Featured post

என் முழு உடலையும் ஆக்கப்பூர்வமான ஏதோவொன்றில் ஈடுபடுத்துவதை நான்

 *"என் முழு உடலையும் ஆக்கப்பூர்வமான ஏதோவொன்றில் ஈடுபடுத்துவதை நான் ரசிக்கிறேன் "- 'பிரிடேட்டர்: பேட்லேண்ட்ஸ்' திரைப்படத்தி...

Tuesday, 1 September 2020

முத்திரை பதிக்கும் முத்தான "நாயகி"

முத்திரை பதிக்கும் முத்தான "நாயகி" வித்யா பிரதீப்!

 'சைவம்', 'பசங்க2', 'அச்சமின்றி', 'இரவுக்கு ஆயிரம் கண்கள்',  'களரி',  'மாரி2', 'தடம்', 'பொன்மகள் வந்தாள்' போன்ற  படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து கவனம் ஈர்த்த நடிகை வித்யா பிரதீப்.






இவர் கதாநாயகியாக நடித்த 'நாயகி' என்ற தொலைக்காட்சித் தொடர் பெரும் வெற்றி பெற்றதுடன், இவரது நடிப்புத் திறனையும் நன்கு வெளிப்படுத்தியது. இந்தத் தொடர் மூலம் இல்லத்தரசிகளின் உள்ளங்களை கொள்ளை கொண்ட வித்யா பிரதீப், 'தடம்' படத்தில் ஏற்று நடித்த மலர்விழி பாத்திரம் மூலம் இளைஞர்களின் உள்ளங்களையும் கவர்ந்து, மிக இளம் வயதில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருக்கிறார்.

"ஏற்கும் வேடம் எதுவாக இருந்தாலும் அதில் முத்திரை பதிக்கும் வண்ணம் நடிக்க வேண்டும் என்பதே என் குறிக்கோள்". என்று சொல்லும் வித்யா பிரதீப் நடித்த திரைப்படங்கள் விரைவில் ஒன்றன்பின் ஒன்றாக வெளிவர இருக்கின்றன.

No comments:

Post a Comment