Featured post

Teja Sajja Starrer Mirai Crosses 100 Cr Gross Worldwide, Breaches $2 Million Mark In USA

 *Teja Sajja Starrer Mirai Crosses 100 Cr Gross Worldwide, Breaches $2 Million Mark In USA* Teja Sajja is proving true to his super hero ima...

Wednesday, 2 September 2020

சர்வதேச திரைப்பட விழாக்களில்

சர்வதேச திரைப்பட விழாக்களில்
டாக்டர் மாறனின் ‘பச்சை விளக்கு’ திரைப்படம்


டாக்டர் மாறன் இயக்கி, நடித்துள்ள ‘பச்சை விளக்கு’ திரைப்படம் சிறந்த சமூக விழிப்புணர்வுக்கான படம் என்று பாராட்டுகளை பெற்றிருந்தது.  இந்நிலையில் இந்த படம் சர்வதேச அளவில் நடைபெற்ற உலக திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு பல பாராட்டுகளைப் பெற்றுள்ளது.
பூடான் நாட்டிலுள்ள பரோ (Paro) என்ற இடத்தில் நடைபெற்ற ட்ராக் (Druk International Film Festival) சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொண்டு சிறந்த சமூக விழிப்புணர்வுக்கான படம் என்ற விருதைப் பெற்றுள்ளது, ‘பச்சை விளக்கு’ திரைப்படம்.
இந்தியாவில் நடைபெற்ற ட்ரிப்ள் சர்வதேச திரைப்பட விழாவில் (Tripvill International Film Festival) சிறந்த படத்திற்கான விருதினை வென்றுள்ளது.






நியூயார்க் மூவி அவார்ட்ஸ் மற்றும் அப்ரோனடட் (Aphrodite) திரைப்பட விழாவிலும் இறுதித் தேர்விலும் (Finalist), மேலும் லண்டனில் CKF சர்வதேச திரைப்பட விழா, இத்தாலியில் நடைபெறும் மிகப்பெரிய சர்வதேச திரைப்பட விழாவான ப்ளாரன்ஸ் (FLERANCE) திரைப்பட விழா, அமெரிக்காவில் கோல்டன் பிக்சர்ஸ் திரைப்பட விழா, சவுத் பிலிம் அண்ட் அர்ட்ஸ் அகடமி விழா மற்றும் பர்ஸ்ட் டைம் பிலிம் மேக்கர்ஸ் விழாவிலும் அதிகாரப்பூர்வ தேர்வாக (Official Selection)  கலந்துகொண்டு பெருமை சேர்த்துள்ளது, ‘பச்சை விளக்கு’ திரைப்படம்.

பெண்களை ஏமாற்றி காதலிப்பது போல நடித்து ஆபாச படம் எடுத்து அதை வைத்து பெற்றோர்களிடம் மிரட்டி பணம் பறிக்கும் கும்பலை தோலுரித்து காட்டும் விழிப்புணர்வு படமாக பச்சை விளக்கும் படம் உருவாகி இருந்தது.

எந்தவித பிரம்மாண்ட பின்னணியும் இல்லாமல், சாதாரணமாக எடுக்கப்பட்ட ‘பச்சை விளக்கு’ படத்துக்கு உலக அளவில் அங்கீகாரம் கிடைத்திருப்பது பெரும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்று தெரிவித்துள்ள இயக்குநர் டாக்டர் மாறன், முதல் முயற்சிக்கு கிடைத்திருக்கும் இந்தப் பாராட்டு இன்னும் நல்ல படங்களை தருவதற்கு நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார்.

No comments:

Post a Comment