Featured post

கே.வி.என். புரொடக்ஷன்ஸ் மற்றும் தெஸ்பியன் ஃபிலிம்ஸ் இணையும் முதல் திரைப்படம்

 *கே.வி.என். புரொடக்ஷன்ஸ் மற்றும் தெஸ்பியன் ஃபிலிம்ஸ் இணையும் முதல் திரைப்படம்* *மஞ்சும்மல் பாய்ஸ் இயக்குநரின் அடுத்தப் படம் பாலன்* மலையாள த...

Monday, 18 August 2025

கே.வி.என். புரொடக்ஷன்ஸ் மற்றும் தெஸ்பியன் ஃபிலிம்ஸ் இணையும் முதல் திரைப்படம்

 *கே.வி.என். புரொடக்ஷன்ஸ் மற்றும் தெஸ்பியன் ஃபிலிம்ஸ் இணையும் முதல் திரைப்படம்*

*மஞ்சும்மல் பாய்ஸ் இயக்குநரின் அடுத்தப் படம் பாலன்*




மலையாள திரையுலகில் இயக்குநர் சிதம்பரம் (மஞ்சும்மல் பாய்ஸ்) மற்றும் எழுத்தாளர் ஜித்து மாதவன் (ஆவேஷம்) ஆகியோர் இணையும் திரைப்படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்த படத்தின் மூலம் திரு.வெங்கட் கே நாராயணா சார்பில் கே.வி.என்.புரொடக்ஷன்ஸ் மற்றும் திருமதி ஷைலஜா தேசாய் ஃபென் சார்பில் தெஸ்பியன் ஃபிலிம்ஸ் இணைந்துள்ளன.


பிரம்மாண்டமாக உருவாக இருக்கும் இந்தப் படம் குறித்த புதிய அப்டேட் தற்போது வெளியிடப்பட்டு இருக்கிறது. அதன்படி கே.வி.என். புரொடக்ஷன்ஸ் மற்றும் தெஸ்பியன் ஃபிலிம்ஸ் இணையும் முதல் திரைப்படம் "பாலன்" என்ற பெயரில் உருவாகிறது என்றும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்று அதிகாரப்பூர்வமாக தொடங்கியதாகவும் படக்குழு அறிவித்து இருக்கிறது.


இந்தப் படத்திற்கு ஷைஜூ காலித் ஒளிப்பதிவு பணிகளையும், இசையமைப்பாளராக சுஷின் ஷியாம் மற்றும் படத்தொகுப்பு பணிகளை விவேக் ஹர்ஷன் மேற்கொள்கின்றனர். "பாலன்" திரைப்படம் மூலம் கே.வி.என். புரொடக்ஷன்ஸ் நிறுவனம் மலையாள திரையுலகில் களமிறங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


மலையாளம் மட்டுமின்றி 2025 ஆண்டிலேயே கே.வி.என். புரொடக்ஷன்ஸ் நிறுவனம் கே.டி. மூலம் கன்னட திரையுலகிலும், யஷ் நடிக்கும் டாக்சிக் திரைப்படம், தமிழில் நடிகர் விஜய்யின் ஜனநாயகன் மற்றும் இந்தி திரையுலகில் பிரியதர்ஷனின் திரில்லர் திரைப்படம் ஆகியவற்றை தயாரித்து வருகிறது.

No comments:

Post a Comment