Featured post

Heartfelt greetings and gratitude to my beloved fans, my dear friends, and the general public

 Heartfelt greetings and gratitude to my beloved fans, my dear friends, and the general public  Today sept 10th i complete 21 years of my jo...

Wednesday, 4 September 2019

வாழ்க விவசாயி படம் என்னை வாழவைக்கும் - நடிகர் அப்புகுட்டி



 விவசாயிகள் சம்பந்தப்பட்ட கதையுடன் உருவாகி இருக்கும் 'வாழ்க விவசாயி 'படம் தன்னை வாழவைக்கும்என்று நடிகர் அப்புகுட்டி  கூறுகிறார்.

 இன்று நாட்டில் பற்றி எரிகிற பிரச்சினையாக வடிவெடுத்து நிற்கிறது விவசாயிகள் சார்ந்த பிரச்சினைஇதைமையமாக வைத்து உருவாகி இருக்கும் படம் தான் 'வாழ்க விவசாயி'.விவசாயிகள் வாழ்ந்தால் தான் நாடுவாழும் என்கிற கருத்தை மையப்படுத்தி இப்படம் உருவாகியிருக்கிறது .மேலோட்டமாக இல்லாமல் முழுக்கமுழுக்க விவசாயம் சார்ந்த பிரச்சினைகளை அலசுகிற இந்தப் படத்தில் நாயகனாக நடித்திருக்கிறார் தேசியவிருது நடிகர் அப்புக்குட்டி .படம் பற்றிய அனுபவங்களைப் பெருமையுடன் அப்புக்குட்டி இங்கே பகிர்ந்துகொள்கிறார் இப்படி

."எனக்கு  'அழகர்சாமியின் குதிரைபடம்  பரவலான பாராட்டுகளையும் புகழையும் தேடித் தந்ததுஅதற்குப் பிறகுதேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும் என்ற தெளிவையும் கொடுத்தது .நல்ல கதையம்சம் கொண்ட படத்தில்மட்டுமே நடிக்க வேண்டும் என்று  முடிவு செய்து கொண்டேன்.இது மாதிரி கதையில் நான் நடிக்க வேண்டும்என்று நான் விரும்பிய ஒரு கதையாக 'வாழ்க விவசாயி 'கதை அமைந்திருக்கிறது . அந்த கதையைச்சொன்னபோதே இதில் நாம் நடிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு வந்துவிட்டது .எனக்கு மிகவும் பிடித்தகதை .நான் ஆசைப்பட்டு விரும்பி நடித்த கதை.    இயக்குநர்  P.L.பொன்னிமோகன்  சொன்ன கதை மட்டும்பிடித்து இருந்தால் போதுமாஇதை தயாரிக்க நல்ல தயாரிப்பாளர் வேண்டுமேஅப்படி ஒரு  நல்லதயாரிப்பாளராக  பால் டிப்போ கதிரேசன்  கிடைத்தார்படத்தின் மீது எனக்கு நம்பிக்கை வரும்படி விரைவாகவேஎனக்கு முன் பணம் கொடுத்தார்படம் தொடங்கப் பட்டதுஇயக்குநர் மோகன் சொன்னபடியே கதையைஅழகாகப் படமாக்கியிருக்கிறார் .

ஒரு கிராமத்தில் விவசாயம் செய்யும் மக்களுடன் நாமும் வாழ்ந்த உணர்வைப் படம் பார்க்கும் ஒவ்வொருவரும்உணர்வார்கள்நானும் ஒரு விவசாயின் மகன்எனக்கும் விவசாயம் தெரியும்நாற்று நடுவது ,களை எடுப்பது,கதிர் அடிப்பது , அறுவடை செய்வது வரை எனக்கும் எல்லா வேலைகளும் தெரியும் .எனவே இந்தப் படத்தில்நடிப்பது மிகவும் சுலபமாகவும் மகிழ்ச்சியாக இருந்தது ." என்றார்.

