Featured post

*City Civil Court Hyderabad Grants Ad-Interim Injunction Protecting Chiranjeevi's Personality Rights

 *City Civil Court Hyderabad Grants Ad-Interim Injunction Protecting Chiranjeevi's Personality Rights* The Court of the Chief Judge, Cit...

Sunday, 15 December 2019

ஜீ.வி பிரகாஷின் பாடலை வாங்கிய யுவன்சங்கர் ராஜா

ஜீ.வி பிரகாஷின் பாடலை வாங்கிய யுவன்சங்கர் ராஜா

ஒரு படத்திற்கான அங்கீகாரம் என்பது மக்களால் பெரிதாக அங்கீகரிக்கப்பட்ட பிரலபங்கள் அப்படத்தை எதாவது முறையில் அங்கீகரிக்கும் போதுதான். தற்போது புதிதாக தயாராகியுள்ள வணிகன் என்ற படத்தின் ஆடியோ உரிமைதை வாங்கி அப்படம் மீதான நம்பிக்கையை கூட்டி இருக்கிறார் இசை அமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா.

FESTUS PRODUCTIONS என்ற பட நிறுவனம் சார்பில் செந்தில் விஜயகுமார் தயாரிப்பில் டேனியல் VP எழுதி இயக்கியுள்ள படம் வணிகன். 
நேரம், பிரேமம், வெற்றிவேல் ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ஆனந்த் நாக் கதாநாயகனாக  நடித்துள்ளார். பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக வலம்வந்து கொண்டிருக்கும் நக்ஷத்திரா நாகேஷ் இந்த படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகிறார். மற்றும் முக்கிய கதாப்பாத்திரத்தில் சார்லி,  புச்சட்னி ராஜ்மோகன், கிருத்திகா பாலா ஆகியோர் நடித்துள்ளனர்.







இசை  -  சுரேஷ்குமார்.TR - புவனேஷ்செல்வனேஷன்
ஒளிப்பதிவு - அகஸ்டின் இளையராஜா
பாடல்கள்  - மோகன்ராஜன்  
எடிட்டிங்  - பரமேஷ்கிருஷ்ணா
தயாரிப்பு  - செந்தில் விஜயகுமார்
கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார் டேனியல்VP.
இவர் இதற்கு முன்  இரண்டு குறும்படங்களை இயக்கியுள்ளார்.
படத்தை பற்றி இயக்குனர் டேனியல்VP. கூறியதாவது, 

"இது ஒரு எதார்த்தமான திரில்லர் படம். தற்போது சமூகத்தில் நடந்துகொண்டிருக்கும் ஒரு முக்கியமான விஷயத்தை இதில் கையாண்டிருக்கிறோம். இந்த படத்தின் பாடல்களை கேட்ட பிரபல  இசையமைப்பாளர்  யுவன்சங்கர் ராஜா, இசையமைப்பளார்களை பாராட்டியதோடு மட்டுமல்லாமல், தனது யூ1 ரெக்கார்டஸ் நிறுவனம் மூலம் இந்த படத்தின்  ஆடியோ உரிமையை வாங்கியிருக்கிறார் அது எங்கள் படக்குழுவினருக்கு கிடைத்த முதல் வெற்றியாக கருதுகிறோம். தவிர இந்த படத்தில் இசையமைப்பாளர், நடிகர் ஜி.வி.பிரகாஷ் குமார், பாடலாசிரியர் மோகன்ராஜன் எழுதிய "  வாடி முட்ட கண்ணி " என்ற பாடலை பாடியுள்ளார். அந்த பாடலை இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா வெளியிட்டார். அது தற்போது சமூகவலைத் தளங்களில் வைரலாக பரவிவருகிறது. படம் விரைவில் வெளியாக உள்ளது" என்றார் இயக்குனர்  டேனியல்VP.

No comments:

Post a Comment