலேயே மூன்று மொழிகளை திணிக்கின்றனர், இதுபோன்று மொழிகளை திணிப்பதன் மூலம் அரசு பள்ளி மாணவர்கள் மிகவும் பாதிக்கப்படுவார்கள் . ஏனெனில் அரசு பள்ளிகளில் இதுபோன்ற கல்விகள் மாணவர்களுக்கு கிடைப்பதில்லை. 5-ம் வகுப்பு  முதல் பொதுத்தேர்வு  நடத்தினால் இடைநிற்றல்  அதிகரிக்கும்,  6.5 கோடி மாணவர்கள் பள்ளிப்படிப்பை  பாதியிலேயே நிறுத்தி விடுவார்கள் . 60% மாணவர்கள் அரசு பள்ளிகளில் தான் படிக்கிறார்கள், புதிய கல்விக்கொள்கை குறித்து விரிவாக விவாதிக்க வேண்டியது மிகவும் அவசியம், அரசு  பள்ளிகளில் போதுமான ஆசிரியர்கள் இல்லை, 10  ஆண்டுகளாக ஆசிரியர்களே இல்லாமல் படிக்கும் 30% மாணவர்கள் எப்படி நீட் தேர்வு  எழுதுவார்கள்? 

பள்ளிகள் மட்டுமல்லாது கலை அறிவியல் கல்லூரியில் சேர்வதற்கும்  நுழைவுத் தேர்வு வைத்துள்ளனர். எதற்கெடுத்தாலும் நுழைவுத் தேர்வு நடத்தினால் மாணவர்கள் எப்படி படிக்க முடியும், ஒரு வேலை படிக்க முடியாமல் அவர்கள் தேர்வுகளில் தோல்வியடைந்தால் பின் எப்படி அனைத்து மாணவர்களும் படிக்க முடியும். நுழைவுத் தேர்வுகளால் தனியார் பயிற்சி  மையங்கள் அதிகரிக்கும், தனியார் பயிற்சிப்பள்ளிகள் நாடு முழுவதும் ரூ.5000 கோடி வருமானம் ஈட்டுகின்றன, கற்பித்தல் என்ற முறைக்கு பதில் கோச்சிங் சென்டர் முறை வரும் .அதுபோன்ற ஒரு சூழ்நிலை ஏற்பட்டால் பின் பள்ளி கல்லூரிகளின் தேவைகள் இல்லாமல் போய்விடும்." என அவர் கூறினார்.

No comments:

Post a Comment