Featured post

Heartfelt greetings and gratitude to my beloved fans, my dear friends, and the general public

 Heartfelt greetings and gratitude to my beloved fans, my dear friends, and the general public  Today sept 10th i complete 21 years of my jo...

Sunday, 6 September 2020

அப்சல்யூட் பிக்சர்ஸின் நல்வாழ்த்துகள்!'

அப்சல்யூட் பிக்சர்ஸின் நல்வாழ்த்துகள்!'

'அதிமேதாவிகள்' படத்தைத் தயாரிக்கும் மால்கம் ஆகிய நான் முதற்கண் அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். திரைப்படத் தொழில் உட்பட அனைத்து தொழில்களையும் முடக்கி, அனைவரையும் மனச்சோர்வுக்குள்ளாக்கியிருக்கிறது சர்வதேச பரவலனான இந்த பெருந்தொற்று நோய். விரைவில் ஒவ்வொருவரும் இயல்பு நிலையை அடைந்து, தங்கள் வழக்கமான வாழ்வுக்குத் திரும்ப என் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மக்களை நாம் உற்சாகப்படுத்த ஏதேனும் செய்வோம்...

'அதி மேதாவிகள்' படத்தின் படப்பிடிப்பை முழுமையாகப் பூர்த்தி செய்து, பின் தயாரிப்புப் பணிகளில்  தற்போது நாங்கள் இருக்கிறோம். முழுமையான ஊரடங்கு காரணமாக 'அதிமேதாவிகள்' படத்தின் இசை வெளியீட்டு விழாவை எங்களால் சிறப்புற நடத்த இயலாமல் போய்விட்டது. பொதுவாக படத்தின் அனைத்து பாடல்களும் ஒன்றாகவே வெளியிடப்பட்டு, இறுதியில் சில மட்டுமே ரீ-மிக்ஸ் செய்யப்படும். ஆனால் எங்கள் படத்தின் ஒரு பாடலை மட்டும் ரீ-மிக்ஸ் செய்து வெளியிடும் வித்தியாசமான திட்டத்தில் நான் இறங்கியிருக்கிறேன். நகைச்சுவையான இந்த பாடல் வரிகளையும், அதற்கான நடன அசைவுகளையும் நீங்கள் வெகுவாக ரசிப்பீர்கள்.

சிறப்பான முறையில் ரீ-மிக்ஸ் செய்யும் எனது டி.ஜே.நண்பர்கள் ஏ-சென் மற்றும் மஜார் ஆகிய இருவரும்தான் இந்த யோசனையை எனக்குச் சொன்னார்கள். உடனடியாக இது குறித்து அருமையானதொரு கருத்துருவுக்கு செயல் வடிவமும் கொடுத்தார்கள். நாட்டுப்புறப்பாடலின் சாயலில் பாடகர் அந்தோணி தாசனை வைத்து இந்தப் பாடலை இனிமையான கிராமிய மணத்துடன் ரீ-மிக்ஸ் செய்து விட்டனர் டி.ஜே.நண்பர்கள்.

படத்தின் இயக்குநர் ஆர்.டி.எம். மற்றும் நாயகன் சுரேஷ் ரவி இருவரும் மறு சிந்தனையே இன்றி இந்த ரீ-மிக்ஸ் திட்டத்தை மகிழ்வுடன் ஏற்றுக்கொண்டு சிறப்பான முறையில் இதைக் கொண்டு வருகின்றனர். படத்தின் பிரதான பாத்திரங்களுக்கிடையே உள்ள நட்பை விளக்கும் வகையிலான கேலிச் சித்திர வடிவிலான படங்கள், பாடல் வரிகளுக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் அமைந்திருக்கின்றன.

அப்சல்யூட் பிக்சர்ஸ் என்ற எங்கள் நிறுவனத்தின் யு-ட்யூப் சேனலில் இன்று (2020, ஆகஸ்ட் முதல் தேதி)  மாலை ஆறு மணிக்கு வெளியாகிறது. பாடலைப் பார்த்து மகிழுங்கள்...

தைரியமாக இருங்கள் ... சமூக இடைவெளியுடன் தனித்திருங்கள்... விழிப்புடன் இருங்கள்...நல்வாழ்த்துகள்.

No comments:

Post a Comment