Featured post

A New Wave of Romance in Tamil Cinema – Aaromaley Intro Feel Out Now!

 *A New Wave of Romance in Tamil Cinema – Aaromaley Intro Feel Out Now!* The much-awaited romantic comedy Aaromaley is gearing up to hit the...

Saturday, 14 September 2019

சென்சாரில் லஞ்சம் இருக்கு " ஆண்கள் ஜாக்கிரதை “ இசை வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் கே.ராஜன் பேச்சு ..



ஜெமினி சினிமாஸ் ஜெனிமி ராகவா மற்றும் GEMS பிக்சர்ஸ்  முருகானந்தம்  இணைந்து தயாரித்துள்ள  படம் ஆண்கள் ஜாக்கிரதை. K.S முத்து மனோகரன் இயக்கியுள்ள இப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னை பிரசாத்லேப்-ல் பிரம்மாண்டமாக நடைபெற்றது. விழாவில் படக்குழு உள்பட பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டார்கள்

தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு பேசியதாவது,

"ஜெமினி ராகவா தயாரிப்பாளராக தான் எனக்கு அறிமுகமானார். அவருக்குள் இப்படி ஒரு நடிகர் இருப்பார் என்பது இப்போது தான் தெரிகிறது. இப்படம் வெற்றியடைய வாழ்த்துகிறேன்" என்றார்


தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் பேசியதாவது,

"ஜெமினி ராகவா சினிமாவை நேசிக்க கூடியவர். சினிமா நல்லாருக்கணும்னு நினைக்கிறவர். அவர் இந்தப்படத்தை பட்ஜெட்டுக்குள் முடித்துவிட்டேன் என்றார். இயக்குநரும் அவரும் ஒன்றாக வந்து அதைப் பெருமையோடு சொன்னார்கள். படத்தின் ட்ரைலர் ரொம்ப நல்லாருந்தது. இந்தப்படம் பெரிய வெற்றியடைய வேண்டும் என்று வாழ்த்துகிறேன்" என்றார்


தயாரிப்பாளர் கே.ராஜன் பேசியதாவது,

"ஆண்கள் ஜாக்கிரதை. எப்போதுமே ஆண்கள் ஜாக்கரதையாகத் தான் இருக்கணும். ஏன்னா இப்போ மீடூ என்ற விசயம் வந்த பின் ஆண்களுக்குப் பாதுகாப்பே இல்லை. எல்லாரும் முதல் போட்டு படமெடுப்பார்கள். இந்தத்தயாரிப்பாளர் முதலைகளைப் போட்டு படமெடுத்துள்ளார். இப்போது நடிகர்களை வைத்து படமெடுப்பதே கஷ்டம். இவர்கள் முதலையை வைத்து சிறப்பாக எடுத்திருக்கிறார்கள். ட்ரைலரே நன்றாக இருந்தால் படம் கண்டிப்பாக நல்லாருக்கும். குறிப்பாக இசை நன்றாக இருந்தது. அதனால் இது வெற்றிப்படம் என்பதில் சந்தேகமில்லை. சூட்டிங்கில் இடையில் நாய் வந்தால் கூட இப்போது சென்சாரில் பிரச்சனை வருகிறது. மோடி அரசு நல்லா போகுறதா சொல்றாங்க. ஆனால் அனிமல் க்ளீயரன்ஸ் வாங்குவதற்கு சென்சாரில் லஞ்சம் இருக்கு. போனமாசம் கூட ஒரு படத்திற்கு மூன்று லட்சம் வாங்கினார்கள். அனிமல் வெல்பார் பிரச்சனையை சரி செய்வது படம் எடுப்பதை விட கஷ்டமாக இருக்கிறது. ஆன்லைன் டிக்கெட் விசயத்தை நிர்மலா சீத்தாராமன் சரி செய்கிறேன் என்று சொன்னார். அதை இப்போது நமது அரசு செய்துள்ளது. அந்த ஆன்லைன் மூலமாக வரும் வருமானத்தில் தயாரிப்பாளர்களுக்கும் பங்கு கொடுக்க வேண்டும். இயக்குநர்கள் எல்லாம் தயாரிப்பாளர்களை மனதில் வைத்து படமெடுக்க வேண்டும். ஒரு ஹீரோவை வைத்து  படமெடுத்தால் எவ்வளவு வியாபாரமாகும் என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்" என்றார்


இயக்குநர் பிரவீன்காந்த் பேசியதாவது,

". வைரமுத்து தமிழ்சினிமாவில் முக்கியமான ஆள். எல்லாராலும் கொண்டாடப்படும் ஒரு கலைஞனை இப்படி பண்ணி இருக்க வேண்டாம் என்பது மட்டும் எனக்குத் தோன்றுகிறது. அதை மட்டும் முடிந்தால் கொஞ்சம் மாற்றிக்கொள்ளுங்கள். இதுபோன்ற சின்னப்படங்கள் நிறைய வரவேண்டும். இப்படம் வெற்றிபெற வாழ்த்துகள்" என்றார்

ஜாக்குவார் தங்கம் பேசியதாவது,

"ராகவா ரொம்ப சிறப்பா நடிச்சிருக்கார். அவர் நல்ல மனிதர். அதனால் இப்படம் நல்லா தான் வரும். இப்படத்தின் நாயகிகள் எல்லாம் ரொம்ப ஜாலியா துணிச்சலாவும் நடிச்சிருக்காங்க. க்யூப் விசயத்தில் வரவிருந்த ஒரு உதவியை விசால் தான் தடுத்தார் என்று ராகவா சொன்னார். சின்னப்படங்கள் 100 படங்களுக்கு  தயவுசெய்து தியேட்டகர்கள் கிடைக்க அரசு ஆவணம் செய்ய வேண்டும்" என்றார்

தயாரிப்பாளர் தேனப்பன் பேசியதாவது,

"ராகாவாவின் உழைப்பு இப்படத்தில் நன்றாக தெரிகிறது. கேமராமேன் இசை அமைப்பாளர் உள்பட எல்லாரும் நல்லா உழைத்து இருக்கிறார்கள். இந்தப்படம் வெற்றி அடையவேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன்" என்றார்


இயக்குநர் ஏ.வெங்கடேஷ் பேசியதாவது,

"இத்தயாரிப்பாளர் நடிப்பிற்காக தன்னை மிக அழகாக உருமாற்றி இருக்கிறார். மேலும் இப்படத்தில் உள்ள அனைவருமே தங்களின் உழைப்பைச் சிறப்பாக கொடுத்திருக்கிறார்கள்" என்றார்

நடிகர் பாபுகணேஷ் பேசியதாவது,

"ராகவா ரொம்ப நல்லவர். விசால் தயாரிப்பாளர் சங்கத்தேர்தலில் வெற்றிபெற இந்த ராகவா தான் காரணம்..பெரிய கதாநாயகிகள் எல்லாம் ஒரு விசயத்தை உணரவேண்டும். பெரிய நாயகர்கள் கூடத்தான் நடிப்பேன் என்று அவர்கள் அடம் பிடிக்கக்கூடாது. நல்ல கதை இருக்கிறதா என்று தான் பார்க்க வேண்டும். இப்படத்தில் வைரமுத்துவைப் பற்றி விமர்சித்து இருக்கிறார்கள். அது கதைக்கு தேவை என்பதால் தான் பயன்படுத்தி இருக்கிறார்கள். இப்படத்தில் பங்குபெற்ற அனைவருக்கும் என் வாழ்த்துகள். மேலும் அண்ணன் கே.ராஜன் சென்சாரில் லஞ்சம் இருக்கிறது என்றார். மோடி ஆட்சியில் லஞ்சமே இல்லை. ஏன் என்றால் எல்லா பணப்பரிவர்த்தனையும் இப்போது ஆன்லைனில் தான்" என்றார்

 இயக்குநர் K.S முத்து மனோகரன் பேசியதாவது,

"என் வளர்ச்சிக்கு காரணமானவர்களை முதலில் வணங்குகிறேன். தயாரிப்பாளர்கள் முருகானந்தம் மற்றும் ராகவா இல்லை என்றால் இப்படம் இல்லை. இந்தப் படத்தில் துணிச்சலாக நடித்த ஹீரோயின்களை பாராட்டுகிறேன். சிவகுமாரின் வொர்க் மிக அசாயத்தியமாக இருக்கிறது. இசை அமைப்பாளருக்கும் எனக்கும் நல்ல கெமிஸ்ட்ரி உண்டு. இந்தப்படத்தைப் பற்றி மற்றவர்கள் நிறையப்பேசி விட்டார்கள். இனி நான் பேசுவதற்கு ஒன்றுமில்லை. படத்தைப் பார்த்துவிட்டு நீங்கள் தான் சொல்ல வேண்டும். இப்படத்தை வாங்கி வெளியீடும் சுஜித் சாருக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்

 தயாரிப்பாளர் ஜெமினி ராகவா பேசியதாவது,

"ரொம்ப கஷ்டப்பட்டு இப்படத்தை தயாரித்து இருக்கிறோம். இதைச் சின்னபடம் என்று நினைக்காமல் மக்களிடம் இப்படத்தை கொண்டு சேர்க்க வேண்டும் பத்திரிகையாளர்களை கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.

டிகர்கள் - தொழில்நுட்ப கலைஞர்கள்

முருகானந்தம், ஜெமினி ராகவா, சங்கீதா, ரோஜா,  ஐஸ்வர்யா பழனி, மஹிரா,ரேஷ்மி, மூர்த்தி, இளங்கோ ஆகியோர் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு  - M.P.சிவகுமார்
இசை  - பாலகணேஷ்
எடிட்டிங்  -  G.V.சோழன்
விளம்பர வடிவமைப்பு  - அயனன்
இணை தயாரிப்பு – க.முருகானந்தம்.
தயாரிப்பு – ஜெமினி ராகவா
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் -  K.S.முத்துமனோகரன்

No comments:

Post a Comment