Featured post

Hit 3 Movie Review

Hit 3 Review ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம hit part 3 படத்தோட review அ தான் பாக்க போறோம்.  telugu ல hit படத்தோட series க்கு fan அ இருக்கறவங்க ர...

Saturday, 2 May 2020

நடிகர் சண்முக பாண்டியனை 'ஃபேஸ் டைம்

நடிகர் சண்முக பாண்டியனை 'ஃபேஸ் டைம் போட்டோ ஷூட்' எடுத்த ராக்கி பார்த்திபன்..!

சகாப்தம், மதுரைவீரன் போன்ற படங்களில் நடித்த நடிகர் சண்முக பாண்டியன் தற்போது 'மித்ரன்' என்ற படத்தில் போலீஸ் வேடத்தில் நடித்து வருகிறார். அப்படதிற்காக தனது உடல் கட்டமைப்பை மாற்ற நெதர்லாந்து நாட்டிலுள்ள சுமோ ஆம்ஸ்டாம் சென்ற போது கொரோனா நோயின் ஊரடங்கு காரணமாக அந்நாட்டிலேயே இருக்கிறார்.



அவரை நடிகர் பார்த்திபனின் மகன் ராக்கி பார்த்திபன் 'ஃபேஸ் டைம் ஃபோட்டோ ஷூட்' எடுத்திருக்கிறார். இது வீடியோ  மூலமாகவே புகைப்படத்தை எடுக்கும் புதிய முயற்சி.

 இதன் மூலம் இனிவரும் காலங்களில் ஒருவரை அவர் அருகில் இல்லாவிட்டாலும் வீடியோ மூலமாகவே புகைப்படம் எடுக்க முடியும் என்று சண்முக பாண்டியன் மற்றும் ராக்கி பார்த்திபன் கூட்டணி நிரூபித்திருக்கிறது .

சண்முக பாண்டியன் தற்போது இரண்டு ஆக்ஷன் படத்தில் ஒப்பந்தம் ஆகி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment