Featured post

Wonderla Chennai to Open on December 2: A New Era of Entertainment for Tamil Nadu

 Wonderla Chennai to Open on December 2: A New Era of Entertainment for Tamil Nadu India’s first Bolliger & Mabillard (B&M) Inverted...

Wednesday, 11 December 2019

மகத்தான வரவேற்பைப் பெற்று வரும் சிபிராஜின் 'வால்டர்' ஃபர்ஸ்ட் லுக்!

மகத்தான வரவேற்பைப் பெற்று வரும் சிபிராஜின் 'வால்டர்' ஃபர்ஸ்ட் லுக்!

நேற்று மாலை எஸ்.ஜே.சூர்யா வெளியிட்ட சிபிராஜின் 'வால்டர்' ஃபர்ஸ்ட் லுக் மிகப் பெரிய வரவேற்பை சிபிராஜுக்குப் பெற்றுத் தந்து வருகிறது. காவலர் உடையில் சிபிராஜின் சீற்றம் மிக்க தோற்றம், மிகப் பெரும் வரவேற்பையும் பாராட்டுதல்களையும் தொடர்ந்து பெற்ற வண்ணம் இருக்கிறது. படம் பார்ப்பவர்களின் அட்ரிலின் சுரபி வேகமாக வேலை செய்யத்தக்க அளவிலான விறுவிறுப்பான  சண்டைக் காட்சிகள் படம் முழு்க்க விரவிக் கிடக்கின்றன. கோவில் நகரமென புகழப்படும் கும்பகோணத்தில் உள்ள வழிபாட்டுத் தலங்களில், யு.அன்பழகன் இயக்கத்தில் வளர்ந்த 'வால்டர்'   துவக்க நிலையிலிருந்தே அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

தற்போது பின் தயாரிப்புப் பணிகளும் நிறைவடையும் தருவாயில் இருக்கும் வால்டர் படத்தை, 11:11 நிறுவனம் சாப்பில் ஸ்ருதி திலக்
தயாரித்திருக்கிறார். படத்தின் டிரைலர், பாடல்கள் வெளியீடு  மற்றும் உலகெங்கும் திரையரங்குளில் வெளியிடப்படும் தேதி  குறித்து விரைவில் அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாக இருக்கிறது. 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு' படப்புகழ் ஷெரின் காஞ்ச்வாலா சிபிராஜின் ஜோடியாக நடிக்க, படத்தின் மற்றொரு முக்கியத்துவம் வாய்ந்த வேடத்தில் சமுத்திரக்கனி நடிக்கிறார்.


No comments:

Post a Comment