Featured post

கே.வி.என். புரொடக்ஷன்ஸ் மற்றும் தெஸ்பியன் ஃபிலிம்ஸ் இணையும் முதல் திரைப்படம்

 *கே.வி.என். புரொடக்ஷன்ஸ் மற்றும் தெஸ்பியன் ஃபிலிம்ஸ் இணையும் முதல் திரைப்படம்* *மஞ்சும்மல் பாய்ஸ் இயக்குநரின் அடுத்தப் படம் பாலன்* மலையாள த...

Friday, 15 May 2020

தென்னிந்திய சின்னத் திரை தயாரிப்பாளர்கள் சங்கம்(STEPS)

தென்னிந்திய சின்னத் திரை தயாரிப்பாளர்கள் சங்கம்(STEPS) மே 1 தொழிலாளர் தினத்தன்று 2000 பெப்சி குடும்பங்களுக்கு உதவி*

சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கம், மே 1 தொழிலாளர் தினமான இன்று,  கொரோனா பெருந்தொற்றால் படப்படிப்பு வேலைகளின்றி தவித்து வரும் திரைப்படத் தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் சுமார் 2000 குடும்பங்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி மற்றும் மளிகை பொருட்களை தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளன (பெப்சி) நிர்வாகிகளிடம் ஒப்படைத்திருக்கிறது. அப்போது சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் சுஜாதா விஜயகுமார், பொது செயலாளர் குஷ்பு சுந்தர், பொருளாளர் டி ஆர் பாலேஷ்வர் ஆகியோர் உடனிருந்தனர். 

மேலும், பெப்சி உறுப்பினர்களுக்கு உதவிடும் நோக்கில் வெகு விரைவிலேயே நிதியுதவி அளிக்கவிருப்பதாகவும், அதற்கான மும்முரமான வேலைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment