Featured post

Phoenix Veezhan Movie Review

 Phoenix Veezhan Movie Review ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம pheonix  படத்தோட review அ தான் பாக்க போறோம்.  இது ஒரு sports  action drama . இந்த ப...

Sunday, 8 December 2019

முப்பெரும் விழாவாக நடைபெறவுள்ள நான் சிரித்தால் படத்தின் பாடல் வெளியீட்டு விழா

அவ்னி மூவிஸ் சார்பில் சுந்தர்.சி தயாரிக்கும் 'நான் சிரித்தால்' படத்தில் 'ஹிப் ஹாப்' ஆதி நாயகனாக நடிக்கிறார். இப்படத்தின் 'பிரேக் அப் பிரேக் அப் எனக்கு பிரேக் அப் வலிக்குதா வலிக்குதா நெஞ்சுக்குள்ள' என்ற பாடலை நாளை (07.12.2019) மாலை 5-7 மணி வரை சென்னையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் வெளியிடவுள்ளார்கள். இப்பாடலை ஆதியே எழுதி இசையமைத்திருக்கிறார். அவரைப் போலவே சுயமான பாடகர்களை அழைத்து பாட வைக்கவுள்ளார்கள். இதுதவிர, ஆதியின் வாழ்க்கையையும் அவர் கடந்த வந்த பாதையையும் கொண்ட காணொளியையும் வெளியிட்டு உள்ளார்கள்.

மேலும், சிறந்த சிரிப்புக்கான போட்டியை நடத்துகிறார்கள். இப்போட்டியில் கலந்து கொள்பவர்கள் தங்களது சிரிப்பை மொபைலில் பதிவு செய்து இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்ய வேண்டும். அதில் 10 பேரின் சிரிப்பைத் தேர்ந்தெடுத்து பரிசு வழங்குகிறார்கள்.

இப்படத்தின் மீதமுள்ள இரண்டு பாடல்களில் ஒன்றை கோயம்புத்தூரிலும், இன்னொரு பாடலை மதுரையிலும் வெளியிடுகிறார்கள்.

இந்த பயணத்திற்கு 'நான் சிரித்தால்' மியூசிக் டூர் என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.

No comments:

Post a Comment