அப்புகுட்டி தன் படத்தின் கதாநாயகி பற்றிக் கூறும்போது , 
"கதையைக் கேட்டவுடன் படமெடுப்பது என்று முடிவானது .உடன் எனக்குள் அடுத்த கேள்வி வந்தது .யார்கதாநாயகி ?அவர் எப்படி இருப்பார்என்பது தான் அது .ஏனென்றால் என் உயரத்துக்கு அவர்களும் சரியாகஇருக்க வேண்டுமே என்கிற கவலை எனக்கு.
 நாயகி வசுந்தரா என்றார்கள்எனக்கு தூக்கிவாரிப்போட்டது .அவர் என்னை விட உயரமாக இருப்பாரே.என்னைவிட நிறமாக இருப்பாரே என்று மீண்டும் கவலை .  அவர் 'தென்மேற்கு பருவக்காற்றுபடத்தில் நடித்ததுஎனக்குப் பிடித்திருந்தது 'பேராண்மை'யிலும் நன்றாக நடித்திருந்தார் .ஆனால் அவரைப் பற்றி நான்கவலைப்பட்டது பயந்தது எல்லாமே படப்பிடிப்பில் மாறிவிட்டது .அவர் உயரம் தெரியாத படியும் நிறம் தெரியாதபடியும் சரி செய்து மாற்றங்கள் செய்து மேக்கப்பில் நிறத்தைக் குறைத்து எனக்கு ஜோடியாக நடிக்கவைத்துவிட்டார்கள் . வசுந்தரா ஒரு அர்ப்பணிப்புள்ள நடிகை .அவர் வழக்கமான கதாநாயகி கிடையாது.அவருக்கும்  இந்தப் படம் நல்ல பெயரைத் தேடித் தரும்தன்னால் முடிந்த உழைப்பையும் அர்ப்பணிப்பையும்காட்டியிருக்கிறார்கதையின்படி எனக்கு  இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள்நான் இரண்டு குழந்தைகளுக்குதந்தை .வினோத்சந்தியா என்ற அந்த இரண்டு குழந்தைகளும் நன்றாக நடித்திருக்கிறார்கள் "என்றவர்படப்பிடிப்பில் நடந்த ஒரு சம்பவத்தை நினைவுகூர்ந்தார் .

"ஒரு நாள் ஒரு பரணில் கதாநாயகன் கதாநாயகி நாங்கள் இருவரும் ஏறி அமர்ந்து பேசிக்கொண்டுகொண்டிருப்பது போன்ற காட்சி படமாக்கப்பட்டதுஆர்ட்டைரக்டர் அந்தப் பரணை நன்றாகத்தான் தயார் செய்துஇருப்பதாக கூறினார்முதல் நாள் நல்ல மழை பெய்திருந்தது .பாண் நனைந்து ஈரம் சொட்டச் சொட்ட  இருந்தது.முதலில்  அதில் நான் ஏறினேன் .அடுத்து வசுந்தரா ஏறிய போது அந்தப் பரண்  சரிந்து விழுந்ததுநான் விழுந்துஎன் மேல் அவர் விழுந்தார்என் மேல் அவர் விழுந்ததைப் பார்த்து எனக்கு பதற்றமாகவும் பயமாகவும் இருந்தது.
ஆபத்துக்கு பாவம் இல்லை என்று அவரை நான் பிடித்துக்கொண்டேன் . தவறாக நினைத்துக் கொள்வாரோ என்றுபயந்தேன்ஆனால் நீங்கள் "நல்ல வேளை என்னை காப்பாற்றி விட்டீர்கள்நான்  உங்கள் மேல்விழுந்திருக்காவிட்டால் எனக்கு இந் நேரம் அதிகமாக அடிபட்டிருக்கும்என்றார்எனக்கு அப்பாடா என்றிருந்தது .

இந்தப் படம் விவசாயம் பற்றிய படம் தான்நம் அனைவருக்கும் பிடித்த கதையாக இருக்கும். 'வாழ்க விவசாயி'படம் என்னை வாழ வைக்கும்  படமாக இருக்கும் என்று நம்புகிறேன்இந்தப் படம் விவசாயிகளைதிரும்பிப்பார்க்க வைக்கும் படம் என்று சொல்வதைவிட எல்லா மக்களையும் விவசாயிகள் பக்கம் திரும்பிப்பார்க்க வைக்கும் ஒரு படமாக இருக்கும் என்று உறுதியாகக் கூறலாம்ஒரு விவசாயியாக நான் வாழ்ந்திருக்கும்இந்தப் படம் எனக்கு நல்ல பெயரைத் தேடித் தரும் என்று உறுதியாக நம்புகிறேன்என்று கூறினார் பெருமையாக.

நடிகர்கள் அப்புக்குட்டிவசுந்தராஹலோ கந்தசாமிஸ்ரீகல்கிமுத்துராமன்திலீபன்மதுரை சரோஜாகுழந்தைநட்சத்திரங்கள் சந்தியாவினோத்ஆனந்தரூபிணி மற்றும்  விஜயன்கராத்தே கோபாலன்

எழுத்து இயக்கம்  - P.L.பொன்னிமோகன்
இசை - ஜெய்கிருஷ்.K, 
ஒளிப்பதிவு -  K.P.ரதன் சந்தாவத்
படத்தொகுப்பு - பா.பிரவின் பாஸ்கர்
கலை -  R. சரவண அபிராமன் B.f.a, 
நடனம் - காதல் கந்தாஸ்
பாடல்கள் - யுகபாரதிமணி அமுதவன்தமயந்திஒலிக்கலவை G.தரணிபதி d.f.t,  மக்கள் தொடர்பு - சக்திசரவணன்

தயாரிப்பு "பால்டிப்போ"K.கதிரேசன்

No comments:

Post a Comment